'சளி' நல்லது.. கொரோனாவில் இருந்து காக்கும் ஜலதோஷம்.. அது எப்படி? ஆய்வாளர்கள் தரும் விளக்கம்

Subscribe to Oneindia Tamil

லண்டன்: ஓமிக்ரான் காரணமாக 3ஆம் அலை ஏற்படும் ஆபத்து உருவாகியுள்ள நிலையில், கொரோனா குறித்து சில முக்கிய ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.

கொரோனா பாதிப்பில் இருந்து நமது உலகம் இன்னும் முழுமையாக மீளவில்லை. வல்லரசு நாடுகள் கூட கொரோனா வைரசும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் எதிர்கொள்ளத் திணறி வருகின்றன.

தொடர்ந்து இந்த கொரோனா வைரஸ் உருமாறிக் கொண்டே இருப்பதால், இதைக் கட்டுப்படுத்துவது சவாலாக உள்ளது. சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா முதல் அலையை ஏற்படுத்தியது என்றால், ஆல்பா, டெல்டா, ஓமிக்ரான் அடுத்தடுத்த அலைகளை ஏற்படுத்தி வருகிறது.

 புதிய ஆய்வு

புதிய ஆய்வு

என்ன தான் கொரோனா பரவ தொடங்கி 2 ஆண்டுகள் முடிந்துவிட்டது என்றாலும் கூட ஒப்பீட்டளவில் இது புதிய வைரஸ் தான். எனவே, இது குறித்துக் கூடுதல் தகவல்களைத் தெரிந்துகொள்ள உலகெங்கும் பல்வேறு ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இதில் நமக்குப் பல முக்கிய தகவல்களும் கிடைத்து வருகிறது. அதன்படி பிரிட்டன் நாட்டின் அடுத்த தலைமுறை கொரோனா தடுப்பூசி குறித்தும் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பாற்றல் குறித்தும் ஆய்வுகள் நடத்தப்பட்டன.

 சாதாரண ஜலதோஷம்

சாதாரண ஜலதோஷம்

அதில் சாதாரண ஜலதோஷம் கொரோனாவுக்கு எதிரான தடுப்பாற்றலை அதிகப்படுத்துவதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். அதாவது நமது உலகில் பல வகையான கொரோனா வைரஸ்கள் உள்ளது. அதில் இப்போது நம்மை பெரும் பாடுபடுத்தி வருவது கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் தான். இவற்றில் சாதாரண ஜலதோஷத்தை ஏற்படுத்தும் கொரோனா வைரஸ் நமது உடலில் அதிக அளவு டி-செல்களை உற்பத்தி செய்வதால், அது கோவிட்-19க்கு எதிராக அதிக பாதுகாப்பை வழங்க முடிவதாகப் பிரிட்டன் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்

 டி செல்கள்

டி செல்கள்

கோவிட்-19 தொற்றுக்கு எதிரான தடுப்பாற்றல் என்பது சிக்கலான விஷயம்.ஒருவருக்கு வேக்சின் செலுத்தப்பட்ட பின்னர், 6 மாதங்களுக்குப் பிறகு ஆன்டிபாடி அளவு குறைந்து வருவது ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக கொரோனாவை அழிப்பதில் டி-செல்கள் முக்கிய பங்கு வகிக்கும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர். நமது உடலில் இருக்கும் எலும்பு மஜ்ஜையில் இருந்து உருவாகக் கூடிய ஒரு வகையான தடுப்பாற்றால் தரும் விஷயமே இந்த டி-செல்கள்.

 எப்படி சாத்தியம்

எப்படி சாத்தியம்

கடந்த 2020இல் செப். மாதம் பிரிட்டன் ஆய்வாளர்கள் இந்த ஆய்வை தொடங்கியுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பில் இருந்த 52 பேரின் உடல்களில் இருந்த டி-செல்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. அவர்கள் அதற்கு முன்பு தான் சாதாரண ஜலதோஷத்தில் இருந்து மீண்டு இருந்தனர். அவர்களில் 26 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. சொல்லி வைத்தாற் போல, 26 பேரின் உடலிலும் ஜலதோஷத்தால் உருவான டி-செல்களின் அளவு அதிகமாக இருந்ததை ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்.

வேக்சின்

வேக்சின்

இது குறித்து ஆய்வாளர் டாக்டர் ரியா குண்டு கூறுகையில், "ஜலதோஷம் போன்ற பிற கொரோனா வைரஸால் பாதிக்கப்படும்போது உடலில் டி-செல்கள் உருவாகும். இவை COVID-19 தொற்றுக்கு எதிராக நமக்குப் பாதுகாப்பை வழங்குகிறது என்பதை நாங்கள் கண்டறிந்தோம். எனவே, வேக்சின் ஆய்வாளர்களை இந்த முறையைப் பயன்படுத்தி வேக்சினை தயாரித்தால், அதை நம்மால் எளிதாகக் கட்டுப்படுத்த முடியும்." என்று அவர் தெரிவித்தார்.

Recommended Video

    Omicron 5 New Symptoms | AIIMS Delhi | Oneindia Tamil
     புதிய வேக்சின்

    புதிய வேக்சின்

    தற்போது பயன்பாட்டில் உள்ள பெரும்பாலான வேக்சின்கள் கொரோனாவின் வெளியே உள்ள புரோத ஸ்பைக்கை குறிவைத்தே உருவாக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கொரோனா உருமாறும் போது இந்த புரோத ஸ்பைக் பெருமளவு மாற்றமடைகிறது. எனவே, வேக்சின் தடுப்பாற்றல் குறைகிறது. இதைச் சமாளிக்கும் வகையில் வைரஸ்களில் இருக்கும் டிசெல்களை அழிக்கும் வகையிலான வேக்சின்களை கண்டறிந்தால், வைரஸ் உருமாற்றம் அடையும் போதும் வேக்சின் பயன் குறையாது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+