"எங்கு பார்த்தாலும் இந்தியர்கள் தான் இருக்காங்க.." லண்டனில் இனவெறி விஷத்தை கக்கிய அமெரிக்க யூடியூபர்
லண்டன்: பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள ஹீத்ரோ விமான நிலையம் தொடர்பாக அமெரிக்க யூடியூபர் வெளியிட்ட வீடியோ ஒன்று பேசுபொருளாகியுள்ளது. அதாவது அங்குப் பிரிட்டிஷ் நபர் யாரையுமே தன்னால் பார்க்க முடியவில்லை என்றும் இந்தியர்களே எல்லா பக்கமும் இருப்பதாக அவர் கூறிய கருத்துகள் சர்ச்சையாகியுள்ளது. அவர் இனவெறி கருத்துகளைக் கூறியுள்ளதாகப் பலரும் அவரை சாடி வருகிறார்கள்.
படிப்பு மற்றும் வேலைவாய்ப்பிற்காக இந்தியர்கள் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு நாடுகளுக்கும் செல்கிறார்கள். குறிப்பாகப் பிரிட்டனில் அதிகளவில் இந்தியர்கள் இருக்கிறார்கள். இதுபோல வெளிநாடுகளுக்குச் செல்லும் இந்தியர்கள் பல நேரங்களில் இன பாகுபாட்டையும் எதிர்கொள்ள நேரிடுகிறது. அப்படி தான் அமெரிக்க யூடியூபர் ஒருவர் இனவெறி கருத்துகளைக் கூறியிருக்கிறார்.

லண்டன் ஏர்போர்ட்
அதாவது லண்டனில் இருக்கும் ஹீத்ரோ விமான நிலையத்தில் இந்திய வம்சாவளி ஊழியர்களே அதிக எண்ணிக்கையில் இருப்பதாகவும் இது தனக்கு ஆச்சரியத்தைக் கொடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். உலகின் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றான ஹீத்ரோவில் தான் சில மணி நேரம் தங்க நேர்ந்ததாகவும் அங்கு ஒரு பிரிட்டிஷ் நபர்கூட வேலை செய்வதை தன்னால் பார்க்க முடியவில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார். "இம்மிகிரேட்புல்" என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் அந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் மக்கள் இல்லை
விமான நிலையத்தில் உள்ள செக்யூரிட்டி முதல் கடைகள், உதவி மையம் வரை தான் சந்தித்த ஒவ்வொரு ஊழியரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்று அவர் குறிப்பிடுகிறார். அவர்களின் பணிவும், செயல்திறனும் பாராட்டுக்குரியது என்ற போதிலும், பூர்வீக பிரிட்டிஷ்காரர் யாரும் ஏர்போர்ட்டில் வேலை செய்வதில்லையே ஏன் என்று அவர் கேள்வி எழுப்பினார்.
இது தொடர்பாக அந்த நபர் மேலும் கூறுகையில், "நான் இப்போது தான் லண்டனில் இறங்கினேன். விமான நிலையத்தில் இருக்கிறேன். நான் ஏர்போர்ட்டின் மையப் பகுதியைச் சுற்றி வருகிறேன். ஆச்சரியம் என்னவென்றால் இதுவரை ஏர்போர்ட்டில் வேலை செய்யும் ஒரு பிரிட்டிஷ் ஊழியரைக் கூட நான் பார்க்கவில்லை. நிஜமாகவே ஒருவர்கூட இல்லை. அவர்கள் அனைவரும் இந்தியர்களாக உள்ளனர்" என்றார்.
உள்ளூர்வாசிகளே வேண்டும்
தான் சொல்வது இனவெறி கருத்துகள் இல்லை என்று விளக்கமளித்த அந்த நபர், இங்கு உள்ளூர் மக்கள் யாரும் இல்லாதது குறித்தே தான் கேள்வி எழுப்புவதாகவும் அவர் குறிப்பிட்டார். தானும் ஒரு குடியேறிதான் என்று குறிப்பிட்ட அவர், எந்த நாட்டிற்குச் சென்றாலும் அங்குள்ள உள்ளூர்வாசிகளைப் பணியாளர்களாகக் காணவே விரும்புவதாக அவர் தெரிவித்தார்.
அந்த நபர் மேலும் கூறுகையில், "நான் அமெரிக்கா செல்லும்போது அங்கு அமெரிக்கர்களையே பார்க்க விரும்புகிறேன். எனது நாட்டில் வேலை செய்யும் அனைவரும் வேறு ஒரு நாட்டை சேர்ந்தவராக இருக்க வேண்டும் என நான் விரும்பவில்லை" என்றும் அவர் கூறினார். இந்த வீடியோ இணையத்தில் டிரெண்டானது. ஒரு தரப்பினர் அவர் சொல்வது சரி தான் என்று கூறி வருகிறார்கள்.
இனவெறி கருத்து
அதேநேரம் மற்றொரு தரப்பினர் அவரை மிகக் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். இனவெறி கருத்துகள் இல்லை என சொல்லிக் கொண்டாலும் கூட அந்த நபர் இனவெறியைப் பரப்பும் வகையிலேயே பேசியிருப்பதாக அவர்கள் குறிப்பிட்டனர். மேலும், சிலர் "ஒரு விஷயத்தை நீங்கள் முதலில் புரிந்து கொள்ளுங்கள்.. பிரவுன் நிறத்தில் இருக்கும் அனைவரும் இந்தியர்கள் அல்ல. எல்லா ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்களும் பிரவன் நிறத்தில் தான் இருப்பார்கள்" என்றார்.
மற்றொரு நபரும் கிட்டத்தட்ட அதே கருத்தைக் கூறியிருக்கிறார். அந்த நபர், "அவர்கள் பாகிஸ்தானியர்களாகவோ அல்லது பங்களாதேஷிகளாகவோ இருக்கலாம். அவர்கள் ஒரே மாதிரியாக தோற்றமளிப்பதால் அனைவரும் இந்தியர்கள் என்று அர்த்தமில்லை. அப்படி உங்கள் வாதப்படி பார்த்தால் நான் அமெரிக்காவில் வெள்ளை இன மக்களைப் பார்க்கக் கூடாது.. பூர்வீக அமெரிக்கர்களை மட்டுமே எதிர்பார்க்க வேண்டும்" என்று கூறினார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications