பிரிட்டனின் முதல் முஸ்லீம் பெண் உள்துறை செயலாளர்.. எந்த நாட்டை பூர்வீகமாக கொண்டவர் தெரியுமா?
லண்டன்: பிரிட்டனின் உள்துறை செயலராக ஷாபானா மஹ்மூத் என்ற முஸ்லீம் பெண் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் தான் முதல் முதலாக இப்பதவியில் பொறுப்பேற்கும் முதல் முஸ்லீன் பெண் ஆவார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "பிரிட்டன் உள்துறை செயலாளராக பணியாற்றுவது என் வாழ்க்கையில் மிகச் சிறந்த கவுரவமாக பார்க்கிறேன்" என்றார்.
பிரிட்டனின் உள்துறை செயலராக ஷாபானா மஹ்மூத் என்ற பெண் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பிரிட்டன் நாட்டின் உள்துறை செயலர் என்ற பெரிய பொறுப்புக்கு நியமிக்கப்பட்ட முதல் முஸ்லீம் பெண் இவரே ஆவார்.

ஏஞ்சலா ரேய்னர் ராஜினாமா
ஏஞ்சலா ரேய்னர் ராஜினாமா செய்ததையடுத்து, பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மர் தனது அமைச்சரவையில் மாற்றம் செய்தார். இதையடுத்து ஷாபானா மஹ்மூத் உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். குடியேற்ற விவகாரம், கொள்கைகள், தேசிய பாதுகாப்பு விவகாரங்கள் உள்ளிட்ட மிக முக்கியமான பொறுப்புகளை ஷாபானா கவனிக்க உள்ளார்.
மிகச் சிறந்த கவுரவமாக பார்க்கிறேன்
வரி செலுத்துவதில் விதிமீறலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், பிரிட்டன் துணை பிரதமராகவும் வெளியுறவு அமைச்சராகவும் இருந்தவர் ஏஞ்சலா ரேய்னர் பதவி விலகியிருந்தார். உள்துறை செயலராக இருந்த டேவிட் லாமி, தற்போது துணைப் பிரதமராக பொறுப்பேற்றுள்ளார். இதையடுத்து காலியாக இருந்த உள்துறை செயலாளராக ஷாபானா மஹ்மூத் நியமிக்கப்பட்டுள்ளார். இவரது நியமனம் இங்கிலாந்து வரலாற்றில் ஒரு முக்கியமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக ஷாபானா தனது X தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:- "பிரிட்டன் உள்துறை செயலாளராக பணியாற்றுவது என் வாழ்க்கையில் மிகச் சிறந்த கவுரவமாக பார்க்கிறேன். மக்களை பாதுகாப்பதே அரசின் பொறுப்பு. இந்த நோக்கத்திற்காக ஒவ்வொரு நாளும் இந்தப் பணியில் நான் அர்ப்பணிப்புடன் பணியாற்றுவேன்" என்று கூறியுள்ளார்.
பாகிஸ்தானை பூர்விகமாக கொண்டவர்
ஷாபானா மஹ்மூத் பாகிஸ்தானை பூர்வீகமாகக் கொண்டவர். கடந்த 1980ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி பிறந்தார். இவரது பெற்றோர் சுபைதா - மஹ்மூத் அஹமது ஆவர். இவர்கள் இருவரும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள்.
தனது சிறுவயதில் சவூதி அரேபியாவில் வசித்த ஷாபானா மஹ்மூத், பின்னர் மீண்டும் இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்தார். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் லின்கோல்ன் கல்லூரியில் கல்வி பயின்ற ஷாபானா, பின்னர் பாரிஸ்டர் பட்டம் பெற்றுள்ளார்.












Click it and Unblock the Notifications