உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக விஜய் எடுத்த அதிரடி முடிவு.. 8 மாவட்டங்கள் நிர்வாகிகளுக்கு போன உத்தரவு
சென்னை: சட்டசபை தேர்தலில் விழுப்புரம், திருவாரூர், நீலகிரி, நாகை, மயிலாடுதுறை, அரியலூர், தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 8 மாவட்டங்களில் த.வெ.க. ஒரு தொகுதிகளில் வெற்றி பெறவில்லை.. இந்த 8 மாவட்டங்களில் தி.மு.க., அ.தி.மு.க. மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது. த.வெ.க. வெற்றி பெறாத 8 மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்ள நிர்வாகிகளுக்கு முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளாராம்.
கட்சி தொடங்கிய 2 ஆண்டுகளில் விஜய்யின் தவெக தமிழ்நாட்டில் ஆட்சியை பிடித்துள்ளது. அதுவும் சந்தித்த முதல் தேர்தலிலேயே 35 சதவீதத்திற்கு மேல் வாக்குகளை பெற்று சாதனை படைத்துள்ளது. 108 இடங்களில் வென்ற தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்ததுடன், இடதுசாரிகள், விசிக, ஐயுஎம்எல், காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சியமைத்துள்ளது.

விஜய்யின் மீது ஆர்வத்தால், அவரது ஒருவரின் முகத்திற்காக மக்கள் வாக்களித்து வெற்றி பெற வைத்துள்ளார்கள். எனவே திமுக, அதிமுக போல் உள்கட்டமைப்பு மற்றும் அரசியல் அரங்கில் பலமாக மாற வேண்டும் என்றால், அதற்கான வியூகங்களை தவெக வகுக்க வேண்டும். அதற்கு தற்போது தயராகி வருகிறது. அதிமுகவை பொறுத்தவரை 2 பிரிவாக உடைந்துள்ளது. தி.மு.க.வும் கட்டமைப்பு ரீதியாக என்ன மாற்றம் செய்ய வேண்டும் என்று தீவிரமாக யோசனையில் உள்ளது.
அ.தி.மு.க.வும் தங்கள் தோல்வியில் இருந்து மீண்டு வருவதற்கு பிரச்சனைகளுக்கு நடுவே தீவிரமாக முன்னெடுப்பை தொடங்கி உள்ளது. அதேநேரம் உள்ளாட்சி தேர்தல் வருவதற்குள் த.வெ.க. கட்டமைப்பு ரீதியாக பலமாக மாற விரும்புகிறது. அதேபோல் சட்டசபை தேர்தலில் ஜெயித்த சூட்டோடு, சூடாக உள்ளாட்சி தேர்தலையும் நடத்த த.வெ.க. அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான முதல் கட்ட பணியும் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது இதற்காக விஜய் பெரிய திட்டங்களை வைத்துள்ளாராம்.
இப்போது உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டால் அது த.வெ.க.வுக்கு வெற்றியாகவே அமையும் என்று அக்கட்சி கருதுகிறது. பெண்கள் பாதுகாப்பு நடவடிக்கை, மதுக்கடைகள் மூடல், 200 யூனிட் இலவச மின்சாரம், முந்தைய ஆட்சிகளின் நல்ல திட்டங்களை தொடர செய்தல் போன்றவை தங்களுக்கு சாதகமாக இருக்கும் என்று முதல்வர் விஜய் நம்புகிறாராம். மாநில அதிகாரம் மட்டுமின்றின உள்ளாட்சி அமைப்புகளை கைப்பற்றினால் மட்டுமே ஆட்சி அதிகாரம் முழுமையாக தவெக கைவசம் வரும் என்று விஜய் நினைக்கிறார். எனவே அதற்கேற்ப உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள கவனம் செலுத்த தொடங்கினாரகள்.
குறிப்பாக உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பாக சட்டசபை தேர்தலில் த.வெ.க. வெற்றி பெறாத 8 மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்ள நிர்வாகிகளுக்கு முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளாராம். விழுப்புரம், திருவாரூர், நீலகிரி, நாகை, மயிலாடுதுறை, அரியலூர், தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 8 மாவட்டங்களில் த.வெ.க. கூடுதல் கவனம் செலுத்த தொடங்கி உள்ளதாம். இந்த 8 மாவட்டங்களில் தி.மு.க., அ.தி.மு.க. மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. எனவே அங்கு உள்ளாட்சி தேர்தலில் த.வெ.க. உள்ளாட்சி தேர்தலில் வெல்ல வேண்டும் என்று விஜய் விரும்புகிறாராம்.
-
யாரு ஹீரோ? விஜய் Vs உதய்! பட்ஜெட் கூட்டத்தில் பட்டைய கிளப்புவது யார்? பரபரப்பாய் ரெடியாகும் லிஸ்ட்! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
ஜான் ஆரோக்கியசாமியின் டெல்லி லாபி.. திமுகவுக்கு தூதுவிட்ட சுனில்.. சபரீசனுக்கு வந்துச்சே கோபம் -
எம்ஜிஆர் வழிபட்ட அதே கோவில்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்லும் விஜய்! அந்த தங்க வாள் ரகசியம் -
மோடி தலைமையில் நிதி ஆயோக் குழு கூட்டம் தொடங்கியது.. முதல்வர் விஜய் பங்கேற்றார்! அஜெண்டா என்ன? -
டெல்லி தமிழ்நாடு இல்ல கேண்டீனில் தீ விபத்து.. முதல்வர் விஜய் புறப்பட்ட சிறிது நேரத்தில் பரபரப்பு -
தமிழக அரசியலில் அடுத்த அதிரடி! 5 தொகுதிகளுக்கு ஆகஸ்டில் இடைத்தேர்தல்? ஜூலை கடைசியில் தேதி அறிவிப்பு -
ஸ்ரீவைகுண்டம் கொடூரம்: “யார் அந்த மேலிடம்? முதல்வரை தாண்டிய பவர் சென்டரா?" விஜய்க்கு எடப்பாடி கேள்வி -
மின் வெட்டை தடுக்க களமிறங்கும் 10 சிறப்பு குழுக்கள்.. பறக்கும் 125 மின் தடை நீக்க ரோந்து வாகனங்கள்! -
காலை தொட்டு கேட்கிறோம்.. எங்களை சேர்த்துக்கோங்க.. தவெகவினரிடம் மேடையில் கெஞ்சிய அதிமுக நிர்வாகி -
அதிமுகவில் பலரும் தவெகவிற்கு தாவும் நிலையில்.. திமுகவில் இருந்து ஏன் போகவில்லை? -
துடி துடித்த தூத்துக்குடி.. குடும்ப கவுரவத்துக்காக நடந்த கொடூரம்! 19 வயது இளம்பெண் ஆணவக்கொலை!












Click it and Unblock the Notifications