அம்மாடியோவ்.. ஒரு இறுதி சடங்கிற்கு மட்டும் இத்தனை ஆயிரம் கோடியா.. பிரிட்டன் ராணினா சும்மாவா!
லண்டன்: பிரிட்டன் நாட்டில் மிக நீண்ட காலம் தலைமை பொறுப்பில் இருந்தவர் என்றால் அது ராணி எலிசபெத் தான். அவரது இறுதிச் சடங்கு குறித்து இப்போது சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிரிட்டன் நாட்டில் இப்போது மக்களாட்சி முறையே நடைபெற்று வருகிறது என்ற போதிலும் அரச குடும்பத்தினருக்கும் அங்கே அதீத மரியாதை அளிக்கப்படுகிறது. இவர்கள் அரசு நடைமுறைகளில் தலையிடுவதில்லை.

இருந்த போதிலும், அரச குடும்பத்தினர் எப்போதும் புகழ் வெளிச்சத்திலேயே இருப்பார்கள். மேலும், அரச குடும்பத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் பிரிட்டன் அரசிடம் இருந்து குறிப்பிட்ட தொகை மானியம் செல்லும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
ராணி எலிசபெத்: இப்படி அங்கே அரச குடும்பம் எப்போதும் முக்கிய இடத்திலேயே இருந்துள்ளன. அப்படிப்பட்ட அரச குடும்பத்தில் மிக நீண்ட காலம் தலைமை பொறுப்பில் இருந்தவர் என்றால் அது ராணி எலிசபெத் தான். 1952ஆம் ஆண்டு முடிசூட்டப்பட்ட எலிசபெத், முதல் சுமார் 60 ஆண்டுகள் பிரிட்டன் ராணியாக இருந்தார். பிரிட்டன் வரலாற்றில் மிக அதிக காலம் ராணியாக இருந்தவர் என்ற சிறப்பை பெற்றிருந்தார்.
96 வயதான ராணி எலிசபெத், கடந்த செப். மாதம் உயிரிழந்தார். ஸ்காட்லாந்து அரண்மனையில் ஓய்வெடுக்க அவர் சென்றிருந்த நிலையில், அங்கேயே அவர் உயிரிழந்தார். ராணி எலிசபெத் மரணத்திற்கு 10 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்பட்டது. மேலும், பொதுமக்களும் ராணிக்கு இறுதி மரியாதை அளித்தனர். இதையடுத்து அவரது உடல் வெஸ்ட்மின்ஸ்டர் அபே தேவாலயத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, மதச் சடங்குகள் நடைபெற்றன.
இறுதிச் சடங்கு: அது முடிந்த பிறகு, வின்ட்சர் கோட்டைக்கு எடுத்துச் செல்லப்பட்டு ராயல் வாலட்டில் இறக்கப்பட்டது. இந்த இறுதிச் சடங்கு நிகழ்வில் சுமார் 2.50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர். மேலும், இவை அனைத்தும் நேரடியாக டிவியில் ஒளிபரப்பப்பட்டது. உலகெங்கும் இருந்து மக்கள் அதைப் பார்த்துள்ளனர். இதன் பிறகு ராணியின் உடல் நல்லடக்கம் நிகழ்வு தனியாக நடைபெற்றது. பொதுமக்கள், ஊடகங்களுக்கு அதில் அனுமதி இல்லை.
அரச குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்ட அந்த நிகழ்வில், ராணியின் உடல் கிங் ஜார்ஜ் நினைவு சேப்பலில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது கணவர் பிலிப்பின் உடலும் ராயல் வால்ட்டில் இருந்து எடுக்கப்பட்டு ராணியின் உடல் அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது. பிரிட்டன் நா் நாட்டில் சமீபத்தில் நடந்த மிக முக்கிய இறுதிச் சடங்கு நிகழ்வாக இது கருதப்படுகிறது. இதனிடையே இது குறித்து சில கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளது.
செலவு: அதாவது ராணி எலிசபெத் இறுதிச் சடங்கு மற்றும் நல்லடக்கத்திற்கு மட்டும் பிரிட்டன் அரசு 200 மில்லியன் டாலர்களைச் செலவிட்டதாக அந்நாட்டின் கருவூலம் தெரிவித்துள்ளது. இது இந்திய மதிப்பில் ரூ.1600 கோடியாகும். "இந்த நிகழ்வுகள் சுமுகமாகவும் கண்ணியத்துடனும் நடத்தப்பட வேண்டும் என்பதே அரசின் முன்னுரிமையாக இருந்தது. அதன்படியே இறுதிச் சடங்கு நடைபெற்றது. மேலும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது" என்றார்.
ராணி எலிசபெத் இறுதிச் சடங்கில் பாதுகாப்புக்கு மட்டும் $7.5 மில்லியன் (இந்திய மதிப்பில் ரூ. 62 கோடி) செலவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. வெஸ்ட்மின்ஸ்டர் ஹாலில் ராணி எலிசபெத் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டிருந்தது. சிலர் 30 மணி நேரம் வரை காத்திருந்து கூட அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். அதற்குத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளும் கூடச் செய்யப்பட்டிருந்தது.
ராணி எலிசபெத் உயிரிழப்பைத் தொடர்ந்து அங்கே வங்கிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. பிரிட்டன் முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் 1965 இல் உயிரிழந்த போகு வங்கிகளுக்கு விடுமுறை அளித்திருந்தார்கள். அதன்பிறகு மீண்டும் வங்கிகளுக்கும் சேர்ந்து விடுமுறை அளிப்பது இதுவே முதல்முறையாகும்.
ராணியின் மறைந்த கணவர் பிலிப் கடந்த 2021இல் தனது 99 வயதில் உயிரிழந்தார். அப்போது கொரோனா கட்டுப்பாடுகள் இருந்ததால் இறுதிச் சடங்கு நிகழ்வு மிக சிம்பிளாக நடந்தது குறிப்பிடத்தக்கது.

ராணி அன்னை 2002இல் உயிரிழந்த நிலையில், அவரது இறுதிச் சடங்கிற்கு அந்த நேரத்தில் $6 மில்லியன் (ரூ. 49 கோடி) செலவிடப்பட்டது. இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மரணத்தைத் தொடர்ந்து, சார்லஸ் அரசர் முடிசூட்டப்பட்டார். இதற்காகத் தனியாக $125 மில்லியன் (10 ஆயிரம் கோடி) செலவிட்டு முடிசூட்டு விழா நடந்தது. இது அதிகம் என்பது போலத் தோன்றினாலும் 1953இல் ராணி எலிசபெத் முடிசூட்டு விழாவுடன் ஒப்பிடும் போது இது சிம்பிளாகவே இருந்துள்ளது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications