"கன்னிப்பேச்சு".. பிரிட்டனின் புதிய மன்னராகிறார் 3ம் சார்லஸ்.. இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
புதிய ராஜாவாக இன்று சார்லஸ் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுகிறார்
லண்டன்: பிரிட்டனின் புதிய மன்னராகிறார் 3ம் சார்லஸ்.. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகிறது..!
இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் உடல்நலக் குறைவால் நேற்று முன்தினம் காலமானார்.. 25வது வயதில் ராணியாக பதவியேற்ற எலிசபெத் ராணி சுமார் 70 ஆண்டுகாலம் ராணியாக பதவி வகித்தவர் ஆவார்.
ராணியின் மறைவுக்கு உலக தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்... அந்தவகையில், நேபாள அரசின் அமைச்சரவைக் கூட்டத்தில் இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

அரண்மனை
மேலும், செப்டம்பர் 10 முதல் செப்டம்பர் 12-ம் தேதி வரை துக்கம் அனுசரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் நேபாள தூதரகங்களில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது... பிரிட்டன் மன்னராக சார்லஸ் இன்று பதவியேற்க உள்ளார்.. செயின்ட் ஜேம்ஸ் அரண்மனையில் இன்று நடக்கும் நிகழ்ச்சியில் மன்னராக சார்லஸ் பிரகடனம் செய்யப்படுகிறார்..

மகாராணி
முன்னதாக, ராணியைப் பார்ப்பதற்காக ஸ்காட்லாந்து சென்ற சார்லஸ் லண்டன் திரும்பினார். மனைவி கமிலாவுடன் தனி விமானத்தில் லண்டன் வந்து சேர்ந்தார்.. ஸ்காட்லாந்தில் உள்ள பல்மோரல் அரண்மனையில் இருந்து லண்டனில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனைக்கு சார்லஸ் திரும்பினார். கைகளை பிடித்து பரிவுடன் மக்கள் காட்டிய அன்பை ஏற்றுக் கொண்டார்... அப்போது அரண்மனை வாயில் மகாராணிக்கு அஞ்சலி செலுத்துவதற்காக காத்து இருந்த பொதுமக்களை மன்னர் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்..

இளவரசர்
நாட்டு மக்களிடம் மன்னராக பதவியேற்க உள்ள சார்லஸ் முதன்முறையாக உரையாற்றினார்... அப்போது அவர் சொல்லும்போது, "ராணி எலிசபெத்தை இழந்து தவிக்கும் மக்களி்ன் துக்கத்தில் நானும் பங்கேற்கிறேன்... மக்களுக்கு சேவை செய்ய தனது வாழ்க்கையை முழுமையாக அர்ப்பணித்தவர் ராணி.. அன்பு, விசுவாசம், மரியாதையோடு என் வாழ்நாள் முழுதும் மக்களுக்காக சேவை ஆற்றுவேன்... நான் விரும்பி செய்யும் சமூக சேவை பணிகளில் என்னால் அதிக நேரம் செலவிட முடியாத நிலை உள்ளது. இங்கிலாந்து இளவரசராக வில்லியம் செயல்படுவார்" என்றார்.

அறிவிப்பு
பிரிட்டனின் புதிய மன்னராக சார்லஸ் இன்று முறைப்படி அதிகாரப்பூர்வமாக பிரகடனம் செய்யப்படுகிறார் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் தயாராகி வருகின்றன.. ராணி இறந்த துக்கத்தை தாங்க முடியாமல் பொதுமக்கள் பாடல்களை பாடி கண்ணீர் மல்க வெளிப்படுத்தி வருகிறார்கள்.. ராணி எலிசபெத்தின் உடல் நல்லடக்கம் 10 நாட்களுக்கு பின் நடைபெறும் எனவும், 5 நாட்கள் பொதுமக்கள் அஞ்சலிக்காக லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் அரங்கில் ராணி எலிசபெத்தின் உடல் வைக்கப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications