15 வயது மாணவருடன் உல்லாசம்.. 3 குழந்தைக்கு தாயான ஆசிரியை லீலை.. மிரண்டு போன பள்ளி நிர்வாகம்!
லண்டன்: பிரிட்டன் நாட்டில் மாணவர் ஒருவருடன் உடலுறவு கொண்ட பிரிட்டன் பெண் ஆசிரியைக்குக் கடுமையான தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
பிரிட்டனைச் சேர்ந்த பெண் ஆசிரியை ஒருவர் 15 வயது மாணவியுடன் உடலுறவு கொண்ட சம்பவம் சர்ச்சையைக் கிளப்பியது. 38 வயதான காண்டிஸ் பார்பர் என்ற ஆசிரியை 2021இல் பக்கிங்ஹாம்ஷையரில் உள்ள பிரின்ஸ் ரிஸ்பரோ பள்ளியில் வேலை செய்து வந்தார்.

அங்கே படிக்கும் 15 வயது மாணவர் ஒருவருடன் அவர் உடலுறவு கொண்டதாகப் புகார் எழுந்தது. இது தொடர்பான விசாரணையில் அவர் மீதான குற்றம் உறுதியானது.
உடலுறவு: இதையடுத்து 15 வயது மாணவருடன் உடலுறவு கொண்டதற்காக அந்த ஆசிரியைக்கு 6.2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இது குறித்து அந்நாட்டின் பள்ளிக் கல்விக்கான கண்காணிப்பு அமைப்பும் தனியாக விசாரணை நடத்தியது. அதில் ஆசிரியை சுயநலமாக நடந்து கொண்டுள்ளதாகவும் இது மாணவரின் எதிர்காலத்தைப் பாதிப்பதாகவும் கூறியுள்ளனர்.
மேலும், அவரது டீச்சிங் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்ட நிலையில், இதன் பிறகு வாழ்நாள் முழுக்க டீச்சிங் லைசென்ஸிற்கு விண்ணப்பிக்க அவருக்குத் தடையும் விதிக்கப்பட்டன. 'அவரது நடத்தை மிகவும் மோசமானதாகவும், தீங்கு விளைவிப்பதாகவும் இருந்ததாக அதில் கூறப்பட்டுள்ளது. மேலும், எதிர்காலத்தில் அவரை டீச்சிங் துறைக்கே அனுமதிக்கக் கூடாது என்பதை இது காட்டும் வகையில் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
தண்டனை: அந்த பெண் ஆசிரியைக்கு ஏற்கனவே திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளன. அந்த மாணவருக்கு ஆபாசப் படங்களையும் ஆபாச மெசேஜ்களையும் அனுப்பி மயங்கி இருக்கிறார். கடந்த 2018இல் முதலில் அந்த மாணவருக்கு ஆசிரியை மெசேஜ் அனுப்ப ஆரம்பித்துள்ளார். இது அப்படியே வளர்ந்து வளர்ந்து கடைசியில் அந்த மாணவரை வெளியே அழைத்து உடலுறவு கொண்டுள்ளார்.
பாடம் நடத்தும் போது உன்னைப் பார்த்தாலே வெட்கப்படுகிறேன் என்றெல்லாம் கூட அந்த ஆசிரியை மாணவருக்கு மெசேஜ் அனுப்பியுள்ளார். இது மட்டுமின்றி பல ஆபாச மெசேஜ்களையும் அந்த ஆசிரியை மாணவருக்கு அனுப்பியுள்ளார். இவை அனைத்தையும் போலீசார் தங்கள் விசாரணையில் கைப்பற்றியுள்ளனர். மேலும், தனது ஆபாச போட்டோக்களையே அவர் அந்த மாணவருக்கும் அனுப்பியுள்ளார்.
மிரட்டல்: மேலும், தங்களுக்கு நடக்கும் இந்த அசிங்கத்தை வேறு யாரிடமாவது சொன்னால் ஆளையே காலி செய்துவிடுவேன் என்றும் மிரட்டியுள்ளார். இவை அனைத்தையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். இருப்பினும், அந்த ஆசிரியை தான் எந்த தவறும் செய்யவில்லை.. தான் ஒரு நிரபராதி என்றே தொடர்ந்து கூறி வந்துள்ளார். இருப்பினும், கண்காணிப்பு அமைப்பு அவருக்குச் சரியான தண்டனையைக் கொடுத்துள்ளது.
இது குறித்து கல்வித்துறைச் செயலர் சாரா பக்ஸ்சி கூறுகையில், "போதிய ஆதாரம் இல்லை என்று கூறி நடவடிக்கை எடுக்காமல் விட்டால் வரும் கால மாணவர்கள் நலனையும் இது பதிப்பதாக அமையும். எனவே, தீவிர ஆலோசனைக்குப் பிறகு அவரது டீச்சிங் லைசென்ஸுக்கு தடை விதிக்க முடிவு செய்துள்ளோம். இவரை அனுமதித்தால் வரும் கால மாணவர்கள் இவரால் பாதிக்கப்படுவார்கள் என்பதால் இவருக்கு வாழ்நாள் தடை விதிக்கிறோம்" என்றார்.
இவரது கணவர் டேனியல் பார்பர்.. இந்த புகார்கள் எழுந்த போது டேனியல் பார்பர் தனது மனைவிக்கு ஆதரவாகவே இருந்தார். இருப்பினும், அவர் மீதான குற்றச்சாட்டுகள் உறுதியான நிலையில், டேனியல் பார்பர் அவரது மனைவியை விட்டுப் பிரிந்து சென்றார். இப்போது டேனியல் பார்பர் மற்றொரு பெண்ணுடன் வசித்து வருகிறார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications