பிரிட்டன் அரண்மனையில் டொனால்ட் டிரம்புக்கு விருந்து! கோழி முதல் காடை வரை மெனு என்ன தெரியுமா?
லண்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பிற்கு வின்ஸ்ட்சர் கோட்டையில் நடைபெற்ற சிறப்பு விருந்தில், பிரிட்டிஷ் அரச குடும்பம் அவருக்கு அளித்த உணவுகள் என்னென்ன என்பதை பார்க்கலாம். அரசு முறை பயணமாக பிரிட்டன் சென்றுள்ள டிரம்பிற்கு பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ் வரவேற்பு அளித்தார்.
அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது மனைவி மெலனியாவுடன் பிரிட்டனுக்கு அரசு முறை பயணமாக சென்றுள்ளார். பிரிட்டனின் அரசு அலுவல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் வின்ட்ஸ்சர் கோட்டைக்கு குதிரை பூட்டிய வாகனத்தில் டிரம்பும், மெலானியாவும் அழைத்துச் செல்லப்பட்டனர்.

பிரிட்டனுக்கு இரண்டாவது முறையாக அழைக்கப்பட்ட அமெரிக்காவைச் சேர்ந்த முதல் அதிபர் டிரம்ப் ஆவார். நேற்றைய தினம் டிரம்பிற்கு வின்ஸ்டர் கோட்டையில் விருந்து வைக்கப்பட்டது.
விருந்து நடைபெறும் இடம் 1000 ஆயிரம் பழமை வாய்ந்தது. இங்கு ஒரு ஹெலிகாப்டர் நிறுத்துமளவுக்கு மேஜை இருக்கும். அதில் 139 மெழுகுவர்த்திகள் கொளுத்தப்பட்டிருந்தன. உணவுகளை பரிமாற 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இருந்தனர்.
மேஜையின் ஒரு புறம் அமெரிக்க அமைச்சர் மார்கோ ரூபியோ, மூன்றாம் சார்லஸ், டிரம்ப் மற்றும் வேல்ஸ் இளவரசி கேத்ரின் ஆகியோரும் மறுபுறம் கமீலா, மெலானியா, இளவரசர் வில்லயமும் அமர்ந்திருந்தனர்.
அதில் பரிமாறப்பட்ட உணவுகள் என்னென்ன என்பதை பார்க்கலாம். முதலாவது உணவு வகையாக பிரட்டுடன் ஹாம்ப்ஷயர் வாட்டர்கிரஸ் பன்னா கோட்டா பரிமாறப்பட்டது. பன்னா கோட்டா என்பது இத்தாலியன் நாட்டு டெசர்ட் (dessert) ஆகும். இது திக்கான கிரீம் கொண்டது. மேலே ஸ்ட்ராபெர்ரி சாஸ் ஊற்றப்பட்டிருக்கும். காடை முட்டை சாலட் வழங்கப்பட்டது.
கோவைக்காயுடன் சேர்த்து செய்யப்பட்ட கோழிக் கறி, வெண்ணிலா ஐஸ்கிரீம். கென்டிஷ் ராஸ்பெர்ரி சர்பெட் மற்றும் மெதுவாக சமைக்கப்பட்ட விக்டோரியா பிளம்ஸ் வழங்கப்பட்டன.
டிரம்ப் மதுபானம் அருந்தாதவராக இருந்தாலும், விருந்தில் 1945ஆம் ஆண்டு Warre's போர்ட் வைன் (அவர் 45வது மற்றும் 47வது அமெரிக்க அதிபர் என்ற அடையாளமாக) மற்றும் 1912 ஆம் ஆண்டு ஹெனஸ்ஸி கொன்யாக் (அவரது தாயின் பிறந்த ஆண்டு நினைவாக) இடம்பெற்றன.
விருந்துக்கென சிறப்பாக "Transatlantic Whisky Sour" காக்டெய்ல் தயாரிக்கப்பட்டது. ஜானி வாக்கர் பிளாக் லேபல், சிட்ரஸ் மார்மலேட், பிகான் நுரை மற்றும் நட்சத்திர வடிவ பிஸ்கட்டில் வறுத்த மார்ஷ்மெல்லோ சேர்க்கப்பட்ட இந்த பானத்தை, மற்ற விருந்தினர்கள் ரசித்ததாக கூறப்படுகிறது.
இந்த பிரமாண்ட விருந்து செயின்ட் ஜார்ஜ் ஹாலில் நடத்தப்பட்டது. 160 விருந்தினர்களுக்காக 155 அடி நீளமான மேசை, ஒருவருக்கு 5 கண்ணாடி டம்ளர்கள், 1,400க்கும் மேற்பட்ட ஃபோர்க் ஸ்பூன்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டிருந்தது.
பக்கிங்காம் அரண்மனை மற்றும் வின்ஸ்ட்சர் கோட்டையின் தோட்டங்களில் இருந்து எடுக்கப்பட்ட மலர்கள் அலங்காரமாக வைக்கப்பட்டதால் நிகழ்ச்சி அரச விருந்தின் மேன்மையை பிரதிபலித்தது.












Click it and Unblock the Notifications