ஆனாலும் இது ஓவர்.. கஷ்டமா போன மேட்ச்சை சட்டுன்னு இந்தியா பக்கம் கொண்டு வந்தது இந்த பெண்ணா?
Recommended Video
லண்டன்: அடடா.. நேற்று தென் ஆப்பிரிக்காவை இந்தியா வீழ்த்துவதற்கு, ஹிட்மேன் ரோகித் ஷர்மா விளாசிய செஞ்சுரி, சஹல் வீழ்த்திய 4 விக்கெட்டுகள் போன்றவைதான் காரணம் என்று நாம் நினைத்திருந்தோம். ஆனா இன்னொரு முக்கியமான ஆள்.. அதுவும் ஒரு பெண்மணிதான் காரணம்னு சொன்னா நம்ப முடியுதா.
அவர் வேறு யாருமல்ல நீத்தா அம்பானிதாங்க. தென் ஆப்பிரிக்கா 228 ரன்களை, இந்தியாவுக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்தபோதிலும், இந்திய அணி ஆரம்பத்தில் நிதானமாகவே ஆட்டத்தை தொடங்கியது.
உலக கோப்பையில் முதல் போட்டி என்பதோடு, அந்த மைதானத்தில் பந்துகள் சீரற்ற முறையில் எழுந்து வந்ததும், இதற்கு ஒரு காரணம்.

துரத்திய கேமராக்கள்
ஆனால், அப்போதுதான், கேமரா மேன்களின் கேமராக்கள், மைதானத்தின், பார்வையாளர்கள் மாடத்தை சுற்றி சுற்றி வந்தது. அங்கே ஒரு பெண்மணி, தனது கையில், இந்திய கொடியை பிடித்து அசைத்தபடி இருந்தார். அவரது கண்களில், இந்தியா வெல்ல வேண்டும் என்ற ஏக்கம் நிறைந்திருந்ததை கவனிக்க முடிந்தது.
அவர் வேறு யாருமல்ல, மும்பை இந்தியன்ஸ் அணி உரிமையாளர், நீத்தா அம்பானி. அவரை பார்த்த பிறகு, இந்திய ரசிகர்கள் முகத்தில் அப்படி ஒரு பூரிப்பு. நிம்மதி பெருமூச்சே விட்டுவிட்டனர் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
|
இவரு வேணும்
ஏம்ப்பா, ஹிட்மேன் ரோகித் இருக்காரு, தோனி, பாண்ட்யான்னு ஒரு படையே இருக்குது. ஆனா, நீத்தா அம்பானியை பார்த்து ஏன் ரசிகர்கள் நிம்மதியடைந்தார்கள் என்று கேட்கலாம். காரணம், இருக்குங்க. நீத்தா அம்பானி பிரார்த்தனை செய்தால் போதும், எப்படிப்பட்ட போட்டியும், அவர் சப்போர்ட் செய்யும் அணிக்கு வந்துவிடும் என உறுதியாக நம்புகிறார்கள் ரசிகர்கள்.
|
வந்துட்டாங்கல்ல
இப்படித்தான், ஐபிஎல் பைனல் போட்டியில், சிஎஸ்கே-மும்பை இந்தியன்ஸ் மோதியபோது, நகம் கடிக்கும் நிலை வந்தது. கடைசி ஓவரில் சீட் நுனிக்கு ரசிகர்கள் வந்தபோது, தலையில், அட்சதையை தூவிய நிலையில், கை விரல்களை ஏதேதோ செய்து, வாயில் 'மந்திரம்' முனுமுனுத்துக் கொண்டிருந்தார், நீத்தா அம்பானி. அந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்று சாம்பியன் ஆனது.
|
உங்கள் சேவை, தேவை
எனவேதான், நீத்தா அம்பானி, மந்திர சக்தியை சிலாகித்து, நெட்டிசன்கள், மீம் போடத் தொடங்கிவிட்டனர். நீத்தா இனி இந்தியா ஆடும் எல்லா போட்டிகளிலும் மைதானத்தில் இருக்க வேண்டும் என்று, மன்றாடத் தொடங்கிவிட்டனர் ரசிகர்கள்.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஐபிஎல் முடிந்தது.. அடுத்த வேலையை பாருங்க.. உதய் கோட்டக் ட்வீட் கொடுத்த ஷாக் -
30%க்கு மேல் வரி.. 13 வயதில் வைபவ் சூர்யவன்ஷி கட்டும் வரி எவ்வளவு தெரியுமா? தலையே சுத்துது போங்க -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications