"நாடுகடத்தல்.." டிரம்ப் ரூட்டில் பிரிட்டன்! வெளியான மிக முக்கிய அறிவிப்பு! இந்தியர்களுக்கு சிக்கல்?
லண்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் சட்டவிரோதமாகக் குடியேறுவோருக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறார். சட்டவிரோதக் குடியேறிகளைக் கண்டறிந்து நாடுகடத்தி வருகிறார். இதற்கிடையே அமெரிக்காவைப் போலவே பிரிட்டனும் சட்டவிரோதக் குடியேறிகளை வெளியேற்றப்போவதாக அறிவித்துள்ளது. அதன்படி சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைபவர்கள் உடனடியாகக் கைது செய்யப்பட்டு, நாட்டிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என்று பிரிட்டிஷ் பிரதமர் கீர் ஸ்டார்மர் அறிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக, டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராகப் பதவியேற்றதில் இருந்து, அமெரிக்காவில் சட்டவிரோதக் குடியேற்றத்திற்கு எதிராகத் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். சட்டவிரோதமாக நுழைவோரைக் கண்டறிந்து, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நாடுகடத்தும் நடவடிக்கையை டிரம்ப் அரசு எடுத்து வருகிறது. இதற்கிடையே அமெரிக்கா வழியில் பிரிட்டனும் சட்டவிரோதக் குடியேறிகளை நாடு கடத்தும் நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளது.

சட்டவிரோத குடியேற்றம்
பிரிட்டனில் சட்டவிரோதக் குடியேற்றம் பெரிய பிரச்சினையாக இருந்து வந்தது. அங்குள்ள உள்ளூர் மக்கள் சட்டவிரோதக் குடியேற்றத்தைத் தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கடும் கோபத்தில் உள்ளனர். இந்தச் சூழலில் தான் பிரிட்டன் அரசு இதை அறிவித்துள்ளது. அதாவது இதுநாள் வரை அங்குச் சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து, அதன் பிறகே நாடுகடத்தப்படுவார்கள்.
அதை மாற்றி முதலில் நாடுகடத்திவிட்டு, அதன் பிறகு மேல்முறையீடு செய்யும் திட்டத்தை இந்தியா உட்பட 23 நாடுகளுக்குப் பிரிட்டன் விரிவுபடுத்தியுள்ளது. எல்லைகளைப் பாதுகாக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகப் பிரிட்டன் தெரிவித்துள்ளது.
நாடுகடத்தல்
இது தொடர்பாகப் பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மர் தனது ட்விட்டரில், "இந்த நாட்டிற்குச் சட்டவிரோதமாக யாராவது வந்தால், நீங்கள் கைது செய்யப்பட்டு, திருப்பி அனுப்பப்படுவீர்கள். இந்த நாட்டிற்கு வந்து குற்றம் செய்தால், உங்களை விரைவில் நாடு கடத்துவோம்" என்று பதிவிட்டுள்ளார். சட்டவிரோதக் குடியேற்றம் காரணமாக அங்கு மக்கள் கோபம் அதிகரிக்கும் நிலையில், ஸ்டார்மர் அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.
முன்னதாக அவர் வெளியிட்ட மற்றொரு எச்சரிக்கை பதிவில், "நீண்ட காலமாகவே வெளிநாட்டுக் குற்றவாளிகள் நமது குடியேற்ற அமைப்பைத் தவறாகப் பயன்படுத்தி வருகின்றனர். அவர்களின் மேல்முறையீடுகள் இழுபறியாக இருக்கும் நிலையில், அவர்கள் வழக்கு நடப்பதாலேயே இங்கிலாந்தில் பல மாதங்கள் அல்லது பல ஆண்டுகள் வரை தங்கியுள்ளனர். அது இப்போது முடிவுக்கு வருகிறது. வெளிநாட்டினர் சட்டத்தை மீறினால், அவர்கள் விரைவில் நாடு கடத்தப்படுவார்கள்" என்று கூறினார்.
23 நாடுகள்
அதேபோல பிரிட்டன் அரசு ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில், வழக்கு இல்லாமல் நாடு கடத்தும் முறையை எட்டு நாடுகளில் இருந்து 23 நாடுகளாக விரிவுபடுத்துவதாக அறிவித்தது. இந்த புதிய பாலிசி கீழ் சட்டவிரோதமாக நுழைவோர் முதலில் நாடுகடத்தப்படுவார்கள். அவர்கள் தங்கள் சொந்த நாட்டில் இருந்து வீடியோ மூலம் வழக்குத் தொடரும் ஆப்ஷன் வழங்கப்படும். வெளிநாட்டுக் குற்றவாளிகளை விரைவாக நாடுகடத்தவும், சிறைகளில் அழுத்தத்தைக் குறைப்பதற்கும் இத்திட்டம் உதவும் என்று பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது.
இந்த லிஸ்டில் இப்போது அல்பேனியா, நைஜீரியா, எஸ்டோனியா மற்றும் கொசோவோ, இந்தியா, ஆஸ்திரேலியா, கனடா, மலேசியா, கென்யா மற்றும் உகாண்டா உள்ளிட்ட 23 நாடுகள் உள்ளன. இதுபோக பல்வேறு நாடுகளையும் இந்த லிஸ்டில் சேர்க்கப் பிரிட்டன் அதிகாரிகள் தொடர்ந்து முயற்சி எடுத்து வருவதாகச் சொல்லப்படுகிறது.
இந்தியர்களுக்கு சிக்கல்?
அதேநேரம் இது சட்டவிரோதமாகப் பிரிட்டனில் நுழைந்தவர்களுக்கு மட்டுமே பொருந்தும். சட்டப்பூர்வமாகப் பிரிட்டனில் நுழைந்த இந்தியர்கள் உட்பட வெளிநாட்டினருக்கு இந்தச் சட்டத்தால் எந்தவொரு சிக்கலும் இல்லை.
-
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications