"உடலுறவு.." அதுவும் பொது இடத்தில்.. பல நூறு பெண்களிடம் அத்துமீறிய இளைஞர்! பகீர் சம்பவம்
லண்டன்: பிரிட்டன் நாட்டை சேர்ந்த 34 வயது ஆணுக்குப் பொதுவெளியில் பெண்களிடம் பேசவே தடை விதித்துள்ளனர். எதற்காக அவரை தடை விதித்துள்ளனர் என்பது குறித்துப் பார்க்கலாம்.
இணையம் வந்த உடன் பல சேனல்கள் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. குறிப்பாக ரோடுகளில் செல்லும் மக்களிடம் மைக்கை நீட்டிப் பல விஷயங்கள் குறித்து கருத்துக் கேட்பதும் அதிகரித்தே வருகிறது.

அதிலும் வெளிநாடுகளில் சில சேனல்கள் பொது இடங்களில் உள்ள மக்களிடம் பாலியல் சார்ந்த கேள்விகளைக் கேட்கிறார்கள். இது தொடர்பான வீடியோ இணையத்தில் டிரெண்டாவதால் பலரும் இதுபோல செய்யத் தொடங்கியுள்ளனர்.
இதனிடையே பிரிட்டன் நாட்டை சேர்ந்த 34 வயது ஆண் பொது இடங்களில் எந்த ஒரு பெண்ணிடமும் பாலியல் ரீதியான கேட்விகளை கேட்கவே அல்லது கருத்துகளையே கூறக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது..
அங்குள்ள இளம் பெண்களிடம் பாலியல் ரீதியாகப் பல முறை தகாத கருத்துக்களைப் பலமுறை கூறி சர்ச்சையில் சிக்கியவர் பிரிட்டனைச் சேர்ந்த ஜேக்கப் அலர்சன்.
ஜேக்கப் அலர்சன் பெண்களிடம் அத்துமீறிப் பல பாலியல் கேள்விகளைக் கேட்பாராம். அதற்குப் பெண்கள் பதிலளிக்க மறுத்தாலும் அதை ஏற்றுக் கொள்ள மாட்டாராம்.. கடைகள், கஃபேக்களில் இருக்கும் இளம் பெண்களை விடாமல் துரத்தித் துரத்தித் துன்புறுத்தும் வகையில் கேள்விகளைக் கேட்பாராம்.
இதன் காரணமாகப் பல பெண்களும் போலீசாரிடம் கூட சென்று புகார் அளித்துள்ளனர். அவர் மீது நடவடிக்கை எடுத்த போலீசார் செஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், அவரை ஆஜர் செய்துள்ளனர். அங்கே வழக்கை விசாரித்த நீதிதி, ஐந்தாண்டு அவரது குற்றவியல் நடத்தை கண்காணிக்க உத்தரவிட்டுள்ளனர்.
அதாவது நீதிமன்ற உத்தரவின்டி, அவர் இனிமேல் வேறு எந்தவொரு பெண்களிடம் இதுபோல அத்துமீறி கேள்விகளைக் கேட்கக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளனர். அவர் நிபந்தனைகளுக்கு இணங்க மறுத்து, உள்ளூர் பெண்களைத் தொடர்ந்து துன்புறுத்தினால், அவர் ஜெயில் தண்டையை அனுபவிக்க நேரிடும் என்றும் நீதிமன்றம் எச்சரித்துள்ளனர்.
அவர் தனது தீர்ப்பில், "இங்கிலாந்தில் பொது இடத்தில் எந்தவொரு பெண்ணிடமும் சென்று வெளிப்படையாக அத்துமீறி பாலியல் கேள்விகளைக் கேட்டு தொல்லை கொடுத்து மன உளைச்சலை ஏற்படுத்தும் வகையில், செயல்படும் இவரைத் தடை விதிக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
பல பொது இடங்களில் இப்படி அத்துமீறி கேள்வி கேட்டுள்ள நிலையில், அவர் அங்கே செல்லவே தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர் மீது பல பெண்கள் புகார் அளித்துள்ள நிலையில், அவர்களையும் எங்கும் சந்திக்கக் கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு பிரிட்டன் பெண்கள் பாதுகாப்பா இருக்க உதவும் என்றும் இதையும் தாண்டி அவர் பெண்களிடம் அத்துமீறினால், போலீசாரை பெண்கள் தொடர்பு கொள்ளலாம் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications