லண்டன் சென்ற முதல்வர் பழனிச்சாமி.. விமான நிலையத்திலேயே நடந்த நீட் போராட்டம்!
லண்டன் விமான நிலையத்தில், நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Recommended Video
லண்டன்: லண்டன் விமான நிலையத்தில், நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
முதல்வர் பழனிச்சாமி முதல்முறையாக மூன்று நாடுகளுக்கு இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். மொத்தம் 14 நாட்கள் அவர் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்காக நேற்று காலை அவர் சென்னையில் இருந்து லண்டன் புறப்பட்டு சென்றார்.

இந்த நிலையில் லண்டன் விமான நிலையத்தில், நேற்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் இவர்கள் முதல்வருக்கு எதிராக பரப்புரை ஆர்ப்பாட்டம் செய்தனர்.
புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், நீட் தேர்வை தமிழகத்தில் நுழையவிட்டது ஆகியவற்றை கண்டித்தும் தமிழக அரசுக்கு எதிராக பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டத்தை சேர்ந்தவர்கள் போராட்டம் செய்தனர்.

அதே சமயம் முதல்வரையும், சுகாதாரத்துறை அமைச்சரையும் வரவேற்க சிலர் காத்திருந்தனர். எல்லா பயணிகளும் வெளியேறிய பின் முதல்வர் கடைசியாக அங்கு வந்தார். முதல்வரும் சுகாதாரத்துறை அமைச்சரும் வேறு மாற்று வழியில் தனியாக அழைத்து செல்லப்பட்டனர்.
இதுகுறித்து கருத்து பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்ட அமைப்பினர், தமிழக அரசுக்கும் தமிழக முதல்வருக்கு எதிர்ப்பு தெரிவிக்கவே நாங்கள் வந்தோம். புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு, நீட் தேர்வு எதிர்ப்பு ஆகவே எங்கள் கோரிக்கை.
புதிய கல்விக் கொள்கையின் ஆபத்தை எடுத்துரைக்கவே இந்த போராட்டம் என்று குறிப்பிட்டனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications