எலிசபெத் ராணியின் இறப்பை முன்பே கணித்த மர்ம நபர்? அப்போ "அந்த" கணிப்பும் பலிக்குமா? உண்மை என்ன?
லண்டன்: இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் மரணத்தை முன்கூட்டியே கணித்த மர்ம நபர் கணித்துள்ள சம்பவம் வைரலாகி வருகிறது.
இங்கிலாந்து ராணி 2ஆம் எலிசபெத் கடந்த 1952 ஆம் ஆண்டு தனது 26 வயதில் ராணியாக முடிசூட்டிக் கொண்டார். அன்று முதல் 70 ஆண்டுகளாக ராணியாக இருந்தார்.
மகாராணியாக இருந்தாலும் எளிமையான பெண்மணி என பெயரெடுத்துள்ளார். இவரால் அண்மைக்காலமாக நடக்க முடியாமல் நிற்க முடியாமல் வயோதிக பிரச்சினை காரணமாக அவதிப்பட்டு வந்தார்.

கோடை
இந்த நிலையில் அவர் கோடையை கழிக்க ஸ்காட்லாந்து சென்றிருந்த போது அங்கிருந்த பால்மோரல் அரண்மனையில் அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அரண்மனையின் அதிகாரப்பூர்வ மருத்துவர்கள் ராணிக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர்.

ராணி மரணம்
எனினும் அவர் சிகிச்சை பலனின்றி கடந்த 8 ஆம் தேதி இரவு காலமானார். ராணியின் இறப்பால் பிரிட்டனில் சோகம் நிலவி வருகிறது. இந்த நிலையில் செப்டம்பர் 8 ஆம் தேதி ராணி எலிசபெத் 2 இறந்துவிடுவார் என்ற மர்மநபரின் ட்விட்டர் போஸ்ட் தற்போது வைரலாகி வருகிறது.

உலகமே அழிந்துவிடுமா
அதாவது அந்த நெட்டிசன் ராணி செப்டம்பர் 8 ஆம் தேதி இறந்துவிடுவார் என தனது ட்விட்டில் கடந்த பிப்ரவரி 4ஆம் தேதியே தெரிவித்துள்ளார். இது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதே போல் இந்த நபர் வரும் 2062 ஆம் ஆண்டு மார்ச் 17 ஆம் தேதி உலகமே அழிந்துவிடும் என இந்த ஆண்டு மே 25 ஆம் தேதியே ட்வீட் போட்டுள்ளதாக பலருக்கு பீதியை கிளப்பியுள்ளது.

எல்லாம் ஏமாற்று வேலை
இந்த நிலையில்தான் நெட்டிசன் ஒரு கூறுகையில் ராணி இறந்துவிடுவார் என முன்கூட்டியே கணித்ததாக கூறும் நபர் தனது ட்விட்டர் அக்கவுண்டை நேற்றுவரை பிரைவேட் ஆப்ஷனில்தான் வைத்திருந்தார். ராணி இறப்பு குறித்து ஒவ்வொரு ஆண்டாக இவர் யூகத்தின் அடிப்படையில் போட்டு வந்துள்ளார். ராணி உண்மையில் இறந்தவுடன், தவறான தேதிகளை டெலிட் செய்துவிட்டு உண்மையான தேதி போட்டிருந்த ட்வீட்டை மட்டும் பப்ளிக் செய்துள்ளார். இவர் சரியாக கணித்ததாக மற்றவர்கள் எண்ண வேண்டும் என்பதற்காகவே அவர் இவ்வாறு செய்துள்ளார் என்கிறார் இந்த நெட்டிசன்.

உலகை ஏமாற்றுகிறார்
மர்ம நபரின் ட்வீட் கடந்த 8 ஆம் தேதி அதாவது ராணி இறந்த பிறகுதான் உருவாக்கப்பட்டது என வே பேக் மெஷின் கூறுகிறது என்கிறார் இந்த வலைஞர். செப்டம்பர் 8 ஆம் தேதி ட்வீட் போட்டு அதை பிப்ரவரி 4 போல் காட்டிக் கொண்ட நபர் உலகையே தனது ட்வீட்டால் ஏமாற்றுகிறார். அவரை யாரும் நம்பாதீர்கள் என மற்றொரு நெட்டிசன் கேட்டுக் கொண்டுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications