லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அடிக்கிற ஆடிக் காத்துல.. இங்கிலாந்து பிரதமரின் குடையே பறக்குது பாருங்க !

Google Oneindia Tamil News

லண்டன்: பணியின் போது இறந்த காவலர்களுக்கு அவர்களின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தும் போது அதிக காற்றால் குடையை பிடிக்க இங்கிலாந்து பிரதமர் போரீஸ் ஜான்சன் போராடினார். இதை பார்த்த அங்கிருந்தோர் பட்டும் படாமல் சிரித்தனர்.

இங்கிலாந்தில் பணியின் போது இறந்த போலீஸ் அதிகாரிகளின் நினைவிடத்தில் அவர்களது தியாகத்தை அங்கீகரிக்கும் வகையில் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

வயிறு எரியுதா.. நல்லா எரியட்டும்.. கீழடி ஆய்வை நிறுத்த மாட்டோம்.. விட்டு விளாசிய தங்கம் தென்னரசு!வயிறு எரியுதா.. நல்லா எரியட்டும்.. கீழடி ஆய்வை நிறுத்த மாட்டோம்.. விட்டு விளாசிய தங்கம் தென்னரசு!

போரீஸ் ஜான்சன்

போரீஸ் ஜான்சன்


இந்த நிகழ்வுக்கு பிரிட்டன் பிரதமர் போரீஸ் ஜான்சன், இளவரசர் சார்லஸ் உள்ளிட்டோர் வெட்டவெளியில் இறந்த காவலர்களின் நினைவிடத்தில் அமர்ந்திருந்தனர். அப்போது அந்த பகுதியில் பலத்த காற்று இருந்தது. இதனால் அந்த நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் கையில் குடையுடன் அமர்ந்திருந்தனர்.

குடை

குடை

எல்லாரையும் போல்தான் போரீஸ் ஜான்சனும் குடை பிடித்திருந்தார். ஆனால் என்னவோ தெரியவில்லை, அவரது கெட்ட நேரம், அந்த தலைவருக்கு குடை கூட "அடிபணிய" மறுத்துவிட்டது. குடையை விரிப்பதற்கு போரீஸ் போராடுகிறார். அவருக்கு பின்னால் இருந்தவர்கள் பயந்து பயந்து சிரிக்கிறார்கள்.

தானாக மடங்கிய குடை

பின்னர் குடையை எப்படியோ விரித்தார். ஆனால் தானாக மடங்கி கொண்டது. பின்னர் குடையை இரு கைகளாலும் முட்டுக் கொடுத்து பிடித்திருந்தார். அவரது நிலையை பார்த்து அவருக்கே சிரிப்பு வந்தது. கடைசியில் சேட்டிலைட் டிஷ் போல குடை மேற்பக்கமாக விரிந்து கொண்டது.

இளவரசர்

இளவரசர்

ஆனால் இந்த ரணகளத்திலும் அவர் இளவரசர் சார்லஸின் குடையை பார்க்கிறார். அவருக்கு மட்டும் அப்படியே நிற்கிறதே, நமக்கு மட்டும் ஏன் படியவில்லை என்பது போல் பார்க்கிறார். இவரது செயல்களை பார்த்த இளவரசர் சார்லஸும் சிரிக்கிறார். 15 நிமிடங்களாக இப்படியே போரீஸ் போராடியதை பார்த்து மெல்ல சிரித்து கொண்டிருந்தார்கள். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிறது.

English summary
Britain PM Boris Johnson struggles with an umbrella ended in laughs.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X