கருணை கொலை மட்டுமே ஒரே தீர்வு! நாயில் இருந்து மனிதர்களுக்கு பரவிய புது நோய்! குணப்படுத்தவே முடியாதாம்

Subscribe to Oneindia Tamil

லண்டன்: பிரிட்டன் நாட்டில் குணப்படுத்தவே முடியாத மிக மோசமான நோய்ப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்குள்ள நாய்களிடம் இருந்து இந்த நோய்ப் பாதிப்பு மனிதர்களுக்குப் பரவியதாகத் தெரிகிறது.

கொரோனாவை நாம் யாரும் அவ்வளவு சீக்கிரம் மறக்க மாட்டோம். கடந்த 2019 இறுதியில் சீனாவில் முதலில் கொரோனா பாதிப்பு பரவ தொடங்கிய நிலையில், அது நம்மை வைத்துச் செய்துவிட்டது.

 What is Brucella Canis the Incurable Dog Disease that Spreads To Humans In England

அந்த பாதிப்பில் இருந்து வெளியே வரவே சில ஆண்டுகள் வரை ஆனது. இந்த நூற்றாண்டில் ஏற்பட்ட மிக மோசமான ஒரு பாதிப்பாக அது கருதப்படுகிறது. உலக நாடுகள் அனைத்துமே இதன் காரணமாக முடங்கிப் போனது.

புது நோய்ப் பாதிப்பு: இதற்கிடையே பிரிட்டன் நாட்டில் மற்றொரு கொடூரமான நோய் பரவியுள்ளது. இந்த முறை நாயில் இருந்து இந்த நோய் மனிதர்களுக்குப் பரவியுள்ளது. பிரிட்டன் நாட்டை சேர்ந்த 3 பேர் இந்த புருசெல்லா கேனிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோயைக் குணப்படுத்தவே முடியாது என்பதே இதில் உள்ள மிகப் பெரிய பிரச்சினை.. இதற்கு முன்பு பிரிட்டன் நாட்டில் இருந்த நாய்கள் மத்தியில் இப்படியொரு நோய்ப் பாதிப்பு இருந்ததே இல்லை.

இந்தச் சூழலில் தான் திடீரென இந்த நோய் அங்கே மனிதர்களுக்கும் பரவியிருக்கிறது. பாக்டீரியா தொற்றால் ஏற்படும் இந்த பாதிப்பு பாதிக்கப்பட்ட நாய்களுக்கு மலட்டுத்தன்மை, நடப்பதில் சிக்கல் மற்றும் அசவுகரியத்தை ஏற்படுத்தும்.. மற்ற தொற்று நோய்களைப் போலவே இதுவும் பாதிக்கப்பட்ட நாய்களிடம் இருந்து வெளிவரும் எச்சில், சிறுநீர் போன்ற திரவங்கள் மூலம் மனிதர்களுக்குப் பரவுகிறது.

முதல்முறை: கடந்த 2020ஆம் ஆண்டு முதலே பிரிட்டன் நாட்டில் இருக்கும் நாய்களுக்கு மத்தியில் இதுபோன்ற பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. இருப்பினும், அது மனிதர்களுக்குப் பரவுவது இதுவே முதல்முறையாகும். புருசெல்லா கேனிஸ் என்ற இந்த பாதிப்பு கிழக்கு ஐரோப்பாவிலிருந்து இங்கிலாந்துக்குப் பரவியதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.

இந்த பாதிப்பு இப்போது பிரிட்டன் அதிகாரிகளுக்கு பெரும் தலைவலியாக மாறியிருக்கிறது. இது மேலும் மேலும் பரவினால் பொதுச் சுகாதாரத்திற்குப் பெரிய பிரச்சினையாக மாறும் என்று எச்சரிக்கிறார்கள். இதனால் பிரிட்டிஷ் கால்நடை மருத்துவ சங்கம் நாய் உள்ளிட்ட செல்ல பிராணிகளை வைத்திருப்போருக்கு சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர்.

எப்படிப் பரவும்: அசுத்தமான பொருட்களில் இருந்து இந்த புருசெல்லா கேனிஸ் பாதிப்பு வேகமாகப் பரவும்.. குறிப்பாக இனப்பெருக்கம் மற்றும் பிரசவம் சமயத்தில் நாய்களிடம் இருந்து வெளிப்படும் திசுக்கள் மற்றும் திரவங்கள் மூலம் இது பரவும் ஆபத்து மிக மிக அதிகம். நாய்களின் சிறுநீர், ரத்தம் மற்றும் உமிழ்நீர் போன்ற நாயின் உடல் திரவங்கள் மூலமும் புருசெல்லா கேனிஸ் பரவும்.

இந்த பாதிப்பு ஒரு முறை ஏற்பட்டாலும் அந்த நாய் வாழ்நாள் முழுவதும் பாதிக்கப்பட்டதாகக் கருதப்படும். ஆண்டிமைக்ரோபியல் சிகிச்சை அளித்தாலும் கூட அவை முழுமையாகக் குணமடையாது. பெரும்பாலும் நாய்களுக்கு மட்டுமே இந்த பாதிப்பு ஏற்படும். மனிதர்களுக்கு மிக அரிதாகவே ஏற்படும். இந்தச் சூழலில் தான் இந்த பாதிப்பு அங்கே மனிதர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

கருணை கொலை மட்டுமே ஒரே தீர்வு: நாய்களுக்கு இந்த நோய் ஏற்படும் போது அதைக் குணப்படுத்தவே முடியாது. நாய் வாழ்நாள் முழுக்க இந்த நோயுடன் வாழ வேண்டும். அதன் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டும். இதனால் இந்த பாதிப்பு ஏற்படும் நாய்களை கருணைக்கொலை செய்யப் பரிந்துரை அளிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் மனிதர்களுக்கு ஏற்படும் இந்த பாதிப்பிற்குச் சிகிச்சை இருக்கிறது. இருப்பினும், அது நீண்ட நாட்கள் எடுத்துக் கொள்ள வேண்டியதாக இருக்கிறது.

நாய்களுக்கு எந்தளவுக்குச் சிகிச்சை அளித்தாலும் வாழ்நாள் முழுக்க அதன் உடலில் இந்த பாக்டீரியா பாதிப்பு இருக்கும். இதனால் எப்போது வேண்டுமானாலும் அவை மனிதர்களுக்குப் பரவும் ஆபத்து இருக்கிறது. கருணை கொலை செய்தால் மட்டுமே பாக்டீரியா பாதிப்பைத் தடுத்து நிறுத்த முடியும். இதன் காரணமாகவே இந்த பாக்டீரியா பாதிப்பு ஏற்பட்ட நாய்களைக் கருணை கொலை செய்ய அந்நாட்டு அரசு பரிந்துரைக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+