டிரம்ப்பை தொடர்ந்து.. குடியேற்ற ரூல்ஸை மொத்தமாக மாற்றிய பிரிட்டன்.. பல லட்சம் இந்தியர்கள் பாதிப்பு!
லண்டன்: கடந்த சில மாதங்களாகவே அமெரிக்கா தனது குடியேற்றக் கொள்கைகளை மாற்றி வருகிறது. இதற்கிடையே அமெரிக்காவைத் தொடர்ந்து இந்தியர்கள் அதிகம் செல்லும் மற்றொரு நாடான பிரிட்டனும் தனது குடியேற்றக் கொள்கைகளில் முக்கிய மாற்றத்தை அறிவித்துள்ளது. இதனால் பல லட்சம் இந்தியர்கள் பாதிக்கப்படுவார்கள் என அஞ்சப்படுகிறது.
டிரம்ப் அரசு அமெரிக்காவில் குடியேற்ற விதிகளில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வருகிறது. அமெரிக்காவில் சட்டப்பூர்வமாகத் தங்கும் வெளிநாட்டினரும் கூட பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறார்கள். இதற்கிடையே அமெரிக்காவைத் தொடர்ந்து பிரிட்டனும் தனது குடியேற்றக் கொள்கைகளை மொத்தமாக மாற்றியுள்ளது.

விதிகளில் மாற்றம்
சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு அந்நாட்டின் குடியேற்ற கொள்கைகள் மொத்தமாக மாற்றப்பட்டுள்ளது. அதன்படி இனி வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் பிரிட்டன் செல்லும்போது, அந்த நாட்டின் குடியுரிமையைப் பெற்ற பிறகே இதர சலுகைகள் அவர்களுக்குக் கிடைக்கும்.
அந்நாட்டின் உள்துறை அமைச்சர் ஷபானா மஹ்மூத் இந்த திட்டத்தை அறிவித்தார். நீண்ட கால வசிப்பிட அனுமதி மற்றும் குடியுரிமை பெறும் நடைமுறைகளிலும் மாற்றம் கொண்டு வரப்படுகிறது. தற்போதுள்ள விதிகளின்படி, வெளிநாட்டினர் குடியேற்ற அனுமதியை (settled status) பெற்றாலே அரசு சலுகைகளைப் பெறலாம். அந்த நிலையை மாற்றி, அவர்கள் பிரிட்டிஷ் குடிமக்கள் ஆன பின்னரே சலுகைகள் பெறும் வகையில் சட்டம் மாற்றப்படுகிறது.
சலுகைகள் கிடைக்காது
2026 மற்றும் 2030 காலகட்டத்தில் சுமார் 16 லட்சம் வெளிநாட்டினர் பிரிட்டனில் settled status அந்தஸ்து பெறுவார்கள். முந்தைய விதிகளின் கீழ் அவர்களுக்குத் தானாகவே பிரிட்டன் அரசின் சலுகைகள் கிடைக்கும். ஆனால், புதிய விதிகளின் கீழ் அவர்களுக்குச் சலுகைகள் கிடைக்காது. அவர்கள் பிரிட்டன் குடிமகனாக மாறிய பிறகே அந்நாட்டு அரசின் சலுகைகளைப் பெற முடியும்.
அந்நாட்டு அரசு வெளியிட்ட டேட்டாவின்படி அங்கு வாழும் வெளிநாட்டினரில் இந்தியர்கள் தான் அதிகம். 2023 கணக்கெடுப்பின்படி சுமார் 2.5 லட்சம் இந்தியர்கள் அங்குப் படிப்பு மற்றும் வேலைவாய்ப்புக்காக இருக்கிறார்கள். இங்கிலாந்தில் வாழும் மிகப் பெரிய வெளிநாட்டுக் குழுவாக இந்தியர்கள் உள்ளனர். அவர்கள் அனைவருமே இந்த குடியேற்ற விதிகளால் பாதிக்கப்படுவார்கள்.
10 ஆண்டு காத்திருப்பு
மேலும், 2021க்கு பிறகு பிரிட்டனுக்குச் சென்றவர்கள் நிரந்தர குடியுரிமை பெறும் கால அளவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்பு 5 ஆண்டுகள் பிரிட்டனில் இருந்தாலே நிரந்தர குடியுரிமைக்குத் தகுதி அடைவார்கள் என்று விதி இருந்த நிலையில், இப்போது அது இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. அதாவது இனி பிரிட்டனில் நிரந்தர குடியுரிமை பெற 10 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.
2021க்கு பிறகு சுமார் 20 லட்சம் புலம்பெயர்ந்தோர் பிரிட்டனுக்கு சென்றுள்ள நிலையில், அவர்கள் அனைவரும் இதனால் பாதிக்கப்படுகிறார்கள். அதேநேரம் ஏற்கனவே நிரந்தர குடியுரிமை பெற்றவர்களுக்கு இதனால் எந்தவொரு சிக்கலும் ஏற்படாது எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அதேபோல பிரிட்டனில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் அல்லது விசா காலம் முடிந்து முறைகேடாக தங்கியிருப்போர் குடியுரிமைக்குத் தகுதி பெற 30 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டியிருக்கும். அதாவது சட்டவிரோதமாகத் தங்கியிருந்தால் கிட்டத்தட்ட நிரந்தர குடியுரிமையைப் பெறவே முடியாது எனச் சொல்லலாம்.
ஒரே ஆறுதல்
அதேநேரம் பிரிட்டனில் மருத்துவர்கள் மற்றும் நர்ஸ்களுக்கு பற்றாக்குறை நிலவுகிறது. குறிப்பாக அங்கு அரசின் தேசிய சுகாதார சேவையில் (NHS) பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு கடும் பற்றாக்குறை இருக்கிறது. இதனால் அதில் வேலை செய்யும் மருத்துவர்கள், செவிலியர்கள் மட்டும் ஐந்து ஆண்டுகளிலேயே நிரந்தர குடியுரிமை பெற முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.. இந்தியர்கள் கணிசமான அளவுக்கு அதில் வேலை செய்வதால் இது இந்தியர்களுக்கு நல்ல ஒரு செய்தியாகவே இருக்கும்.
இருப்பினும், மற்ற துறைகளில் வேலை செய்யும் இந்தியர்கள் அங்குக் குடியுரிமையைப் பெறுவதும் கடினம். அந்நாட்டு அரசின் சலுகைகளைப் பெறுவதும் கடினம்!
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications