ரோகித் பேட்டிங்குக்கு நடுவே ட்விஸ்ட்! போக்கஸ் மாறிய கேமரா! ‛லிப்லாக்’ முத்தத்தோடு ஜோடி! ஓ அப்படி
லண்டன்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் நேற்று இந்திய கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் செய்தி கொண்டிருந்தார். அப்போது திடீரென்று கேமராவின் போக்கஸ் மாறிய நிலையில் கேலரியில் அமர்ந்திருந்த ஒரு ஜோடி மாறி மாறி லிப்லாக் முத்தம் கொடுத்தது அனைவருக்கு சிரிப்பை வரவழைத்த நிலையில் அந்த ஜோடி ஏன் அப்படி செய்தனர் என்பது பற்றிய முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் முன்னேறியுள்ளன. கடந்த முறை டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை நியூசிலாந்திடம் இழந்த நிலையில் இந்த முறை ஆஸ்திரேலியாவை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் இந்திய வீரர்கள் தீவிர பயிற்சி மேற்கொண்டனர்.

இந்நிலையில் தான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 469 ரன்கள் குவித்த நிலையில் இந்தியாவுக்கு பேரதிர்ச்சியை கொடுத்தது. இதையடுத்து இந்திய அணி முதல் இன்னிங்சை தொடங்கியது.

முதல் இன்னிங்சில் இந்தியா 296 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. ரஹானே 89 ரன்களும், ஷர்துல் தாக்குர் 51 ரன்களும் எடுத்தனர். இதையடுத்து 173 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் இழப்புக்கு 270 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. இதன்மூலம் இந்தியாவுக்கு 444 ரன்கள் இலக்காக ஆஸ்திரேலியாக நிர்ணயித்துள்ளது.
இதையடுத்து இந்தியா 2வது இன்னிங்ஸை தொடங்கியது. இந்திய அணி 40 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்த நிலையில் 4வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. விராட்கோலி 60 பந்துகளில் 7 பவுண்டரியுடன் 44 ரன்களும், அஜிங்கியா ரஹானே 59 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 20 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர். இன்று கடைசி மற்றும் 5வது நாள் ஆட்டம் மாலை 3 மணிக்கு துவங்கி நடைபெற உள்ளது.

இந்தியாவின் வெற்றிக்கு 280 ரன்கள் தேவைப்படுகிறது. கைவசம் 7 விக்கெட்டுகள் உள்ளது. இதனால் இன்றைய போட்டி விறுவிறுப்பாக இருக்கும். ஏனென்றால் இந்திய அணி இலக்கை எட்டி வரலாறு படைக்குமா? அல்லது ஆஸ்திரேலிய அணி வாகை சூடுமா என்ற எதிர்பார்ப்பு எகிறி உள்ளது. இதற்கிடையே தான் தற்போது ஒரு வீடியோ இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இந்த வீடியோ உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் தான் எடுக்கப்பட்டுள்ளது. அதாவது 4வது நாள் ஆட்டமான நேற்று இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. இந்திய அணி நேற்று 2வது இன்னிங்சை துவங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் களமிறங்கினர். இந்திய அணி 24 ரன்கள் எடுத்திருந்தபோது ரோகித் சர்மா பேட்டிங் செய்ய தயாரானார்.
இந்த வேளையில் தான் கேமராவின் போக்கஸ் கூட்டத்துக்குள் திரும்பியது. அங்கு டீசர்ட் அணிந்திருந்து கண்களில் கண்ணாடி போட்டு இருந்த ஒருவர், ‛கூலிங்கிளாஸ்' தொப்பி அணிந்து ப்ரீஹேர் விட்டு இருந்த பெண்ணுக்கு மோதிரம் அணிந்து காதல் ‛ப்ரோபோஸ்' செய்தார். அதனை அந்த இளம்பெண் ஏற்று கொண்டார்.
அதன்பிறகு இருவரும் மாறி மாறி லிப்லாக் முத்தம் கொடுத்து கொண்டனர். இதுதான் கேமராவில் வீடியோவாக பதிவு செய்யப்பட்டது. இதனை பார்த்த ரசிகர்கள் கத்தி, கூச்சலிட்டு அந்த காதல் ஜோடிக்கு வாழ்த்து தெரிவித்தனர். இதற்கிடையே அந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications