ரிஷி சுனக் தோல்வி.. திடீரென மாமியார் சுதா மூர்த்தியை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்.. என்ன மேட்டர்
லண்டன்: பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தலில் ரிஷி சுனக் கட்சி மிக மோசமான தோல்வி அடைந்துள்ளது. இதன் மூலம் ரிஷி சுனக் தனது பிரதமர் பதவியையும் இழக்கிறார். இதற்கிடையே நெட்டிசன்கள் ரிஷி சுனக் தோல்விக்கு சுதா மூர்த்தியை வறுத்தெடுத்து வருகிறார்கள். அவரிடம் சரமாரியாகக் கேள்விகளையும் எழுப்பி வருகிறார்கள்.
பிரிட்டன் நாட்டில் நேற்று நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடந்த நிலையில், அதைத் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் தொழிலாளர் கட்சி மிகப் பெரிய பெரிய வெற்றி பெற்றது.

அக்கட்சியின் தலைவர் கெய்ர் ஸ்டார்மர் பிரிட்டன் பிரதமராகப் பதவியேற்க உள்ளார். தொழிலாளர் கட்சி சுமார் 14 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆட்சியை அமைத்துள்ளது. இந்தத் தேர்தல் பிரிட்டன் வரலாற்றில் முக்கியமான தேர்தலாகவே பார்க்கப்படுகிறது.
ரிஷி சுனக்: கடந்த 2 ஆண்டுகளாகப் பிரதமராக இருந்த ரிஷி சுனக் பிரதமராக இருந்து வந்த நிலையில், அவர் இப்போது தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளார். நவீன பிரிட்டன் வரலாற்றில் கன்சர்வேடிவ் கட்சி இவ்வளவு பெரிய தோல்வியைச் சந்தித்ததே இல்லை. ரிஷி சுனக் தனது எம்பி சீட்டை தக்க வைப்பாரா என்பதிலேயே சந்தேகம் இருந்தது. இருப்பினும், அவர் எப்படியோ சமாளித்து தனது எம்பி சீட்டை தக்க வைத்துக் கொண்டார்.
இப்படி ஒரு பக்கம் ரிஷி சுனக் வரலாற்றில் இல்லாத படுதோல்வியைச் சந்தித்துள்ள நிலையில், திடீரென நெட்டிசன்கள் அவரது மாமியார் சுதா மூர்த்தி பக்கம் திரும்பியுள்ளனர். ரிஷி சுனக் தோல்விக்குப் பலரும் சுதா மூர்த்தியை கிண்டலடித்து வருகிறார்கள்.
24 மணி நேரம் தான் டைம்.. பிரதமர் குடியிருப்பை காலி செய்யும் ரிஷி சுனக்.. அடுத்து Kissing hands தான்!
இன்போசிஸ் நாராயண மூர்த்தி: அதாவது இன்போசிஸ் நாராயண மூர்த்தி மகள் அக்ஷதா மூர்த்தியைத் தான் ரிஷி சுனக் திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த இன்போசிஸ் நாராயண மூர்த்தி கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொடுத்த நேர்காணல் இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியிருந்தது. அதாவது இந்தியாவின் உற்பத்தித் திறன் குறைவாக இருப்பதாக வேதனை தெரிவித்த அவர், இளைஞர்கள் வாரம் 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் எனக் கூறியிருந்தார்.
70 மணி நேர வேலை: இதுவே இணையத்தில் விவாதத்தைக் கிளப்பியது. ஏனென்றால் வாரம் 70 மணி நேரம் என்றால் வார விடுப்பே இல்லாமல் ஏழு நாட்களும் தினசரி ஒருவர் 10 மணி நேரம் வேலை செய்ய வேண்டும். வாரம் ஒரு நாள் விடுமுறை என்றால் 6 நாட்கள் சுமார் 11.5 மணி நேரம் வேலை செய்ய வேண்டும். இதன் காரணமாகவே நெட்டிசன்கள் அப்போதே நாராயணமூர்த்தியின் கருத்தை விமர்சித்தனர். அப்போது நாராயணமூர்த்தியின் மனைவி கூறியது மேலும் விவாதத்தைக் கிளப்பியது.
சுதா மூர்த்தி: தனது கணவர் கூறியது சரி தான் என்ற அவர், இந்த வயதிலேயே தான் 70 மணி நேரத்திற்கு அதிகமாகவே வேலை செய்து வருவதாகத் தெரிவித்தார். இதற்கு விளக்கம் என அவர் ஒன்றைச் சொன்னார். அதாவது, "உங்கள் வேலையை நீங்கள் என்ஜாய் செய்து செய்ய வேண்டும்.. உங்கள் வேலையில் நீங்கள் ஆர்வமாக இருக்க வேண்டும். அப்படி என்ஜாய் செய்து ஆர்வமாகச் செய்தால் அதுவே உங்களுக்கு விடுமுறைதான்" எனச் சொல்லிருந்தார். இதுவே நெட்டிசன்கள் கொந்தளிக்க காரணம்.
இதற்கிடையே இப்போது ரிஷி சுனக் கட்சி படுதோல்வி அடைந்துள்ள நிலையில், ரிஷி சுனக் பிரதமர் பதவியையும் இழந்துள்ளார். இதற்கிடையே சுதா மூர்த்தியைக் குறிப்பிட்டு பலரும், ஏன் நீங்கள் உங்கள் மருமகனை வாரம் 70 மணி நேரம் வேலை செய்யச் சொல்லவில்லையா.. அவர் தேர்தலில் தோற்றுவிட்டாரே என நக்கலடித்து வருகிறார்கள். இன்னும் சிலர் இனி ரிஷி சுனக் இந்தியா வந்து தினசரி 70 மணி நேரம் வேலை செய்யப் போகிறார் என்றும் கிண்டலடித்து வருகிறார்கள்
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications