"மனைவியின் மகிமை!" ரிஷி சுனக் பிரிட்டன் பிரதமரானது எப்படி.. ஓப்பனாக பேசிய மாமியார்.. ஒரே பூரிப்பு
லண்டன்: பிரிட்டன் நாட்டின் பிரதமராக இருக்கும் ரிஷி சுனக்கின் மாமியார் சுதா மூர்த்தி தனது மருமகன் பிரதமர் ஆனது குறித்து சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
பிரிட்டன் நாட்டின் பிரதமராக இப்போது ரிஷி சுனக் உள்ளார். கடந்த ஆண்டு பிரிட்டனில் அடுத்தடுத்து இரு பிரதமர்கள் ராஜினாமா செய்து இக்கட்டான சூழல் ஏற்பட்ட போது ரிஷி சுனக் பிரதமர் பதவிக்கு வந்தார்.
பிரிட்டன் நாட்டின் இளம் வயது பிரதமர், பிரிட்டன் பிரதமர் பதவிக்கு வந்த முதல் இந்து என்று பல்வேறு சிறப்புகளை இவர் கொண்டுள்ளார். பிரிட்டன் பொருளாதாரத்தை மீட்க இவர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

அக்ஷதா மூர்த்தி: ரிஷி சுனக்கின் மனைவி தான் அக்ஷதா மூர்த்தி. இவர் இன்போசிஸ் நிறுவனர்களில் ஒருவரான நாராயண மூர்த்தியின் மகள் ஆவர். ரிஷி சுனக்கும் அக்ஷதா மூர்த்தியும் ஒரே கல்லூரியில் படித்த நிலையில், அப்போது தான் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. ரிஷி சுனக்கும் அக்ஷதா மூர்த்திக்கும் இடையேயான திருமணம் கூட பெங்களூரில் தான் நடந்தது. அதேபோல அக்ஷதா மூர்த்திக்கும் இன்னும் இன்போசிஸில் குறிப்பிட்ட அளவுக்குப் பங்குகள் இருக்கிறது.
இதனிடையே பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கின் மாமியார் சுதா மூர்த்தி சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்றில் பல முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அதாவது மகள் அக்ஷதா மூர்த்தி தான் ரிஷி சுனக்கை பிரதமராக்கியதாகத் தெரிவித்துள்ளார். ரிஷி சுனக் மிக வேகமாகப் பிரதமர் பதவிக்கு வந்தது கடந்த காலங்களிலும் பேசுபொருள் ஆகியுள்ளது. இதனிடையே தனது மகள்தான் அதற்குக் காரணம் என்று சுதா மூர்த்தி கூறியுள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
மனைவியின் மகிமை: இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. அதில் அவரது மாமியார் சுதா மூர்த்தி, தனது மகளால் தான் ரிஷி சுனக் பிரிட்டனில் இவ்வளவு இளைய வயதில் பிரதமரானார் என்று கூறுகிறார். அந்த வீடியோவில் சுதா மூர்த்தி, "நான் எனது கணவரைத் தொழிலதிபர் ஆக்கினேன். இப்போது எனது மகள் அவரது கணவரைப் பிரிட்டன் நாட்டின் பிரதமர் ஆக்கியுள்ளார். இதற்கெல்லாம் மனைவியின் மகிமை தான் காரணம்.
மனைவி எப்படி கணவனை மாற்ற முடியும் என்று பாருங்கள். நான் என் கணவரைத் தொழிலதிபராக்கினேன், என் மகள் அவரது கணவனைப் பிரதமர் ஆக்கினார்" என்றார். ரிஷி சுனக் 2009 இல் அக்ஷதா மூர்த்தியை மணந்தார், அதன்பிறகு உண்மையில் சுனக்கின் அரசியல் வாழ்க்கை ஏறுமுகமாகவே இருந்தது. பிரிட்டனில் முக்கிய துறைகளில் அமைச்சராக இருந்த அவர், கடந்தாண்டு பிரதமராகவும் பதவியேற்றார்.

வெறும் 7 வருடம்: 7400 கோடி ரூபாய் சொத்துகளைக் கொண்ட அக்ஷதா மூர்த்தி இப்போது பிரிட்டனில் சக்திவாய்ந்த பெண்மணியில் ஒருவர்.. அக்ஷதா மூர்த்தியின் தந்தை நாராயண மூர்த்தி இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவர் ஆவர். உலக புகழ்பெற்ற இன்ஃபோசிஸ் நிறுவனத்தை நிறுவியவரும் இவர் தான். பிரிட்டன் நாட்டின் மிகவும் இளம்வயது பிரதமர் என்றால் அது 42 வயதான ரிஷி சுனக் தான். அவர் எம்பி ஆகி வெறும் ஏழே வருடத்தில் பிரதமர் பதவிக்கு வந்துள்ளார்.
சுதா மூர்த்தி மேலும் கூறுகையில், "பல வழிகளில் ரிஷி சுனக்கை எனது மகள் மாற்றி இருக்கிறார். குறிப்பாக உணவுப் பழக்கத்தில் நிறைய மாற்றியுள்ளார். ரிஷி சுனக் 150 ஆண்டுகளாக இங்கிலாந்தில் இருந்தாலும், அவர் மதத்தில் மிகப் பெரிய பற்று கொண்டவர்.
எங்கள் குடும்பம் ராகவேந்திரா சுவாமிக்காக வியாழக்கிழமை விரதம் இருப்போம். அனைத்து நல்ல காரியங்களையும் வியாழக்கிழமை தான் ஆரம்பிப்போம். இன்போசிஸ் நிறுவனம் கூட வியாழக்கிழமை தொடங்கப்பட்டதுதான் இப்போது ரிஷி சுனக்கும் வியாழக்கிழமை விரதம் இருக்கிறார்" என்றார்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications