மதுரைக்காரருக்கு ரூ.81 லட்சம் நிவாரணம்.. ‛அடிமை' என பணி நீக்கிய மேனேஜருக்கு ஆப்பு! கோர்ட் அதிரடி
லண்டன்: மதுரையை பூர்வீமாக கொண்ட மாதேஷ் ரவிச்சந்திரன் தன்னை அடிமை என்று தரக்குறைவாக பேசி பணி நீக்கம் செய்த லண்டன் கேஎப்சி மேனேஜருக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் மாதேஷ் ரவிச்சந்திரனுக்கு ரூ.81 லட்சத்தை நிவாரணமாக வழங்க அதிரடியாக உத்தரவிட்டது. இந்த வழக்கின் பின்னணி பற்றி இங்கு பார்க்கலாம்.

மதுரையை பூர்வீகமாக கொண்டவர் மாதேஷ் ரவிச்சந்திரன். இவர் லண்டனில் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள வெஸ்ட் விகம் பகுதியில் உள்ள கேஎப்சி உணவகத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார்.
அந்த கேஎப்சி உணவகத்தில் இலங்கையை பூர்வீகமாக கொண்ட கஜன் என்பவர் மேனேஜராக பணியாற்றி வந்தார். இந்த உணவகத்தில் மாதேஷ் ரவிச்சந்திரன் உடன் இலங்கை தமிழர்களும் பணியாற்றி வந்தனர்.
கடந்த 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் மாதேஷ் ரவிச்சந்திரன் பணிக்கு சேர்ந்தார். மேனேஜர் கஜன் தான் இண்டர்வியூ வைத்து அவரை பணிக்கு சேர்ந்தார். ஜூலை மாதம் மாதேஷ் ரவிச்சந்திரனுக்கு கூடுதலாக பணி நேரம் வழங்கப்பட்டுள்ளது. அதோடு விடுமுறை வழங்குவது கிடையாது. இதுபற்றி மாதேஷ் ரவிச்சந்திரன் கேட்டதற்கு மேனேஜர் கஜன் திமிராக பேசி உள்ளார். ‛‛நீ எல்லாம் அடிமை. இந்தியர்கள் மோசடிக்காரர்கள்'' என்று இனபாகுபாட்டுடன் நடந்து கொண்டுள்ளார்.
இலங்கை தமிழர்களுக்கு விடுப்பு வழங்கியதோடு, மாதேஷ் ரவிச்சந்திரனுக்கு விடுப்பு வழங்க மறுத்துள்ளார். இதனால் அவர் மனஉளைச்சலுக்கு ஆளானார். இதையடுத்து மாதேஷ் ரவிச்சந்திரன் பணியை விட்டு நிற்பதாக கூறியுள்ளார். முறைப்படி பணியில் இருந்து நின்றால் பணபலன், ஈட்டிய விடுப்புக்கான சம்பளம் உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும். இதனால் மேனேஜர் கஜன், அவரை பணியில் இருந்து அதிரடியாக நீக்கி உள்ளார்.
மாதேஷ் ரவிச்சந்திரன் நோட்டீஸ் பீரியட்டாக ஒரு வாரம் பணியாற்றியபோது அவர் பணியில் இருந்து நீக்கப்பட்டார். மேலும் அவருக்கான பண பலன்கள் வழங்கப்படவில்லை. இதனால் மாதேஷ் ரவிச்சந்திரன் அங்குள்ள தீர்ப்பாயத்தில் செப்டம்பர் மாதம் வழங்கு தொடர்ந்தார். மொத்தம் 66,800 பவுண்ட்டை நிவாரணமாக வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
வழக்கை தீர்ப்பாயத்தின் நீதிபதி பால் அபோர்ட் விசாரித்தார். அப்போது மாதேஷ் ரவிச்சந்திரனின் பணி நீக்கம் சட்டவிரோதமானது. அதோடு மேனேஜர் இனபாகுபாட்டுடன் நடந்து கொண்டதை உறுதி செய்தார். மேலும் 60 ஆயிரம் பவுண்ட்டை நிவாரணமாக வழங்க உத்தரவு பிறப்பித்தார். இதன் இந்திய மதிப்பு ரூ.81 லட்சமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications