மொத்தமா "கருப்பு!" விமானத்திற்கு வெறும் 20மீ தொலைவில் பறந்த ஏலியன்கள்? பைலட் அடுத்து செஞ்ச காரியம்
லண்டன்: விமானத்திற்கு மிக அருகே 20 மீட்டர் தொலைவில் பறந்த மர்மப் பொருளால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இது குறித்த தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது.
இந்த பிரபஞ்சத்தில் பூமியைப் போலவே நிச்சயம் மற்ற கிரகங்களிலும் உயிரினங்கள் வாழும் என்பதே பெரும்பாலான ஆய்வாளர்களின் கருத்து. இதனால் மற்ற கிரகங்கள் குறித்து தீவிர ஆய்வுகள் நடந்து வருகிறது.

குறிப்பாக அமெரிக்கா இது குறித்து தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். தொலைதூர கிரகங்களில் மனிதர்கள் வாழும் சூழல் இருக்கிறதா என்பதெல்லாம் குறித்து தீவிர ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் வேற்று கிரகவாசிகள் தொடர்பு கொள்ள முடியும் என அமெரிக்கா நம்புகிறது.
ஏலியன்: அதேநேரம் நமது பூமியிலும் அவ்வப்போது யுஎப்ஓ எனப்படும் பறக்கும் தட்டு நடமாட்டம் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகும். பொதுவாக இதுபோன்ற சம்பவங்கள் எல்லாம் அமெரிக்கா உட்பட மேற்குலக நாடுகளில் தான் அதிகம் பதிவு செய்யப்படும். இதற்கிடையே அப்படியொரு அதிர்ச்சி சம்பவம் தான் இப்போது அரங்கேறியுள்ளது.
லண்டன் ஸ்டான்ஸ்டெட் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட ரயான் ஏர் ஜெட் விமானம் கிளம்பிய சில நிமிடங்களில் ஏதோ ஒரு கருப்பு நிற பொருள் அந்த விமானத்திற்கு மிக அருகே சென்றுள்ளது. விமானம் நான்காயிரம் அடி உயரத்தில் சென்ற போது இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அப்போது விமானத்திற்கும் இந்த அடையாளம் தெரியாத பொருளுக்கும் இடையே "20 மீட்டர்" மட்டுமே இருந்துள்ளது.
யுஎப்ஓ ஏலியன்: அப்பகுதியில் நடந்த யுஎப்ஓ விமானம் குறித்த தகவல்களைக் கேட்டு விண்ணப்பித்த போது, இந்த தகவலை லண்டன் போலீசார் பகிர்ந்துள்ளனர். அதேநேரம் இது இப்போது நடந்த சம்பவம் இல்லை. கடந்த 2022இல் நடந்த சம்பவமாகும். இது குறித்து போலீசார் மேலும் கூறுகையில், "2022 ரயன் ஏர் விமானம் ஸ்டான்ஸ்டெட் விமான நிலையத்திலிருந்து மேலே சென்று கொண்டிருக்கும் போது 4000 அடி உயரத்தில் இது நடந்துள்ளது. அந்த பொருளை விவரித்த விமானி, அது 'கருப்பு' நிறத்தில் இருந்ததாக தெரிவித்தார்.
அது விமானத்திற்கு மிக அருகே, அதாவது 20 மீட்டர் தொலைவில் பறந்துள்ளது. அந்த விமானம் மணிக்கு 230 மைல் வேகத்தில் பயணித்த போது, அந்த மர்மப் பொருள் வடக்கிலிருந்து தெற்கு நோக்கிச் சென்றுள்ளது. அது டிரோனாக இருக்கலாம் எனக் கூறப்பட்டது. இருப்பினும், டிரோனாக இருந்தால் அதை ஏர்போர்ட் ரேடர் கண்டறிந்து இருக்கும். எனவே, அது டிரோனாக இருக்க வாய்ப்புகள் குறைவு" என்றார்.
அந்த மர்ம பொருளை பார்த்தவுடன் விமானி பாதுகாப்பு அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்துள்ளார். அதன் பிறகும் பதறாமல் அவர் விமானத்தை பத்திரமாக இயக்கியுள்ளார். இந்தச் சம்பவம் குறித்த விரிவான தகவல்களை போலீசார் பதிவு செய்துள்ளனர். இருப்பினும், அது என்ன பொருள் என்பது கடைசி வரை தெரியவே இல்லை.
மர்மப் பொருள்: மேலும், அந்தப் பகுதியில் பதிவு செய்யப்பட்ட வேறு யுஎஃப்ஓ தகவல்களும் அதில் இடம்பெற்றிருந்தன. இது தொடர்பாக கோல்செஸ்டரைச் சேர்ந்த நபர் அளித்த புகாரில், "அடையாளம் தெரியாத பறக்கும் பொருள் குறித்து நான் புகாரளிக்க விரும்புகிறேன். அந்த பொருள் ஓவல் வடிவத்தில் இருந்தது. வெளிப்புறம் அது மெட்டாலிக் கலரில் இருந்தது. அதில் விளக்குகள் அல்லது வெளிச்சம் எதுவும் இல்லை,
இந்தப் பொருள் எனது வீட்டின் தெற்கே கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி ஒரே நேர்கோட்டில் பயணித்துக் கொண்டிருந்தது. அது சுமார் 100 அடி உயரத்தில் பறந்தது போலவே இருந்தது. காற்று அடித்த போதிலும், அது ஒரு துளி கூட தனது திசையை மாற்றாமல் நேர்கோட்டில் பயணித்தது. இதை என்னால் நம்பவே முடியவில்லை" என்று அந்த நபர் குறிப்பிட்டுள்ளார். இந்தச் சம்பவம் கடந்த ஜூன் 5ஆம் தேதி நடந்துள்ளது.
இந்த இரு சம்பவங்களும் மனிதர்கள் மற்றும் ஏலியன்களுக்கும் இடையே நடந்த சந்திப்பாக இருக்கலாம் என்றும் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.இந்தச் சம்பவங்கள் சமூக வலைத்தளங்களில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications