'48 மணி நேரம் தான் டைம்..' ஓமிக்ரான் குறித்து பிரிட்டன் சுகாதார துறை அமைச்சர் அதிமுக்கிய எச்சரிக்கை
லண்டன்: பிரிட்டன் நாட்டில் முதல் ஓமிக்ரான் மரணம் பதிவாகியுள்ள நிலையில், அடுத்த 48 மணி நேரத்தில் லண்டன் நகரில் ஆதிக்கம் செலுத்தும் உருமாறிய கொரோனா வகையாக ஓமிக்ரான் மாறலாம் என்று சுகாதார செயலாளர் சஜித் ஜாவித் தெரிவித்துள்ளார்.
Recommended Video
வேக்சின் பணிகளை அனைத்து நாடுகளும் தீவிரமாக மேற்கொள்ளத் தொடங்கியதும், உலகின் பல பகுதிகளிலும் கொரோனா கேஸ்கள் குறையத் தொடங்கியது.
ஆனால், கடந்த நவ. 25ஆம் தேதி ஓமிக்ரான் கொரோனா கண்டறியப்பட்ட பிறகு, நிலைமை அப்படியே தலைகீழாக மாறியது. பல நாடுகளும் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அறிவிக்கத் தொடங்கின.

பிரிட்டனில் முதல் உயிரிழப்பு
இந்தச் சூழலில், நேற்றைய தினம் ஓமிக்ரான் கொரோனாவால் ஏற்பட்ட முதல் உயிரிழப்பு பிரிட்டன் நாட்டில் கண்டறியப்பட்டது. இதுவரை ஓமிக்ரான் கொரோனா லேசான பாதிப்புகளை மட்டுமே ஏற்படுத்துவதாகவும் ஓமிக்ரான் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களைத் தனிமைப்படுத்தி இருந்தால் போதும் எனத் தென் ஆப்பிரிக்க மருத்துவர்கள் கூறி வந்த நிலையில், இந்த உயிரிழப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

வேக்சின் போட்டுக்கொண்டவரா
ஓமிக்ரான் உயிரிழப்பைப் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் உறுதி செய்துள்ளார். அதேநேரம் அவர் குறித்த மற்ற தகவல்களைப் பிரிட்டன் அரசு வெளியிடவில்லை. அதேபோல அவர் வேக்சின் போட்டுக் கொண்டவரா இல்லையா என்பதையும் பிரிட்டன் அரசு வெளிப்படையாக அறிவிக்கவில்லை. இந்த ஓமிக்ரான் கொரோனா தடுப்பூசி அளிக்கும் தடுப்பாற்றலில் இருந்து தப்ப வாய்ப்புள்ளதாக அஞ்சப்படும் நிலையில், பிரதமர் போரிஸ் ஜான்சன் பல புதிய கட்டுப்பாடுகளையும் அறிவித்துள்ளார்.

ஆதிக்கம் செலுத்தும் ஓமிக்ரான்
இந்நிலையில் பிரிட்டன் சுகாதார செயலாளர் சஜித் ஜாவித் கூறுகையில், "இந்த ஓமிக்ரான் கொரோனா தான் இப்போது லண்டனில் 44% நோய்த்தொற்றுகளுக்குக் காரணம். அடுத்த 48 மணி நேரத்திற்குள் தலைநகர் லண்டனில் இது அதிக ஆதிக்கம் செலுத்தும் கொரோனா வகையாக மாறும். புதிய ஓமிக்ரான் வகையால் தினசரி 2 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்" என்று அவர் தெரிவித்தார்.

ஏன் ஆபத்து
இந்த ஓமிக்ரான் கொரோனா மற்ற கொரோனா வகைகளை ஒப்பிடும் போது அதிக மாற்றங்களைக் கொண்டிருக்கிறது. இதனால் இது வேக்சினில் இருந்து தப்பும் ஆற்றலைக் கொண்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இருப்பினும், இது தொடர்பாகக் கூடுதல் தகவல்கள் இருந்தால் மட்டுமே உறுதியாகக் கூற முடியும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அதேநேரம் உலக சுகாதார அமைப்பு இந்த ஒமிக்ரான் கொரோனாவை கவலைக்குரிய கொரோனா வகையாகப் பட்டியலிட்டுள்ளது.
-
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்?












Click it and Unblock the Notifications