ரோலர்.. இந்தியா ஆஸ்திரேலியா டெஸ்ட் சாம்பியன்! 5வது நாள் ஆட்டத்தில் இதுதான் நடக்கும்? யாருக்கு சாதகம்?
லண்டன்: ஆஸ்திரேலியா இந்தியா இடையிலான டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இன்று நடக்கும் 5வது நாள் ஆட்டத்தில் இந்திய அணி சிறப்பாக ஆடி வெற்றிபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆஸ்திரேலியா இந்தியா இடையிலான டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. ஆட்டம் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. ஆட்டத்தின் தொடக்கத்தில் ஆதிக்கம் செலுத்துவது போல காணப்பட்ட இந்திய அணி முதல் நாளின் இறுதியிலும், இரண்டாம் நாள் இறுதியிலும் கடுமையாக சொதப்பியது.

மூன்றாவது மற்றும் நான்காவது நாள் இரண்டு அணிக்கும் சாதகமாக இருந்தது. ஆட்டத்தின் தொடக்கத்திலேயே உஸ்மான் குவாஜா சிராஜ் பந்தில் டக் அவுட் ஆனார். இந்திய அணியின் பவுலிங் முதல் இரண்டு செஷன் சிறப்பாக இருந்தது. ஆனால் அதன்பின் மோசமாக சொதப்ப தொடங்கியது.
இதில் சிராஜ் போக ஷர்த்துல், ஷமி சிறப்பாக பவுலிங் செய்தனர். உமேஷ் யாதவ் அதிக ரன்களை கொடுத்தார். அஸ்வின் இல்லாமல் இந்திய அணி திணறுவதாக கடும் விமர்சனங்கள் வைக்கப்பட்டு உள்ளன.
முதல் இரண்டு நாள் ஆட்டத்தில் ஸ்மித், ஹெட் இருவரும் ஒன் சைட் காதலர்கள் போல இந்திய பவுலர்கள் முதுகில் தொங்கிக்கொண்டு இறங்காமல் நாள் முழுக்க ஆட்டம் காட்டினார்கள். நம்முடைய பவுலர்களும் எல்லா குறளி வித்தையும் காட்டி பார்த்தும்..குட்டி கரணம் அடித்து பார்த்தும் ஹெட் - ஸ்மித் விக்கெட்டை எடுக்கவே முடியவில்லை.
முதல் இன்னிங்ஸ் முடிவில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட்டிற்கு 469 ரன்களை எடுத்தது. ஹெட் 163, ஸ்மித் 121 ரன்களை எடுத்தனர். இதையடுத்து பேட்டிங் இறங்கிய இந்திய அணியில் வீரர்கள் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள். 26 பந்துக்கு 15 ரன்கள் எடுத்து ரோஹித் சர்மா அவுட் ஆனார். 15 பந்துக்கு 13 ரன்கள் எடுத்து சுப்மான் கில் அவுட் ஆனார்.
25 பந்துக்கு 14 ரன்கள் எடுத்து புஜாரா அவுட் ஆனார். 31 பந்துக்கு 14 ரன்கள் எடுத்து ரோஹித் சர்மா அவுட் ஆனார். அதிரடியாக ஆடிய ஜடேஜா 51 பந்தில் 48 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இந்திய பேட்ஸ்மேன்கள் இப்படி மோசமாக சொதப்பவுதற்கு காரணம் ஐபிஎல்தான் என்று கடும் விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. முக்கியமாக சரியான ஓய்வு இல்லாமல் வீரர்கள் ஆடுவது, அதிக பணத்திற்காக பிசிசிஐ தொடர்ந்து வீரர்களை ஆட வைப்பது போன்றவை காரணங்களாக பார்க்கப்படுகிறது.
ஆஸ்திரேலியா பேட்டிங்: முதல் இன்னிங்சில் ரஹானே 89, ஜடேஜா 48, ஷர்த்துல் 51 ரன்கள் எடுக்க இந்திய அணி 296 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதையடுத்து மீண்டும் இறங்கிய ஆஸ்திரேலிய அணியில் டாப் ஆர்டர் சரிய லபுசேன் 41 ரன்கள் எடுத்தார். கடைசியில் ஸ்டார்க் 41, கேரி 66 ரன்கள் எடுக்க ஆஸ்திரேலிய அணி 270-8 ரன்கள் எடுத்த நிலையில் இந்திய அணிக்கு ஆஸ்திரேலியா 445 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது.
இந்திய அணி பேட்டிங்: இதையடுத்து இந்திய அணி பேட்டிங்கில் ரோஹித் சிறப்பான தொடக்கம் கொடுக்க 43 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். தவறாக அவுட் கொடுக்கப்பட்ட கில் 18, புஜாரா 27 ரன்கள் எடுத்தனர். இதையடுத்து இறங்கிய கோலி 44 ரன்கள், ரஹானே 20 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளனர்.
கடைசி நாள் ஆட்டம்: இந்த தொடர் முழுக்கவே பிட்ச் மாறி மாறி ஆட்டம் காட்டியது. நேற்று பிட்ச் கொஞ்சம் கொஞ்சமாக பேட்டிங் செய்ய சாதகமாக மாறியது. தற்போதைய சூழ்நிலைப்படி ஆட்டத்தில் 69 சதவிகிதம் வெற்றி ஆஸ்திரேலியாவிற்கு சாதகமாக உள்ளது. 31 சதவிகிதம் மட்டுமே இந்திய அணிக்கு சாதகமாக உள்ளது.
இன்று பிட்ச் முழுக்க முழுக்க பேட்டிங் செய்ய சாதகமாக அமையும். ஆனால் மேட்ச்சிற்கு முன் ரோலர் போடுவதால் பிட்ச் முதல் 1 மணி நேரம் பவுலிங் செய்ய சாதகமாக இருக்கும். அதை மட்டும் சமாளித்துவிட்டால் ஆட்டம் இந்திய அணிக்கு சாதகமாக மாறும்.
முதல் 1 மணி நேரம் இந்திய அணி ரிஸ்க் எடுக்காமல்.. விக்கெட் விழாமல் பார்த்துக்கொண்டால் போதும்.. அதன்பின் அடித்து ஆடி வெற்றிபெற வாய்ப்புகள் உள்ளன.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications