லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மாயமான லேப்டாப்... திடீரென வந்த திருடரின் மெயில்... 'ஸ்மைலி' போட்டு தேங்க்ஸ் சொன்ன மாணவர்!

லேப்டாப்பை திருடியதற்காக திருடன் மன்னிப்பு கேட்டுள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    மாயமான லேப்டாப், திடீரென வந்த திருடரின் மெயில்.

    லண்டன்: திருடன்தான்.. ஆனா அநியாயத்துக்கு ரொம்ப நல்லவன் போல இருக்கு!

    இங்கிலாந்தை சேர்ந்தவர் ஸ்டீவ் வேலண்டைன். இவர் பல்கலைக் கழகம் ஒன்றில் படித்து வருகிறார். ஒருநாள் இவரது லேப்டாப்பை யாரோ ஆட்டைய போட்டுவிட்டார்கள். லேப்டாப் போகவும் ஸ்டீவ் ரொம்ப அப்செட் ஆகிட்டார்.

    படிக்கிற விஷயங்கள் எல்லாம் அந்த லேப்டாப்பில்தான் இருக்கிறது. 'கவனமா இல்லாம போய்ட்டோமே, யார் அதை திருடி இருப்பாங்க' என்று நினைத்து கவலைப்பட்டு கொண்டே இருந்தார். லேப்டாப் நினைப்பிலேயே சரியாக தூங்கறதும் இல்லை, சாப்பிடறதும் இல்லை.

    சொன்னா புரியாது

    ஒருநாள் ஸ்டீவ்க்கு ஒரு மெயில் வந்தது. அந்த மெயிலை அனுப்பியது மிஸ்டர் திருடன்தான். அதில், "உங்கள் லேப்டாப்பை திருடியது நான்தான். என்னை மன்னிச்சிடுங்க. உங்களுக்கு சொன்னா புரியாது, எனக்கு ரொம்ப பணக்கஷ்டம். அதனாலதான் லேப்டாப்பை எடுத்துட்டு வந்தேன்.

    பர்ஸ் எடுக்கவில்லை

    பர்ஸ் எடுக்கவில்லை

    அதை தொடும்போதே உறுத்தலாதான் இருந்தது. அதனாலதான் லேப்டாப் பக்கத்துலயே இருந்த உங்க பர்ஸ், உங்க போன் எதையுமே நான் எடுத்துட்டு போகல. அங்கேயே விட்டுட்டு வந்துட்டேன். வெறும் லேப்டாப் மட்டும்தான் எடுத்துட்டு வந்தேன்.

    திருப்பி அனுப்பறேன்

    திருப்பி அனுப்பறேன்

    ஆனா அந்த லேப் டாப்பை ஓபன் செய்து பார்த்தேன். நீங்க யூனிவர்சிட்டியில படிக்கிறவர் மாதிரி இருக்கே? அதில நிறைய புராஜக்ட்டுகளை வைச்சிருக்கீங்க. அதெல்லாம் உங்களுக்கு தேவைப்படும் போல. அதனால அதில் உள்ள முக்கியமான ஃபைல் தேவைப்பட்டால் அதனை உங்களுக்கே திருப்பி அனுப்பி வைச்சிடறேன்" என்று தெரிவித்திருந்தார்.

    ஸ்மைலி சிம்பள்

    ஸ்மைலி சிம்பள்

    இதை படித்து பார்த்ததும் ஸ்டீவ்-க்கு ஏற்கனவே இருந்த கோபம், டென்ஷன், கவலை எல்லாம் போய் சிரிப்புதான் வந்தது. திருடனின் மெயிலுக்கு "ஸ்மைலி" சிம்பள் போட்டு பதில் அளித்து வைத்திருக்கிறார்.

    English summary
    "I'm extremely poor": Thief steals laptop, and says sorry to University Student through mail
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X