லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழ் மொழியில் பேச்சு! இலங்கை உள்நாட்டு போர் புனை நாவலுக்காக புக்கர் பரிசை வென்ற ஷெஹான் கருணாதிலகா

Google Oneindia Tamil News

லண்டன்: 2022ம் ஆண்டுக்கான புக்கர் பரிசை இலங்கை எழுத்தாளர் ஷெஹான் கருணாதிலகா வென்றார். இவர் இலங்கை உள்நாட்டு போர் தொடர்பாக புனைந்து எழுதிய ‛தி செவன் மூன்ஸ் ஆப் மாலி அல்மேடா' என்ற நாவலுக்காக புக்கர் பரிசை பெற்றார்.

ஆண்டுதோறும் சிறந்த நாவலுக்காக புக்கர் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இது இலக்கிய விருதாக கருதப்பட்டு வருகிறது. இலக்கிய உலகில் மிகப்பெரிய அங்கீகாரம் இதுவாகும்.

இதனால் ஒவ்வொரு ஆண்டும் உலகின் பல்வேறு நாடுகளில் எழுதப்பட்ட நாவல்கள் புக்கர் பரிசுக்காக அனுப்பப்படும். அதில் சிறந்த நாவல் தேர்வு செய்யப்பட்டு அதன் ஆசிரியருக்கு புக்கர் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

புக்கர் பரிசு அறிவிப்பு

புக்கர் பரிசு அறிவிப்பு

அந்த வகையில் 2022ம் ஆண்டுக்கான புக்கர் பரிசுக்கான தேர்வு நடைபெற்றது. இறுதிப்போட்டியில் மொத்தம் 6 நாவல்கள் இருந்தன. இதில் சிறந்த படைப்பாக தி செவன் மூன்ஸ் ஆப் மாலி அல்மெய்டா (The Seven Moons of Maali Almeida) நாவல் தேர்வு செய்யப்பட்டது. இலங்கையை சேர்ந்த 47 வயது நிரம்பிய ஷெஹான் கருணாதிலகா என்பவர் எழுதிய இந்த நாவலை தேர்வுக்குழுவில் இருந்த 5 நடுவர்கள் தேர்வு செய்தனர்.

நாவல் சாராம்சம் என்ன?

நாவல் சாராம்சம் என்ன?

பத்திரிகையாளராக இருந்த விளம்பரம் சார்ந்த தொழில் செய்து வருபவருமான ஷெஹான் கருணாதிலகா இந்த நாவலை இலங்கையின் உள்நாட்டு போரை அடிப்படையாக கொண்டு எழுதினார். "தி செவன் மூன்ஸ் ஆப் மாலி அல்மேடா" நாவல் இலங்கையில் நடந்த உள்நாட்டு போரினால் பாதிக்கப்பட்ட மக்களையும், அந்நாட்டை பற்றியும் புனைவாக எழுதப்பட்ட நாவலாகும். போர் புகைப்பட கலைஞரும், சூதாட்டத்தில் ஈடுபாடு கொண்டவருமான மாலி அல்மெடா என்பவர் இறந்த பிறகு தன்னை கொன்றவர்களை கண்டுபிடிக்க மீண்டும் உயிர் பிழைப்பதும், உள்நாட்டு போர் கொடூரம் தொடர்பாக மறைந்த விஷயங்களை புகைப்படங்கள் மூலம் வெளியுலகிற்கு கொண்டு வரும் வகையில் புனைந்து நாவல் எழுதப்பட்டுள்ளது.

 மன்னர் மனைவியிடம் இருந்து விருது

மன்னர் மனைவியிடம் இருந்து விருது

பிரிட்டனில் நடந்த விழாவில் பங்கேற்ற ஷெஹான் கருணாதிலகா நேற்று புக்கர் பரிசை பெற்று கொண்டார். பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸின் மனைவி கமிலா அவருக்கு புக்கர் பரிசை வழங்கினார். இதன்மூலம் 50 ஆயிரம் பிரிட்டனின் உள்ளூர் கரன்சியான 50 ஆயிரம் புவுண்ட் பரிசாக வழங்கப்பட்டது.

தமிழில் பேசிய எழுத்தாளர்

தமிழில் பேசிய எழுத்தாளர்

இவர் தமிழில் சரளமாக பேசும் திறன் கொண்டவர். இதனால் புக்கர் பரிசை பெற்றவுடன் தமிழ் மற்றும் சிங்கள மொழியில் உரையாற்றினார். அப்போது அவர், ‛‛நான் உங்களுக்காக படைப்புகளை கொடுக்கின்றேன். நீங்களும் படித்து பிறருடன் பகிருங்கள். நாட்டில் நிலவும் அரசியல் குழப்பங்கள் விரைவில் முடிவுக்கு வரும். இந்த நாவல் அரசியலை கிண்டல் செய்வதாக நினைக்க வேண்டாம். இது புனைவுக்கதை. இதனால் இலங்கையில் உள்ள புத்தக கடைகளின் அலமாரிகளில் இடம்பெறும் என நம்புகிறேன்'' என உருக்கமாக தெரிவித்தார்.

2வது இலங்கை நபர்

2வது இலங்கை நபர்

புக்கர் பரிசு பெற்ற இவர் இலங்கையில் தெற்கு பகுதியில் காளே நகரில் பிறந்தார். நியூசிலாந்தில் படித்து பிரிட்டன் தலைநகர் லண்டன் உள்பட பல முன்னணி நகரங்களில் பணியாற்றினார். இலக்கிய உலகில் மிகவும் உயர்ந்த விருதாக கருதப்படும் புக்கர் பரிசை இவர் தனது 2வது நாவல் மூலம் பெற்றுள்ளார். மேலும் புக்கர் விருது பெறும் இலங்கையின் 2வது நபர் என்ற பெயரையும் இவர் பெற்றுள்ளார். இதற்கு முன்பு 1992ல் The English Patient நாவலுக்காக மைக்கலே் ஒண்டாட்ஜே புக்கர் பரிசு வென்றிருந்தார்.

இந்தியாவில் எத்தனை பேர்?

இந்தியாவில் எத்தனை பேர்?

கடந்த ஆண்டு தென்னாப்பிரிக்காவை சேர்ந்த தேமன் கால்கட் என்பவர் "The Promise" என்ற நாவலுக்காக இந்த விருதை பெற்றார். இந்தியாவை பொறுத்தமட்டில் புக்கர் பரிசை 3 பேர் பெற்றுள்ளனர். முதன் முதலாக அருந்ததி ராய், 2வதாக கிரண் தேசாய், 3வதாக அரவிந்தா உள்ளிட்டர்கள் பெற்றிருந்தனர். இதில் 1997ல் அருந்ததி ராய், 2006-ம் ஆண்டு கிரண் தேசாய், 2008-ம் ஆண்டு அரவிந்த் அடிகா ஆகியோர் புக்கர் பரிசை பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Sri Lankan author Shehan Karunathilaka has won the Booker Prize for the year 2022. He won the Booker Prize for his fictional novel 'The Seven Moons of Mali Almeida' about the Sri Lankan civil war.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X