எங்கய்யா என் ஜன்னல்? விண்டோ இல்லாத சீட்டுக்கு எக்ஸ்ட்ரா பணம் வேறயா? கொந்தளித்த விமான பயணி
ஜன்னலே இல்லாத சீட்டுக்கு பேரு ஜன்னல் சீட்டா என கேட்டு பிரிட்டிஷ் ஏர்வேஸில் பயணித்த பயணி கோபத்தில் ட்வீட்
லண்டன்: ஜன்னலே இல்லாத சீட்டுக்கு ஜன்னல் சீட்டு என கூறி அதற்கு கூடுதல் கட்டணம் வேறு வசூலிப்பதா என கேட்டு பயணி ஒருவர் பிரிட்டிஷ் விமான நிறுவனத்திற்கு ட்வீட் போட்டுள்ளார்.
பஸ்ஸாக இருந்தாலும் சரி ரயிலாக இருந்தாலும் சரி காராக இருந்தாலும் சரி ஜன்னல் சீட் என்றாலே நமக்கு விருப்பமான ஒன்றுதான். ஒரு சிலர் பஸ், ரயில்களில் சீட்டு பிடிக்க வரும்போது அவர்கள் எதிர்பார்த்த ஜன்னல் சீட் இல்லாவிட்டால் அதிர்ச்சி அடைவார்கள்.
இதனால் தங்களுக்கு வாந்தி வருவதாக கூறி ஜன்னலோர சீட்டை சாமர்த்தியமாக பிடித்துக் கொள்வார்கள். ஜன்னலோர சீட் கிடைத்தால் காற்றோட்டமாக இருக்கும், வேடிக்கை பார்த்துக் கொண்டே சென்றால் பயண களைப்பு இல்லாமல் இருக்கும். இதனால்தான் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஜன்னல் சீட்டை விரும்புவார்கள்.

போக்குவரத்து
முன்பதிவு செய்யப்படாத போக்குவரத்துகளை பயன்படுத்தும் போது எப்படியாவது ஜன்னல் சீட்டை பிடித்திட வேண்டும் என பலரும் விரும்புவார்கள். இதே பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டில் ஜன்னல் சீட்டு கிடைத்துவிட்டால் ஆஹா கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற ரேஞ்சுக்கு மகிழ்ச்சியாக பொறுமையாக ஏறி சீட்டில் அமர்ந்து கொள்ளலாம்.

ஜன்னல் சீட்டு
இது போல் சில போக்குவரத்துகளில் ஜன்னல் சீட்டுக்காக கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். பஸ், ரயில் என்றால் ஓகே, இதே விமானம் என்றால் ஜன்னல் சீட்டை வைத்துக் கொண்டு என்ன செய்வது என யோசிக்கிறீர்களா? அதன் வழியாக உலகின் அழகை கண்டு களிக்கலாம், மேக கூட்டங்களை ரசிக்கலாம். இதனால் இந்த அழகை ரசிக்கவே பலரும் விமானத்தில் கூடுதல் பணம் கட்டி விண்டோ சீட்டை பெறுவது அவசியம்.

விண்டோ சீட்
அந்த வகையில் அனிருத் மிட்டல் என்பவர் பிரிட்டிஷ் விமான நிறுவனத்தில் பயணம் செய்தார். அப்போது அவர் ஜன்னல் சீட்டுக்காக பணத்தை செலுத்தினார். விண்டோ சீட்டில் உட்கார்ந்து கொண்டு ஃபிளைட் டேக்காஃப் ஆகும் போது லேண்ட் ஆகும் போதும் பூமியின் அழகை ரசிக்கலாம் என ஆசை ஆசையாக விமானத்தில் ஏறினார்.

சீட் நம்பர்
அப்போது அவருடைய சீட் நம்பர் இருந்த இடத்தில் போய் உட்கார்ந்தார். சீட் நம்பர், விமான எண் எல்லாமே சரிதான். ஆனால் விண்டோதான் இல்லை. முன் சீட்டில் விண்டோ இருக்கு, பின் சீட்டில் விண்டோ இருக்கு. ஆனால் நமக்கு மட்டும் இல்லை என்பதால் அனிருத் மிட்டல் சோகமாகிவிட்டார். எக்ஸ்ட்ரா பணம் கட்டியும் விண்டோ இல்லாத விண்டோ சீட் கிடைத்துள்ளதே என ஆதங்கத்துடன் இருந்தார்.

விண்டோ இல்லாத விண்டோ சீட்
பின்னர் அந்த சீட்டையும் விண்டோ இல்லாத விண்டோ சீட்டையும் புகைப்படம் எடுத்துக் கொண்டார். இதுகுறித்து பிரிட்டிஷ் விமான நிறுவனத்திற்கு ஒரு ட்வீட் போட்டியிருந்தார். அந்த ட்வீட்டில் வலது புற விண்டோ சீட்டிற்காக நான் கூடுதல் கட்டணமும் செலுத்தியிருந்தேன். எதற்காக என்றால் லேண்டாகும் போது பூமியின் இயற்கை அழகை ரசிப்பதற்காக! ஆனால் எனது சீட்டின் விண்டோ எங்கே என கேள்வி கேட்டு அனிருத் ட்வீட் போட்டியிருந்தார்.

நெட்டிசன்கள் பதில்
இவரது ட்வீட்டிற்கு நிறைய நெட்டிசன்கள் பதில் போட்டுக் கொண்டிருந்தனர். அதில் ஒருவர் விண்டோ சீட்டில் உட்கார்ந்த போது சிலர் ஜன்னலை திறக்க முயற்சித்தனர். அதனால்தான் நிரந்தரமாக ஜன்னலை மூடிவிட்டார்களோ என அண்மையில் ஒரு விமானத்தில் அவசர கதவு திறக்கப்பட்ட விவகாரத்துடன் ஒப்பிட்டு பேசியிருந்தனர். இன்னும் சிலர் எனக்கும் இதே அனுபவம் ஏற்பட்டதாக தெரிவித்தனர்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications