உலகிலேயே இந்த ஒரே ஒரு விலங்கு மட்டுமே கருப்பு நிறத்தில் பால் தரும்.. அது எந்த விலங்கினம் தெரியுமா?
லண்டன்: தினமும் பலர் பால் குடிக்கிறார்கள். பால் மூலம் டீ, காபி குடிக்கிறார்கள். பால் பொதுவாக வெள்ளை நிறத்தில் இருக்கும். ஆனா உலகிலேயே இந்த ஒரே ஒரு விலங்கு மட்டும் கருப்பு நிறத்தில் பால் தருகிறது, அது எந்த விலங்கினம் தெரியுமா? இதை பாருங்கள்.
நம்முடைய எல்லோருடைய வீடுகளிலும் தினமும் பால் பயன்படுத்துகிறோம். இந்த பால் பசு அல்லது எருமையின் பால் ஆக இருக்கும். வீட்டில் உள்ள அனைவருமே பால் குடிப்பார்கள். பொதுவாக நம்முடைய வீடுகளில் பாலுடன் டீ அல்லது காபியும் தயாரித்து குடிப்பார்கள்.

நம்முடைய ஆரோக்கியமான வாழ்க்கைக்கு பால் மிகவும் முக்கியமானது ஆகும். நேற்று பிறந்த குழந்தைக்கு தாயின் பாலாக இருந்தாலும் சரி, அதே குழந்தை வளர்ந்த பிறகு பசு அல்லது எருமையின் பாலாக இருந்தாலும் சரி, குழந்தையின் ஊட்டச்சத்திற்கு பால் மிகவும் முக்கியமானது. மனிதர்களை போல், ஆடு, மாடு, ஒட்டகம், சிங்கம், புலி என பெரும்பாலான விலங்குகளின் பால் வெண்மையாகவே இருக்கும். உலகில் சுமார் 6,400 பாலூட்டிகள் உள்ளதாக கூறப்படுகிறது.
இதில் அனைத்து விலங்கின் பாலும் வெள்ளை நிறத்தில் தான் இருக்கும் என நினைக்கிறோம். அதேபோல் வெள்ளை நிறத்தைத் தவிர வேறு பால் உலகில் இல்லை என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். எனினும் ஒரு விலங்கின் பாலும் கருப்பாக இருக்கும். இதை கேட்டால் உங்களுக்கு ஆச்சர்யமாக இருக்கலாம். ஆனால் அதுதான் உண்மை.

இந்த உலகில் கருப்பு பால் கொடுக்கும் விலங்கும் உள்ளது. பெண் கருப்பு காண்டாமிருகம் கருப்பு பால் கொடுத்து வருகிறது. இவை ஆப்பிரிக்க கருப்பு காண்டாமிருகங்கள் என்று பொதுவாக அழைக்கப்படுகின்றன. கருப்பு காண்டாமிருகம் பாலில் குறைந்த அளவு கொழுப்பு உள்ளது. தாய் காண்டாமிருகத்தின் பால் தண்ணீர் போன்றதாக இருக்கும். இதில் 0.2 சதவீதம் மட்டுமே கொழுப்பு உள்ளது. இந்த மெல்லிய பால் விலங்குகளின் மெதுவான இனப்பெருக்க சுழற்சியுடன் தொடர்புடையதாக இருக்கும் என்கிறார்கள்.
கருப்பு காண்டாமிருகங்கள் நான்கு முதல் ஐந்து வயது வரை மட்டுமே இனப்பெருக்கம் செய்ய முடியும் என்கிறார்கள் வனவிலங்கு ஆர்வலர்கள்.
கருப்பு காண்டாமிருகங்களின் கர்ப்ப காலம் ஒரு வருடத்திற்கும் மேலாகும். ஒரே நேரத்தில் ஒரு குட்டியை மட்டுமே பெற்றெடுக்கின்றன, பின்னர் கருப்பு காண்டாமிருகங்கள் குழந்தைகளை வளர்ப்பதில் அதிக நேரம் செலவிடுகின்றன.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications