Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இங்கிலாந்து பிரதமர் தேர்தல்.. அனல் பறக்கும் பிரசாரம்.. இந்தியில் பேசி வாக்கு சேகரிக்கும் ரிஷி சுனக்!

Subscribe to Oneindia Tamil

லண்டன்: இங்கிலாந்தில் அடுத்த பிரதமருக்கான தேர்வானது தற்போது இறுதிக்கட்டத்தை அடைந்த நிலையில், ரிஷி சுனக் மற்றும் லிஸ் டிரஸ் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக், இந்தி உள்பட பல மொழிகளில் பேசி வாக்கு சேகரித்து வருகிறார்.

இங்கிலாந்து பிரதமரான கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த போரிஸ் ஜான்சன் பதவி விலகியதை அடுத்து, இங்கிலாந்தில் புதிய பிரதமரை தேர்வு செய்வதற்கான நடைமுறை பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

புதிய பிரதமர் பதவிக்கான தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த எம்.பி. ரிஷி சுனக் அடுத்தடுத்த சுற்றுகளில் வெற்றி பெற்று தற்போது இறுதி வேட்பாளராக களத்தில் உள்ளார்.

 அனல் பறக்கும் பிரசாரம்

அனல் பறக்கும் பிரசாரம்

இவருக்கு போட்டியாக 46 வயதான லிஸ் டிரஸ் களத்தில் இருக்கிறார். இவர்கள் 2 பேரில் ஒருவர் தான் இங்கிலாந்தின் அடுத்த பிரதமர். தற்போது பிரிட்டன் பிரதமர் பதவிக்கான தேர்வு இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த 2 லட்சம் உறுப்பினர்கள் பிரிட்டனின் அடுத்த பிரதமரை தேர்வு செய்ய உள்ளனர். பிரதமர் தேர்வுக்கான வாக்கெடுப்பு தபால் வாக்கெடுப்பு முறையில் நடைபெற்று வருகிறது. செப்டம்பர் 5 ஆம் தேதி இந்த வாக்குகள் எண்ணப்பட்டு பிரிட்டனின் அடுத்த பிரதமர் யார்? என்று அறிவிக்கப்பட உள்ளார். அந்த வகையில், இங்கிலாந்து பிரதமர் யார் என்பதை தேர்வு செய்யும் தேர்தல் இறுதிகட்டத்தை நெருங்கிவிட்ட நிலையில் களத்தில் உள்ள ரிஷி சுனக் மற்றும் லிஸ் டிரஸ் ஆகியோர் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் .

இந்தியில் பேசிய ரிஷி சுனக்

இந்தியில் பேசிய ரிஷி சுனக்

அந்த வகையில் லண்டனில் கன்சர்வேட்டிவ் ப்ரண்ட்ஸ் ஆஃப் இந்தியா என்ற இந்திய வம்சாவளி அமைப்பினர் ஏற்பாடு செய்த தேர்தல் பிரசார நிகழ்ச்சியில் ரிஷி சுனக் பங்கேற்று பேசினார். அப்போது, அங்கு திரண்டு இருந்தவர்களுக்கு நமஸ்தே, சலாம், கெம் சோ என பல மொழிகளில் வணக்கம் செலுத்தி தனது பேச்சை தொடங்கினார். இதைக்கேட்ட இந்திய வம்சாவளியினர் உற்சாகம் அடைந்தனர். இந்தியிலும் பேசிய ரிஷி சுனக், ஆப் சப் மேரே பரிவார் ஹோ( நீங்கள் அனைவரும் என் குடும்பம்) என்றார்.

இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு

இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு

தொடர்ந்து பேசிய ரிஷி சுனக், இந்தியா - இங்கிலாந்து உறவு என்பது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை நாம் அறிவோம். இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை பிரதிநிதிப்படுத்தும் வகையில் நாம் இருக்கிறோம். இந்தியாவில் இங்கிலாந்திற்காக உள்ள பரிமாற்ற வாய்ப்புகள் குறித்து நமக்கு நன்றாக தெரியும். ஆனால், இரு நாடுகளுக்கும் இடையேயான இந்த உறவை நாம் சற்று வித்தியாசமாகவும் அணுக வேண்டும்.

மாற்றத்தை கொண்டு வர விரும்புகிறேன்

மாற்றத்தை கொண்டு வர விரும்புகிறேன்

ஏனென்றால் இங்கிலாந்தில் அதிக எண்ணிக்கையில் இருக்கும் நாம் இந்தியாவில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டியதும் உள்ளது. "நமது மாணவர்களும் இந்தியாவுக்குச் சென்று கற்றுக்கொள்வதை எளிதாக்குவதை நான் உறுதி செய்ய நினைக்கிறேன். இது நமது நிறுவனங்களும் இந்திய நிறுவனங்களும் இணைந்து செயல்படுவதை எளிதாக்கும். ஏனெனில் இருநாடுகளுக்கு இடையேயன உறவு ஒருவழிப்பாதை கிடையாது, இருவழிகளை கொண்டது. எனவே, இந்த வகையான மாற்றத்தைத் தான் இந்தியா - இங்கிலாந்து உறவில் நான் கொண்டு வர விரும்புகிறேன்" என்றார்.

பிரதமரின் முதல் கடமை இதுதான்

பிரதமரின் முதல் கடமை இதுதான்

சீனா விவகாரம் குறித்து பேசிய ரிஷி சுனக், இங்கிலாந்து தனது நலனை காக்கும் வகையில் மிகவும் உறுதியுடன் செயல்படும் என்றும் கன்சர்வேட்டிவ் பிரதமரின் முதல் கடமை இதுதான் எனவும் பேசினார். பின்னர், அங்கு கூட்டத்தில் பங்கேற்று இருந்த டோரி உறுப்பினர்களிடம் கலந்துரையாடிய ரிஷி சுனக் அவர்களுடன் கை குலுக்கி தனக்கு ஆதரவு திரட்டினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+