அய்யய்ய..இங்கிலாந்து நிறுவனத்தின் வினோத வேலைவாய்ப்பு விளம்பரம்..ஆடிப்போன நெட்டிசன்ஸ்! அப்படி என்னது?
இங்கிலாந்தை சேர்ந்த ஊட்டச்சத்து நிறுவனம் ஒன்று வினோதமான வேலை வாய்ப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
லண்டன்: மனித மலத்தின் நிறம் மற்றும் துர்நாற்றம் ஆகியவற்றிற்கு உடல் ஆரோக்கியத்துடன் தொடர்பு உள்ளதால் அது குறித்த மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் புதுவிதமான ஒரு வேலை வாய்ப்பை இங்கிலாந்து நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ளது. இந்த வேலைக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ. 1.50 லட்சம் சம்பளம் வழங்கப்பட உள்ளதாம்.. இந்த வினோதமான வேலை வாய்ப்பு குறித்த விவரங்களை காணலாம்.
வேலைவாய்ப்பு தொடர்பாக பல்வேறு வித்தியாசமான விளம்பரங்கள் வெளியிடப்பட்டு இருப்பதை நாம் அடிக்கடி பார்த்து இருக்கிறோம்.
ஒரு வரியில் தொடங்கி ஒரு கட்டுரை அளவுக்கு கூட வேலை வாய்ப்பு விளம்பரங்கள் பலவும் வித்தியாசமாக இருக்கும். பல நிறுவனங்களும் இப்படி வேலை பற்றிய அறிவிப்பில் புதுமை காட்டுவதற்காக வழக்கத்திற்கு மாறான முறையை பின்பற்றும்.

திடக்கழிவை முகந்து பார்க்கனும்
இணையத்தில் இதுபோன்ற விளம்பரங்கள் கூட வேகமாக பரவி நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் பரப்பப்படும். அதுபோலத்தான் இங்கிலாந்து நிறுவனம் வெளியிட்ட ஒரு விளம்பர அறிவிப்பும் பலரையும் ஒரு செக்கண்ட் அதிர்ச்சியும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியது. விளம்பரத்தில் அப்படி எதுவும் புதுமை காட்டப்படவில்லை.. ஆனால் வேலையே எங்கும் கேட்டிராத ஒரு வேலை என்பதுதான் பலருக்கும் ஷாக்கையும் வியப்பையும் ஒரு சேர கொடுத்தது. அப்படி என்னதான் வேலை என்கிறீர்களா... உடலில் இருந்து வெளியாகும் திடக்கழிவை முகந்து பார்க்க வேண்டுமாம். அதுதான் வேலையாம்.

1.50 லட்ச ரூபாய் சம்பளம்
இதற்காக எவ்வளவு சம்பளம் எவ்வளவு தெரியுமா? மாதம் £1,500 (இந்திய மதிப்பில் 1.50 லட்ச ரூபாய்) கொடுக்கப்படுகிறதாம். இங்கிலாந்தை சேர்ந்த ஊட்டச்சத்து நிறுவனம் ஒன்று இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. வரலாற்றிலேயே இப்படி ஒரு வேலைக்கு ஆள் எடுப்பது இதுதான் முதல் முறை என்று சொல்லப்படுகிறது. "Poommelier" என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வேலைக்கு விண்ணப்பிக்க 18 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டுமாம்.

அதிக துர்நாற்றம் இருக்கும் போது
மனித மலத்தின் நிறம் மற்றும் துர்நாற்றம் ஆகியவற்றிற்கு உடல் ஆரோக்கியத்துடன் தொடர்பு உள்ளதால் அது குறித்த மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளதாம். முன்னணி ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகையில், "மலத்தில் அதிக துர்நாற்றம் இருக்கும் போது மோசமான குடல் ஆரோக்கியத்தை குறிக்கிறது. டிஸ்பயாசிஸ் எனப்படும் குடல் பாக்டீரியாவில் ஏற்படும் மாறுபாடு, நம் உடலில் அதிக அளவில் மீத்தேன் வாயு உருவாக வழிவகுத்து துர்நாற்றத்தை தூண்டலாம்" என்றனர்.

பயிற்சி முடிவுக்கு பிறகு..
இங்கிலாந்தை சேர்ந்த பீல் கம்ப்லீட் (Feel Complete) என்ற நிறுவனம்தான் இந்த "the right nose" என்ற வேலைக்கு பயிற்சி கொடுக்கிறது. பயிற்சி முடிவுக்கு பிறகு ஒரு நபருக்கு மட்டும் வேலை வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாம். 6 மாதங்கள் கொண்ட இந்த பயிற்சிக்கு ஆர்வம் கொண்டவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று பீல் கம்ப்ளீட் நிறுவனம் இணையதளத்தில் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications