பாலியல் குற்றங்களுக்கு சிறை எல்லாம் இல்லை.. நேரடியாக "ஆண்மை நீக்கம்!" அதிரடி காட்டும் பிரிட்டன் அரசு
லண்டன்: பாலியல் குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை தர வேண்டும் என்பதே பொதுமக்களின் குரலாக இருக்கிறது. இதற்கிடையே இங்கிலாந்தில் பாலியல் குற்றங்களில் கைது செய்வோருக்கு ஆண்மை நீக்கம் செய்வது குறித்து அந்நாட்டு அரசு ஆலோசித்து வருகிறது. ஏற்கனவே பல நாடுகளில் இதுபோல பாலியல் குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம் செய்யப்படும் நிலையில், இங்கிலாந்தும் அதைப் பின்பற்றப்போகிறது.
சிறைகளில் அனுமதிக்கப்பட்ட சிறைவாசிகளின் எண்ணிக்கையை விட அதிகளவில் கைதிகளை அடைப்பது பெரிய பிரச்சினையாகவே இருக்கிறது. நமது நாட்டில் கூட பல சிறைகளில் அனுமதிக்கப்பட்ட கைதிகளின் எண்ணிக்கையை விட அதிகளவே கைதிகள் அடைக்கப்படுகிறார்கள். அதேநேரம் இது இந்தியாவுக்கு மட்டுமே உரித்தான பிரச்சினை இல்லை.

சிறைகள்
உலகெங்கும் பல்வேறு நாடுகளிலும் சிறைகளில் கைதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பது பிரச்சினையாகவே இருக்கிறது. உலகின் ஒவ்வொரு நாடும் இதைச் சமாளிக்க ஒவ்வொரு திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது. இதற்கிடையே பிரிட்டன் இதற்குக் கையில் எடுத்துள்ள திட்டம் இப்போது பரவலாக விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
பிரிட்டன் அரசு தனது சிறைகளில் அதிக கைதிகளை வைத்துக் கொண்டு திண்டாடி வருகிறது. சிறையில் உள்ள கைதிகளின் எண்ணிக்கை குறைக்க அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக பாலியல் குற்றவாளிகளுக்கு கெமிக்கல் முறையில் ஆண்மை நீக்க அறுவை சிகிச்சையைக் கட்டாயமாக்குவது குறித்து அந்நாட்டு அரசு பரிசீலித்து வருகிறது.
பிரிட்டன் அரசு
கடந்த ஜூலை மாதம் அங்குப் புதிதாகத் தொழிலாளர் கட்சி ஆட்சி அமைத்தது. அப்போது அவர்கள் முன்னால் இருந்த சவால்களில் முக்கியமானது இந்த சிறைகளில் அதிக கைதிகள் இருப்பது. நிலைமை கையைவிட்டுப் போனால் சிறையில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும். சிறைக்குள் சட்டம் மற்றும் ஒழுங்கு முற்றிலுமாக சீர்குலைந்துவிடும் ஆபத்தும் ஏற்பட்டது. இதையடுத்து அதைச் சீர் செய்ய பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உள்ள சிறைகளில் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் அதிகபட்ச கைதிகள் அடைக்கப்பட்டிருந்தனர். இந்தாண்டு கூடுதல் கைதிகளை அடைக்க முடியாத நிலை ஏற்பட்ட நிலையில், போலீஸ் நிலையங்களில் தற்காலிகமாகக் கைதிகளை அடைக்கப் பயன்படும் இடங்களிலும் கைதிகளை அடைக்க முடிவு செய்யப்பட்டது. இருப்பினும், அதுவும் தற்காலிக தீர்வை மட்டுமே கொடுத்தது.
ஆண்மை நீக்கம்
இதற்கிடையே சிறையில் கைதிகளின் எண்ணிக்கை குறைப்பது குறிக்க எடுக்கக்கூடிய நடவடிக்கை குறித்த நீதித் துறை அமைச்சர் ஷபானா மஹ்மூத் இந்த கருத்துகளை முன்வைத்திருக்கிறார். அதாவது பாலியல் குற்றவாளிகளுக்கு பாலியல் தூண்டுதலைத் தடுக்கும் வகையில் கெமிக்கல் ஆண்மை நீக்கம் செய்வதே திட்டமாகும். இப்போது அது கட்டாயம் இல்லை. எந்த கைதி விரும்புகிறாரோ அவர் செய்து கொள்ளலாம் என்பது போல இருக்கிறது.
பிரிட்டன் அரசு தகவல்
அதாவது சிறையில் உள்ள பாலியல் குற்றவாளிகள் 5 ஆண்டுகள் சிறைவாசத்தை அனுபவித்து இருந்தால்.. அவர்கள் சிறையில் இருந்து முன்கூட்டியே வெளியேற விரும்பினால் அவர்களுக்குத் தானாக முன்வந்து ஆண்மை நீக்கம் செய்துவிட்டு வெளியேறலாம். அதேநேரம் இதில் அவர்களின் நன்னடத்தை எல்லாம் கருத்தில் கொள்ளப்படும் என்பது தனிக்கதை. இப்போது தானாக முன்வந்து செய்ய வேண்டும் என இருப்பதைக் கட்டாயமாக்க இங்கிலாந்து அரசு ஆலோசித்து வருகிறது.
அதேநேரம் பாலியல் குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம் செய்யும் முதல் நாடு இங்கிலாந்து இல்லை. ஏற்கனவே பல உலக நாடுகளில் இந்த நடைமுறை பின்பற்றப்படும். அதில் இப்போது இங்கிலாந்தும் இணைந்திருக்கிறது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications