ச்சீ.. தங்கை என நம்பி வீட்டில் விட்டால்.. புருஷனை கரெக்ட் செய்துவிட்டாள்! புலம்பும் இளம்பெண்
லண்டன்: பிரிட்டன் நாட்டில் இளம் பெண் ஒருவர் செய்த செயல் குறித்து இணையத்தில் பெரும் விவாதமே கிளம்பி உள்ளது.
எந்தவொரு மனிதருக்கும் குடும்பம் என்பது மிகவும் முக்கியமானது. நல்ல ஒரு குடும்பம் அமைந்துவிட்டால் எவ்வளவு பெரிய பிரச்சினை இருந்தாலும் அதை எளிதாகச் சமாளித்து விடலாம்.
ஆனால், துருதிஷ்டவசமாக இது அனைவருக்கும் வாய்ப்பதில்லை. குறிப்பாக வெளிநாடுகளில் இதுபோன்ற சம்பவங்கள் சாதாரணம். அப்படியொரு சம்பவம் தான் பிரிட்டனில் நடந்துள்ளது.

பிரிட்டன் பெண்
பிரிட்டன் நாட்டை சேர்ந்த 37 வயது பெண்ணின் கணவர் டேன். இவர்கள் இருவரும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்குப் பின்னர் இருவருக்கும் இடையேயான வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாகவே சென்று கொண்டு இருந்தது. ஹனிமூன், சுற்றுலா, கேளிக்கை விடுதிகள் எனக் கணவன் மனைவி இருவரும் ஜாலியாக சுற்றிக் கொண்டு இருந்துள்ளனர்.

வில்லன்
அப்போது தான் அவர்கள் திருமண வாழ்க்கையில் வில்லியாக நுழைந்தார் 32 வயதான சாம். இவர் வேறு யாருமில்லை, அந்த பெண்ணின் சகோதரி தான் இவர். டேன் உடன் இவர் முதலில் சாதாரணமாகவே பழகத் தொடங்கி உள்ளார். இருப்பினும், ஒரு கட்டத்தில் இருவரும் நெருக்கமாகவும் இருக்கத் தொடங்கிவிட்டனர். தனது சகோதரி தான் என்பதால் அப்பெண் முதலில் இதை எதுவும் தவறாக நினைக்கவில்லை. இருப்பினும், அவர்கள் தனியாகச் சுற்றுவது, அவ்வப்போது தனிமையில் சந்தித்துக் கொள்வது போன்றவை அதிகரித்துள்ளது.

ஷாக்
அப்போது தான் இருவரும் தனிமையில் உல்லாசமாக இருப்பதை அப்பெண்ணின் நெருங்கிய நண்பர் பார்த்துள்ளார். இதை முதலில் கேட்டதும் அப்பெண்ணால் நம்பவே முடியவில்லை. தனது கணவர் தனக்கு இதுபோன்ற ஒரு துரோகத்தைச் செய்துள்ளார் என்பதை அவரால் ஜீரணிக்கவே முடியவில்லை. அதிலும் கூட தனது சொந்த சகோதரியே தனது திருமண வாழ்க்கைக்கு எமனாக இருப்பார் என அவர் நினைத்தும் பார்க்கவில்லை,

அடுத்த சம்பவம்
இதனால் கடும் கோபம் அடைந்த அப்பெண் உடனடியாக விவாகரத்து வாங்கிவிட்டார். அதன் பின்னர் சில ஆண்டுகளில் ரியான் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். ரியான் உடன் அவரது வாழ்க்கை சந்தோஷமாகவே இருந்துள்ளது. இந்தச் சூழலில் தான் அந்தப் பெண் கர்ப்பம் அடைந்துள்ளார். இது குறித்து தனது குடும்பத்தில் உள்ள அனைவரிடமும் சொல்ல ஆசைப்பட்டு அனைவரையும் நேரில் அழைத்துள்ளார்.

அழைக்கவில்லை
இருப்பினும், தன்னை ஏமாற்றி முதல் திருமண வாழ்க்கையைக் கெடுத்த சகோதரி சாமையும் அவரது கணவர் டேனையும் அழைக்கவில்லை. இதையடுத்து நடந்த குடும்ப சந்திப்பில் தான் கர்ப்பமாகி இருப்பதாக அப்பெண் தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இருப்பினும், அப்பெண் தாயார் மட்டும் ஏன் இவ்வளவு மகிழ்ச்சியான செய்தியைக் கூறும் போது உனது சகோதரியை அழைக்கவில்லை எனச் சண்டை போட்டுள்ளார்.

கோபம்
மேலும், சற்று நேரத்தில் அவரது சகோதரியும் இது குறித்து கால் செய்து சண்டையிட்டுள்ளார். இருப்பினும், அப்பெண், "எனது திருமண வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டு வந்தது நீ. உன்னை எப்படி அழைக்க முடியும்" என்று கேட்டுள்ளார். இருப்பினும், அதையெல்லாம் கேட்காமல், தன்னை அழைக்காமல் இருந்தது தவறு என்று கூறி கோபமாகத் திட்டியுள்ளார். இந்தச் சம்பவத்தை அவர் இணையத்தில் பதிவிட்டுள்ள நிலையில், யார் செய்தது சரி என பெரும் விவாதமே நடைபெறுகிறது.












Click it and Unblock the Notifications