அலர்ட்! 30 நிமிடத்திற்கு மேல் போன் யூஸ் பண்றீங்களா.. உங்களுக்கு மாரடைப்பு வர வாய்ப்பு அதிகமாம்
லண்டன்: ஒரு வாரத்தில் நீங்கள் 30 நிமிடங்களில் மேல் மொபைல் போனில் பேசினால் அது பல விதமான பாதிப்புகளை ஏற்படுத்துமாம். இது குறித்த ஆய்வு முடிவு ஒன்று சமீபத்தில் வெளியாகியுள்ளது.
இந்த நவீனக் காலத்தில் எல்லாமே மொபைல் என்று மாறிக் கொண்டே இருக்கிறது. ஷாப்பிங் முதல் டேட்டிங் வரை அனைத்தையும் இப்போது மொபைல் மூலமே செய்யலாம் என்ற நிலையே உருவாகியுள்ளது.
இங்கே பலருக்கும் கூட மொபைலை வீடுகளிலேயே மறந்து வந்துவிட்டால் அன்றைய நாளே ஓடாது. எத்தனை கால் வந்திருக்குமோ.. எத்தனை மெசேஞ் வந்து இருக்குமோ என்றே பலரும் யோசித்துக் கொண்டிருப்பார்கள்.

மொபைல்: இதனிடையே மொபைல் பயன்பாடு எந்தளவுக்கு ஆபத்தானது என்பதை விளக்கும் வகையிலான ஆய்வு முடிவு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது ஒரு வாரத்திற்கு 30 நிமிடங்கள் அல்லது அதற்கு மேல் மொபைல் போனில் பேசுவது உயர் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும் வாய்ப்பை அதிகரிப்பதாகக் கூறப்பட்டுள்ளது. அதிகம் போன் பேசினால் 12% வரை ரத்த அழுத்தத்தை அதிகரிப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
உலகளவில் 10 வயதுக்கு மேலானவர்களில் சுமார் 75% பேரிடம் மொபைல் போன்களை வைத்திருக்கிறார்கள். மொபைல் போன்கள் குறைந்த அளவிலான ரேடியே அலைகளை வெளியிடுகிறது இது ரத்த அழுத்தம் அதிகரிக்கக் காரணமாக இருப்பதாக அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. உலகளவில் உயர் ரத்த அழுத்தம் காரணமாக ஏற்படும் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஆகியவை தான் உயிரிழப்புகளை அதிகப்படுத்துகிறது.

இதய ஆரோக்கியம்: இது குறித்து சீனாவின் குவாங்சோவில் உள்ள தெற்கு மருத்துவ பல்கலைக்கழகத்தின் ஆய்வு ஆசிரியர் சியான்ஹுய் கின் கூறுகையில், "மக்கள் எத்தனை நேரம் மொபைலில் பேசுகிறார்கள் என்பதற்கும் இதய ஆரோக்கியத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. அதிக நேரம் மொபைலில் போன் பேசினால்.. அது நமது இதய பாதிப்பை அதிகப்படுத்துகிறது" என்று அவர் தெரிவித்தார்.
இது தொடர்பான ஆய்வு முடிவுகள் ஐரோப்பிய ஆய்வு இதழில் வெளியிடப்பட்டுள்ளது. பிரிட்டன் பயோபேங்க்கின் டேட்டாவை வைத்து தொலைப்பேசி அழைப்புகள், உயர் ரத்த அழுத்தம் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பை இவர்கள் ஆராய்ந்துள்ளனர். 37 முதல் 73 வயதுடைய மொத்தம் 212,046 பேரிடம் இந்த ஆய்வை நடத்தியுள்ளனர்.
அவர்கள் ஒரு நாளைக்கு மற்றும் ஒரு வாரத்திற்கு எத்தனை நேரம் பேசுகிறார்கள், ஸ்பீக்கர் மூலம் எத்தனை நேரம் பேசுகிறார்கள் என்பது குறித்த தகவல்களை எல்லாம் பெற்றுள்ளனர்.
இந்த ஆய்வை அவர்கள் ஏதோ சில மாதங்கள் மட்டும் செய்யவில்லை. சுமார் 12 ஆண்டுகள் இந்த ஆய்வை தொடர்ந்து செய்துள்ளனர். அதில் 13,984 பேர், அதாவது 7 சதவீதம் பேருக்கு உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டுள்ளது

ரத்த அழுத்தம்: மொபைலை குறைவாகப் பயன்படுத்துவோருடன் ஒப்பிடுகையில் அதிகம் பயன்படுத்துவோருக்கு உயர் ரத்த அழுத்தம் ஏற்படும் ஆபத்து 7 சதவீதம் அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது. மேலும், ஒரு வாரத்திற்கு 30 நிமிடங்கள் அல்லது அதற்கு மேல் மொபைலில் பேசுபவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் ஏற்படும் வாய்ப்பு 12 சதவீதம் அதிகமாக உள்ளது.
ஒரு வாரத்தில் 30-59 நிமிடங்கள் நிமிடங்கள் பயன்படுத்தினால் உயர் ரத்த அழுத்தம் ஏற்பட 8 சதவீத வாய்ப்பு உள்ளது. அதேபோல 1-3 மணி நேரம் பயன்படுத்தினால் 13 சதவீதமும், 4-6 மணி நேரம் பயன்படுத்தினால் 16 சதவீதமும் உயர் ரத்த அழுத்தம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அதேபோல 6 மணி நேரத்திற்கும் மேல் பேசினால் 25 சதவீதம் உயர் ரத்த அழுத்தம் ஏற்படும் ஆபத்து இருக்கிறது.
அதேபோல ஸ்பீக்கர் போட்டுப் பேசுவதாலோ அல்லது இயர் போன் பயன்படுத்துவதாலே உயர் ரத்த அழுத்தம் பெரியளவில் குறையவில்லை என்பதும் இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதிக மரபணு ஆபத்து உள்ளவர்கள் 30 நிமிடங்கள் மொபைல் போனில் பேசினால், உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்பு 33 சதவீதம் அதிகமாக இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இன்னும் பல ஆய்வுகள் நடத்த வேண்டும் என்றும் அப்போது தான் இது குறித்துத் தெளிவாகத் தெரிய வரும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
-
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
"இது வெறும் தொடக்கம் தான்.." டெல்லியை அதிர வைத்த கரப்பான் பூச்சி கட்சியின் அடுத்த திட்டம்! பகீர் -
இந்தியாவை அச்சுறுத்தினால் கடும் விளைவுகளை ஏற்படுத்தும்.. எச்சரித்த ரஷ்ய அதிபர் புதின் -
"நாளைக்கு வரோம்.. களத்தை அதிர வைக்கிறோம்!" டெல்லியை மிரள வைக்க கிளம்பிய கரப்பான் பூச்சி கட்சி! -
புலிப் பாய்ச்சல்.. உலக அரங்கில் தலைநிமிரும் இந்தியா! எதிர்பார்ப்புகளை கடந்த பிரம்மாண்ட GDP வளர்ச்சி! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்?












Click it and Unblock the Notifications