ஓவரா இருக்கே.. பெண் வாடிக்கையாளர் கண்முன் உணவை சாப்பிட்ட டெலிவரி பாய்!
லண்டன் : வாடிக்கையாளர் ஆர்டர் செய்த உணவை, அவரின் வீட்டு முன்பே அமர்ந்து மெக்டொனால்டு நிறுவன டெலிவரி பாய் சாப்பிட்ட வீடியோ தான் சமூகவலைதளங்களில் இன்று அதிகமாக பகிரப்பட்டுள்ளது.
லண்டனில் உணவு டெலிவரி செய்யும் பிரபல நிறுவனமான மெக்டொனால்டு நிறுவனத்தில் பெண் ஒருவர் உணவு ஆர்டர் செய்துள்ளார். உணவை டெலிவரி செய்வதற்காக வாடிக்கையாளரின் வீடு வரை எடுத்து வந்த டெலிவரிபாய், அது தவறான முகவரி என்று கூறி ஆர்டரை தானே ரத்து செய்துள்ளார். பிறகு வாடிக்கையாளரின் வீட்டின் முன் அமர்ந்து தானே அந்த உணவை சாப்பிட்டுள்ளார்.

வீட்டிலிருந்து வெளியே வந்த அந்த பெண் வாடிக்கையாளர் இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக தனது மொபைலில் இந்த காட்சியை படம்பிடித்து, அதனை தனது சகோதரரிடம் கொடுத்து டுவிட்டரில் பதிவிட செய்துள்ளார். சமூக வலைதளங்கள் மட்டுமின்றி பிற தளங்களிலும் இந்த வீடியோ வைரலாகி வருகிறது. இச்சம்பவத்தை கேள்வி கேட்டு பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
இதே போன்றதொரு சம்பவம் சமீபத்திலும் நடந்துள்ளதால் இது தொடர்பாக மெக்டெனால்டு நிறுவனத்திடம் புகார்கள் குவிந்து வருகின்றன. இது குறித்து நடவடிக்கை எடுப்பதாகவும், அந்த வாடிக்கையாளருக்கு அவரது பணம் திருப்பி அளிக்கப்படும் எனவும் மெக்டொனால்டு நிறுவனம் உறுதி அளித்துள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன் இந்தியாவின் பல பகுதிகளிலும், டெலிவரி பாய், ஆர்டர் செய்த உணவில் பாதியை தான் சாப்பிட்டு விட்டு, மீதியை வாடிக்கையாளருக்கு டெலிவரி செய்த வீடியோ வேகமாக பரவியது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications