அடுத்த குட்டி இளவரசர் ரெடி.. மேகன் கர்ப்பம்.. 'ரெண்டு போதும் சாமி' - ஹாரி கிண்டல்
இங்கிலாந்து: ஹாரி - மேகன் தம்பதி தங்களது இரண்டாவது குழந்தையை வரவேற்க தயாராகி வருகிறார்கள்.
இங்கிலாந்து அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் ஹாரியும், முன்னாள் அமெரிக்க நடிகையுமான மேகனும் காதலித்து, அரச முறைப்படி 2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள்.
எனினும், இங்கிலாந்து அரசு மற்றும் அதிகாரம் மீது பற்றில்லாமல் இருந்த ஹாரி -மேகன் தம்பதி, குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் என்ற பொறுப்பிலிருந்து விலகுவதாக கடந்த ஆண்டு அறிவித்தது.
தற்போது தெற்கு கலிஃபோர்னியாவில் வசித்து வரும் இந்த தம்பதிக்கு ஆர்ச்சி எனும் 2 வயது மகன் உள்ளார். இந்நிலையில், மேகன் மீண்டும் கர்ப்பமடைந்துள்ளார்.

கொண்டாட்டத்தில் தம்பதி
இதுகுறித்து ஹாரி -மேகன் தம்பதியின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட அறிவிப்பில், "ஆர்ச்சி அண்ணனாக போகிறார் என்பதை நாங்கள் உறுதிப்படுத்துகிறோம். Sussex -ன் இளவரசரும், இளவரசியும் தங்களது இரண்டாவது குழந்தையை வரவேற்க பேராவலோடு உள்ளனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கணவர் மடியில் மனைவி
இதுகுறித்த புகைப்படங்களும் வெளியாகியுள்ளன. ஒரு அழகிய பூங்காவில், கர்ப்பமாக இருக்கும் மேகன், தன் கணவர் மடியில் படுத்திருக்க, அவரது தலையை கணவர் ஹாரி அன்போடு ஏந்துவது போன்ற புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

வாழ்த்துகள்
இதுகுறித்து பக்கிங்காம் அரண்மனை செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "Duke இளவரசர், வேல்ஸ் இளவரசர் என்று ஒட்டுமொத்த அரச குடும்பமும் தற்போது மகிழ்ச்சியில் உள்ளனர். தவிர, ஹாரி - மேகன் தம்பதிக்கு தங்கள் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிகம் இரண்டு தான்
ஹாரி - மேகன் தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்த இங்கிலாந்து ஆய்வாளர் Jane Goodall கிண்டலாக, 'குழந்தைகள் போதும், அதிகம் வேண்டாம்' என்று சொல்ல, அதற்கு இளவரசர் ஹாரி, "அதிகபட்சம் இரண்டு.. அவ்வளவுதான்" என்று பதிலளித்துள்ளார்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications