சந்திரயான் 3 வெற்றி.. இடையில் புகுந்த "45 லட்சம் கோடியும் கோஹினூர் வைரமும்!" திடீரென டிரெண்டாவது ஏன்
லண்டன்: சந்திரயான் 3 நிலவில் வெற்றிகரமாகத் தரையிறங்கிய நிலையில், இது தொடர்பாகப் பிரிட்டன் செய்தியாளர் ஒருவர் வன்மத்தைக் கக்கியுள்ளார். அது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
சந்திரயான் 3 சாட்டிலைட் இப்போது வரலாற்றில் முக்கியமான சாதனையைப் படைத்துள்ளது. நேற்றைய தினம் சந்திரயான் 3 சாட்டிலைட் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியுள்ளது. அதுவும் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு என்ற சாதனையையும் இந்தியா படைத்துள்ளது.

நிலவு குறித்து நடத்தப்படும் ஆய்வுகளில் இது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. உலகின் பல்வேறு நாடுகளும் இந்தியாவின் இந்த சாதனையைப் பாராட்டி வரும் நிலையில், இணையத்தில் 48 லட்சம் கோடி டாலரும் கோகினூர் வைரமும் இப்போது திடீரென டிரெண்டாகிறது. அது ஏன் என்பதை பார்க்கலாம்.
சாதனை: சந்திரயான்-3 திட்டத்தின் மூலம் இந்தியா மகத்தான சாதனையைப் படைத்துள்ளது. இதற்கு உலகெங்கும் இருந்து பாராட்டுகள் குவிந்து வரும் போதிலும், பிரிட்டன் செய்தி தொகுப்பாளர் பேட்ரிக் கிறிஸ்டி கூறிய கருத்துகள் இணையத்தில் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. அவர் முதலில் இந்தியாவைப் பாராட்டி தனது செய்தியைத் தொடங்கினாலும் அதன் பிறகு இந்தியா குறித்து அவர் கூறிய கருத்துகள் தான் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. பலரும் அவரை இனவெறி கொண்ட நபர் எனச் சாடி வருகின்றனர்.
அதாவது பேட்ரிக் கிறிஸ்டி தனது செய்தியில், ""சந்திரனின் இருண்ட பகுதியில் இறங்கியதற்காக இந்தியாவை நான் வாழ்த்துகிறேன்.. அதேநேரம் 2016 முதல் 2021 வரை பிரிட்டன் இந்தியாவுக்கு அனுப்பிய 2.3 பில்லியன் பவுண்டுகள் உதவித் தொகையைத் திருப்பித் தருமாறு இந்தியாவிடம் கேட்டுக் கொள்கிறேன்.. அடுத்தாண்டு மேலும் 57 மில்லியன் பவுண்டுகளை தரவுள்ளோம்.. பிரிட்டன் மக்கள் இதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.. நிலவு குறித்த ஆய்வில் இந்தளவில் இருக்கும் நாட்டிற்கு நாம் ஏன் உதவித் தொகை தர வேண்டும்.

வன்மம்: சந்திரனின் இருண்ட பகுதியில் சாட்டிலைட்டை அனுப்ப உங்களால் முடிந்தால், நீங்கள் பணம் வேண்டும் என எங்களிடம் வரக் கூடாது.. இந்தியாவில் இப்போது 22.9 கோடி பேர் வறுமையில் வாடுகின்றனர். இந்தியா அளவுக்கு எங்கும் இந்தளவுக்கு வறுமையில் மக்கள் இல்லை என ஐநா கூறுகிறது.
இதே இந்தியா தான் 3.75 டிரில்லியன் டாலர் கொண்ட உலகின் 5வது பெரிய பொருளாதாரமாகவும் இருக்கிறது. வறுமையில் வாடும் இந்தியர்கள் பற்றி அவர்களின் சொந்த அரசே கவலைப்படாத போது நாம் ஏன் பணம் தர வேண்டும்" என்று அவர் கூறியிருந்தார். இந்த வீடியோ தான் இணையத்தில் டிரெண்டிங் ஆகி வருகிறது. இவரது வீடியோவை பகிர்ந்த பலரும் இவரை மிகக் கடுமையாகச் சாடி வருகின்றனர். இனவெறியுடன் அவர் இப்படிப் பேசியுள்ளதாகப் பலரும் விமர்சித்து வருகின்றனர்.
நெட்டிசன்கள் சாடல்: இது குறித்து நெட்டிசன் ஒருவர், "பொறாமையும் இனவெறியும் சேர்ந்த நபர் தான் நீங்கள்.. இந்தியாவில் இருந்து நீங்கள் 45 டிரில்லியன் டாலர்களுக்கு மேல் திருடி, நாட்டை உடைத்து அழுக்காக விட்டுவிட்டீர்கள்.. ஆனாலும் இந்தியா வென்று இன்று உங்கள் பொருளாதாரத்தை முந்தியுள்ளது. இந்தியாவில் இருந்து மட்டும் திருடிய 45 டிரில்லியன் டாலர்களை பிரிட்டன் என்ன செய்தது?
இப்போது உங்கள் பிரிட்டனை வறுமையில் தான் இருக்கிறது. கடந்த சில மாதங்களாகவே அங்கே பொருளாதார மந்த நிலை இருக்கிறது.. அத்தியாவசிய பொருட்களை வாங்கவே மக்கள் சிரமப்பட்டு வருகிறார்கள்.. இந்தியா உங்களிடம் ஒருபோதும் உதவி கேட்கவில்லை.. நீங்கள் உங்கள் நோக்கங்களுக்காக இந்தியாவில் உள்ள தொண்டு நிறுவனங்களுக்குப் பணத்தை அளிக்கிறீர்கள்.. அந்த பணத்தை எடுத்து முதலில் உங்கள் மக்களைக் காப்பாற்றுங்கள்" என்று அவர் சாடியுள்ளார். நெட்டிசன்கள் பலரும் இதே கருத்துகளைக் கூறியுள்ளனர்.
-
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications