வினேஷ் போகத் அப்பீல் வழக்கில் ட்விஸ்ட்.. திடீரென வந்த எதிர்ப்பு.. வெள்ளி கிடைக்குமா? இன்று தீர்ப்பு

Subscribe to Oneindia Tamil

லண்டன்: மல்யுத்தம் 50 கிலோ எடை பிரிவில் 100 கிராம் எடை கூடுதலாக இருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து வினேஷ் போகத் மேல் முறையீடு செய்தார். அவரது வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட இருக்கும் நிலையில், ஐக்கிய உலக மல்யுத்த கூட்டமைப்பு, விதிகளின் படி மேல் முறையீடு சரியானது இல்லை என எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இன்றுடன் தீர்ப்புக்கான அவகாசம் முடிவதால் இன்று இரவு 9.30 மணிக்குள் தீர்ப்பு வெளியாக வாய்ப்புள்ளது.

பாரீஸ் ஒலிம்பிக் தொடரின் மல்யுத்த போட்டியில் கடந்த செவ்வாய்க்கிழமை பெண்களுக்கான 50 கிலோ எடைப் பிரிவு அரையிறுதி ஆட்டம் நடந்தது. இதில், கியூபா வீராங்கனை யூஸ்னிலிஸ் குஸ்மேனுவை அபாரமாக வீழ்த்திய இந்திய வீராங்கனை வினேஷ் போகத் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். 5க்கு 0 என்ற கணக்கில் வினேஷ் போகத் அசத்தல் வெற்றியை பெற்றார். இதனால், இந்தியர்கள் பதக்க கனவுடன் காத்திருந்தனர்.

vinesh phogat olympics sports

ஆனால் சிறிது நேரத்தில் அதிர்ச்சிகர தகவல் ஒன்று வெளியானது. ஒட்டு மொத்த தேசமும் வினேஷ் போகத் ஒலிம்பிக் பதக்கத்தை ஏந்தும் தருணத்தை எதிர்பார்த்து காத்திருந்த நேரத்தில், எடை கூடுதலாக இருந்ததாக கூறி வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். உடல் எடை தகுதி பரிசோதனையில் நிர்ணயிக்கப்பட்ட 50 கிலோவை தாண்டி 100 கிராம் அதிகமாக இருந்ததால் வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

இதனால் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் அவரது கனவு தகர்ந்தது. இதைத் தொடர்ந்து பாரீசில் உள்ள சர்வதேச விளையாட்டு நடுவர் மன்றத்தின் தற்காலிக அமர்வு முன் தகுதிநீக்கத்தை எதிர்த்து மேல் முறையீடு செய்தார். இறுதிப்போட்டிக்கு முன்பு வரை தனது எடை சரியாக இருந்ததால் வெள்ளிப்பதக்கத்தை பகிர்ந்தளிக்க வேண்டும் என்று கோரிக்கையை வினேஷ் போகத் விடுத்துள்ளார். இந்த வழக்கு விசாரணையின் போது, 'முதல் நாள் போட்டியில் அவரது உடல் எடை விதிமுறைக்குட்பட்டே இருந்தது.

தொடர்ந்து விளையாடியதால் ஏற்பட்ட தளர்வில் இருந்து உடல் பழைய நிலைக்கு திரும்பும் போது, இயற்கையாக ஏற்படும் மாற்றத்தால் உடல் எடை கூடியதே தவிர அவர் இதில் மோசடி செய்யவில்லை' என்ற வாதத்தை முன்வைத்தார். இந்த வழக்கில் ஒலிம்பிக் போட்டி முடிவதற்குள் விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் வரும் 13 ஆம் தேதி அதாவது இன்று தான் வெளியாகும் என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி வட்டாரங்கள் தெரிவித்தன.

அதன்படி இன்று இந்த வழக்கு மீதான உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. இன்று இரவு 9.30 மணிக்குள் தீர்ப்பு வெளியாக வாய்ப்புள்ளது. இதற்கிடையே ஐக்கிய உலக மல்யுத்தம் (UWW) வினேஷ் போகத்தின் மனுவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதில், "விதிகளின் படி இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்தவர் மட்டுமே முறையீடு செய்ய முடியும். வினேஷ் போகத்தின் போட்டி முடிவு கைவிடப்பட்டது. பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறார். எனவே மேல் முறையீடு செய்ய அனுமதிப்பது சரியான முடிவாக இருக்காது" என UWW எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

வினேஷ் போகத் மேல் முறையீட்டு வழக்கில் திடீரென ஐக்கிய உலக மல்யுத்த கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்து இருப்பது வழக்கில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இன்று இரவு 9.30 மணிக்குள் தீர்ப்பு வெளியாக வாய்ப்புள்ளது. ஏனெனில் தீர்ப்புக்கான அவகாசம் இன்றுடன் முடிகிறது. இதனால் இன்று இரவுக்குள் வினேஷ் போகத்திற்கு வெள்ளி கிடைக்குமா அல்லது கிடைக்காதா என்பது தெரிந்துவிடும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+