லண்டனில் பொது முடக்கம்.. புதிய வகை கொரோனா வைரஸ் பரவலால் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் இல்லை!
லண்டன்: பிரிட்டனில் புதிய வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான தளர்வுகளை ரத்து செய்தார் பிரிட்டன் பிரதமர் போரீஸ் ஜான்சன். இன்று முதல் டிசம்பர் 30 வரை பொது முடக்கத்தை அமல்படுத்தியுள்ளார்.
200-க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா பாதிப்பு இருந்து வருகிறது. இந்த நிலையில் அதன் தாக்கம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்ததை அடுத்து பெரும்பாலான நாடுகள் கட்டுப்பாடுகளை தளர்வு செய்துள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் தொடங்கிய கொரோனா இந்த ஆண்டு டிசம்பர் மாதம்தான் ஓரளவு கட்டுக்குள் வந்திருப்பதாக நிம்மதி பெருமூச்சு விட்ட நிலையில் அதன் இரண்டாவது அலை பல இடங்களில் தொடங்கியுள்ளது.
இந்த நிலையில் பிரிட்டனில் புதிய வகை கொரோனா வைரஸ் ஒன்று வேகமாக பரவி வருகிறது. இது தற்போதுள்ள வைரஸை காட்டிலும் 70 சதவீதம் அளவுக்கு வேகமாக பரவுகிறது. இதையடுத்து பிரிட்டன் பிரதமர் போரீஸ் ஜான்சன் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தார்.
இந்த முறை கிறிஸ்துமஸ் பண்டிகையை வெகு விமரிசையாக கொண்டாட முடியாது என்பதை கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்வதாக போரீஸ் தெரிவித்தார். கொரோனா தடுப்பு மருந்துகள் செயல்திறன் கொண்டவையாக இருப்பதாக ஜான்சனும் மருத்துவ நிபுணர்களும் நம்புகிறார்கள்.
புதிதாக பரவி வரும் வைரஸ் உயிர்க் கொல்லியாகவும் மிகவும் மோசமானதாகவும் இல்லை. எனினும் அவ்வாறு மாறாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையை பிரிட்டன் அரசு எடுத்துள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications