ஒரே நாளில் 100 பேருடன் உடலுறவு கொண்ட பிரபல ஆபாச பட நடிகை கர்ப்பம்! அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்

Subscribe to Oneindia Tamil

லண்டன்: ஒரே நாளில் 100 பேருடன் உடலுறவு கொண்டு முதலில் உலகையே திரும்பிப் பார்க்க வைத்தவர் 23 வயதே ஆன லில்லி. உலக சாதனை முயற்சி நடந்து மூன்று மாதங்களே ஆகும் நிலையில், திடீரென அவர் தான் கருவுற்று இருப்பதாக அறிவித்துள்ளார். இது இணையத்தில் பேசுபொருள் ஆகியுள்ளது. இது குறித்து நாம் பார்க்கலாம்.

பிரிட்டன் நாட்டை சேர்ந்த பிரபல ஆபாசப் பட நடிகை லில்லி பிலிப்ஸ். 23 வயதே ஆன லில்லியின் பெயர் கடந்த சில காலமாகவே தொடர்ச்சியாக இணையத்தில் அடிபட்டுக் கொண்டு இருக்கிறது.

england world offbeat

100 ஆண்களுடன் உடலுறவு

குறிப்பாகக் கடந்தாண்டு இறுதியில் அவர் வினோத சாதனை ஒன்றைப் படைத்திருந்தார். அதாவது ஒரே நாளில் 100 ஆண்களுடன் உடலுறவு கொண்டு அவர் சாதனை படைத்திருந்தார். இது சர்வதேச அளவில் பேசுபொருள் ஆனது. பலரும் அவரை இந்த சாதனை முயற்சியாக விமர்சித்தனர். குறுகிய நேரத்தில் இதுபோல அதிகப்படியான நபர்களுடன் உடலுறவு கொள்ளும் போது பாலியல் நோய்கள் பரவும் ஆபத்துகளும் இருப்பதாகப் பலரும் எச்சரித்தனர்.

இந்த விமர்சனங்கள் அதிகரித்த நிலையில், வேறு வழியின்றி அவர் தனது பாலியல் நோய் சோதனை முடிவுகளையும் இணையத்தில் வெளியிட வேண்டி இருந்தது. எஸ்டிடி எனப்படும் பாலியல் நோய்களைக் கண்டறியும் டெஸ்ட்டில் தனக்கு கிளமிடியா, கோனோரியா, சிபிலிஸ் மற்றும் எச்.ஐ.வி என எந்தவொரு பாதிப்பும் இல்லை என அவர் பதிவிட்டிருந்தார். அதன் பிறகே சற்று சர்ச்சை ஓய்ந்து இருந்தது.

அடுத்த கட்ட சாதனை

ஆனால், அடுத்து சில நாட்களில் அவர் வேறு ஒரு வெடியைப் போட்டார். அதாவது அடுத்த கட்டமாக 1000 ஆண்களுடன் உடலுறவு கொண்டு சாதனை படைக்க உள்ளதாக அவர் அறிவித்திருந்தார். அது உலகளவில் பேசுபொருள் ஆனது. சிலர் இது தேவையற்ற ஆபத்தான செயல் என்றும் எச்சரித்து வந்தனர். இருப்பினும், அது குறித்தெல்லாம் கண்டு கொள்ளாமல் லில்லி தனது உலக சாதனை முயற்சிக்கு ரெடியாகிக்கொண்டு இருந்தார். ஜனவரி அல்லது பிப்ரவரி மாதம் அவர் இந்த சாதனையைச் செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது.

திடீர் கர்ப்பம்

இருப்பினும், அது குறித்த அறிவிப்பு எதுவும் வெளியாகாமல் இருந்தது. ஏன் அவர் திடீரென அமைதியானார் என்பதற்கு இப்போது தான் பதில் கிடைத்துள்ளது. அதாவது அவர் இப்போது கருவுற்று இருக்கிறாராம். இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ மற்றும் போட்டோவை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் தான் அவர் தனது கர்ப்பத்தை அறிவித்தார். மேலும், கர்ப்ப பரிசோதனையில் (pregancy test) பாசிட்டிவ் முடிவு கிடைத்துள்ளதையும் போட்டோவாக எடுத்து அவர் பதிவிட்டுள்ளார்.

விளக்கம் இல்லை

மேலும், அவர் மற்றொரு போட்டோவையும் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கருவுற்று இருப்பது தெளிவாகத் தெரிகிறது. அதேநேரம் எத்தனை மாதங்கள் கர்ப்பம் என்ற தகவலை அவர் பகிரவில்லை. மேலும், ஒரே நாளில் 100 பேருடன் உடலுறவு கொண்ட சாதனை நிகழ்வின் போது கருவுற்றாரா இல்லை அதற்கும் இதற்கும் தொடர்பு இல்லையா என எந்தவொரு விளக்கத்தையும் அவரது தரப்பு அளிக்கவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+