Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"எங்க நாட்டை விட்டு ஓடுங்க!" லண்டனை தாக்கிய மக்கள் சுனாமி.. நடுவே வந்து விஷத்தை கக்கிய எலான் மஸ்க்

Subscribe to Oneindia Tamil

லண்டன்: பிரிட்டன் தலைநகர் லண்டனில் நேற்றைய தினம் குடியேற்றத்திற்கு எதிராக மிகப் பெரிய போராட்டம் நடந்தது. இதில் குடியேறிகளுக்கு எதிராக மோசமான முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இனவெறி கருத்துகளையும் பரவலாகப் பார்க்க முடிந்தது. பிரிட்டனில் சமீப காலத்தில் நடந்த மிகப் பெரிய போராட்டமாக இது இருக்கிறது. இந்த போராட்டம் எப்படி நடந்தது.. இதன் பின்னணி குறித்து நாம் பார்க்கலாம்.!

பிரிட்டன் நாட்டில் நேற்று சனிக்கிழமை மிகப் பெரிய போராட்டம் நடந்தது. பிரிட்டன் தலைநகர் லண்டன் நகரில் நடந்த இந்த மாபெரும் போராட்டத்தில் சுமார் 1.5 லட்சம் பேர் கலந்து கொண்டனர். பிரிட்டனை ஒன்றிணைப்போம்.. நாட்டை மீட்போம் உள்ளிட்ட கோஷங்களுடன் அவர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். பிரிட்டனில் சமீப காலத்தில் நடந்த பெரிய மக்கள் போராட்டமாக இது இருக்கிறது.

What happened in Anti-Immigration Rally as 1 5 lakh people March in London Led by Tommy Robinson

டாமி ராபின்சன்

தீவிர வலதுசாரி ஆர்வலர் டாமி ராபின்சன் என்பவர் இந்த போராட்டத்தை ஒருங்கிணைத்து இருக்கிறார். இங்கிலாந்தில் சமீப காலமாகவே குடியேற்றத்திற்கு எதிரான மனநிலை அதிகரித்து வரும் சூழலில், அதைப் பிரதிபலிக்கும் வகையில் இந்த போராட்டம் இருந்துள்ளது. பிரிட்டனில் புகலிடம் கோரும் அகதிகள் தங்கம் ஹோட்டல்களை பல்வேறு சிறிய போராட்டங்கள் ஏற்கனவே நடந்த நிலையில், அதன் தொடர்ச்சியாகவே இந்த மெகா போராட்டம் நடந்துள்ளது. தேசிய கொடியோடு வீதிக்கு வந்த போராட்டக்காரர்கள், "எங்கள் நாடு மீண்டும் வேண்டும்" என்று முழக்கமிட்டனர்.

இங்கிலீஷ் கால்வாய் வழியாகப் பிரிட்டனுக்கு வரும் வெளிநாட்டு அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள சூழலில், இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. படகுகளை வருவோரைத் தடுத்து நிறுத்தி அவர்களை அப்படியே திருப்பி அனுப்புங்கள் என்று கோஷமிட்டனர். எங்கள் குழந்தைகளைக் காப்பாற்ற இவர்களைத் திருப்பி அனுப்ப வேண்டும் என்ற கோஷத்தையும் அவர்கள் எழுப்பியுள்ளனர். மேலும், அந்நாட்டின் பிரதமர் கீர் ஸ்டார்மருக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டது.

வன்முறை போராட்டம்

பிரிட்டனில் சத்தமில்லாமல் பெரிய இடப்பெயர்ச்சிக்கு நடப்பதாகவும் கட்டுப்பாடற்ற குடியேற்றத்தால் பிரிட்டன் அழிவதாகவும் அவர்கள் சாடியுள்ளனர். மேற்கத்திய நாடுகளையும் மத்திய கிழக்கு நாடுகளைப் போல ஆக்கவே இதுபோல செய்வதாகவும் அவர்கள் சாடினார். மேலும், சில குறிப்பிட்ட கொடிகளை நடுரோட்டில் வைத்துக் கிழித்தும் தங்கள் எதிர்ப்புகளை பதிவு செய்தனர். பொருளாதார ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் பிரிட்டனை மீட்டெடுப்பதே தங்கள் உணர்வு எனப் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

போராட்டத்தில் கலந்து கொண்ட மிட்செல் என்பவர், "நாங்கள் எங்கள் நாட்டை மீட்டெடுக்க விரும்புகிறோம், எங்கள் பேச்சு சுதந்திரத்தை மீண்டும் பெற விரும்புகிறோம். சட்டவிரோத குடியேற்றத்தை இந்த நாட்டிற்குள் நிறுத்தியே ஆக வேண்டும்.. சொந்த நாட்டு மக்களான எங்களையே ஒடுக்க முயல்கிறார்கள். இது என்னுடைய நாடு.. இது மீண்டும் எனக்குத் தேவை" என்று கூறினார்.

விஷத்தை கக்கிய எலான் மஸ்க்

அதேபோல உலகின் மிக பெரிய பணக்காரரும் தீவிர வலதுசாரி ஆதரவாளருமான எலான் மஸ்கும் அமெரிக்காவில் இருந்தபடி வீடியோ கான்பரன்சிங் மூலம் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றார். அங்கு அவர் பேசியது பெரும் சர்ச்சையாக வெடித்தது. அதாவது எலான் மஸ்க், "நீங்கள் வன்முறையைத் தேர்வு செய்தாலும் இல்லாவிட்டாலும், வன்முறை உங்களை நோக்கி வருகிறது. நீங்கள் எதிர்த்துப் போராட வேண்டும் அல்லது இறக்க வேண்டும், அதுதான் உண்மை

பிரிட்டிஷ் நாட்டின் குடிமகனாக இருப்பதில் எப்போதும் ஒரு சிறப்பு உள்ளது.. ஆனால், இப்போது இங்கு நடப்பதை நான் பிரிட்டனின் அழிவாகப் பார்க்கிறேன்.. ஆரம்பத்தில் மெதுவாக தொடங்கிய இந்த அழிவு, கட்டுப்பாடற்ற பெரும் குடியேற்றத்தால் வேகமாகப் பிரிட்டனை அழிக்கிறது" என்றார். மேலும், கீர் ஸ்டார்மர் அரசை உடனடியாக கலைக்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.

ஆளும் தரப்பு

அதேநேரம் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆளும் தொழிலாளர் தரப்பினர் பெரிதாகப் பதில் எதுவும் சொல்லவில்லை. பிரிட்டன் பிரதமர் ஸ்டார்மர் தனது மகனுடன் கால்பந்து விளையாட்டைப் பார்த்துக் கொண்டிருந்தார். பெரும்பாலான ஆளும் தரப்பு தலைவர்கள் இது குறித்து கருத்துச் சொல்லவில்லை. அதேநேரம் சிலர் எலான் மஸ்கின் வன்முறை தூண்டும் பேச்சை மட்டும் கண்டித்தனர்.

மேலும், இந்த போராட்டத்தில் 1.10 லட்சம் பேர் பங்கேற்றதாகப் போராட்டத்தை நடத்தியவர்கள் சொன்னார்கள். ஆனால், உண்மையில் அவ்வளவு பேர் வரவில்லை என்றும் குறைவான எண்ணிக்கையிலேயே மக்கள் வந்ததாக லண்டன் அதிகாரிகள் தெரிவித்தனர். குடியேற்றத்திற்கு எதிராக இந்த போராட்டம் நடந்த சூழலில், ஸ்டாண்ட் அப் டு ரேசிசம் என்று இதற்கு எதிர் போராட்டமும் லண்டனில் நடந்தது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+