இங்கிலாந்து அணியை கண்ணீர்விட வைத்த "தீப்தி சர்மா".. பிளான் போட்டு தந்த மாஸ்டர்மைண்ட்? கவனிச்சீங்களா!
லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் தீப்தி சர்மா எடுத்த விக்கெட்டுக்கு கேப்டன் ஹர்மன்பிரீத் கார் வரவேற்பு கொடுத்துள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான பெண்கள் ஒருநாள் போட்டியின் கடைசி ஆட்டம் நேற்று லார்ட் மைதானத்தில் நடைபெற்றது. மிகவும் விறுவிறுப்பாக சென்ற இந்த ஆட்டத்தில் இந்தியா வென்று மொத்தமாக தொடரை ஸ்வீப் செய்தது.
நேற்று நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

என்ன நடந்தது?
நேற்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 169 ரன்கள் மட்டுமே எடுத்தது. 45.4 ஓவரில் இந்திய அணி ஆல் அவுட் ஆனது. இந்த போட்டியில் இந்தியா வீசிய 43.4வது பந்தில் தீப்தி சர்மா இங்கிலாந்து வீராங்கனை சார்லட் டியானை மன்கட் செய்தார். அதாவது நான் ஸ்டிரைக்கர் எண்டில் இருந்த டியான் கிரீஸை தாண்டி ரொம்ப தூரம் இருந்தார். இதை பார்த்ததும் தீப்தி சர்மா அவரை விக்கெட் எடுத்தார். இதை மன்கட் என்று அழைப்பார்கள். இதை பலரும் சர்ச்சையாக்கி வருகின்றனர்.

சர்ச்சை
இணையம் முழுக்க இந்த விக்கெட் வைரலாகி வருகிறது. இதற்கு ஐசிசி விதி அனுமதி அளிக்கிறது.
நான் ஸ்டிரைக்கர் எண்டில் இருக்கும் வீரர், வீராங்கனை கிரீஸை தாண்டி இருந்தால் அவரை விக்கெட் எடுக்கலாம். கிரிக்கெட்டின் ஆன்மாவிற்கு இது எதிரானது என்று இங்கிலாந்து வீரர்கள், வீராங்கனைகள், கிரிக்கெட் ரசிகர்கள் விமர்சனம் செய்துள்ளனர். அதே சமயம் இந்திய வீரர் அஸ்வின், முன்னாள் வீரர் சேவாக் போன்றவர்கள் தீப்திக்கு ஆதரவாக பேசி உள்ளனர்.

தீப்தி சர்மா
இந்த போட்டியில் தீப்தி சர்மா எடுத்த விக்கெட்டுக்கு கேப்டன் ஹர்மன்பிரீத் கார் வரவேற்பு கொடுத்துள்ளார். அதில், நாங்கள் எடுத்த ஒரு விக்கெட் பற்றி பேசுகிறீர்கள். ஆனால் அதற்கு முன் எடுத்த விக்கெட்டுகளை பற்றி பேசுவது இல்லை. நாங்கள் 1 விக்கெட்டை மட்டுமல்ல மொத்தம் 9 விக்கெட்டுகளை எடுத்து இருக்கிறோம் என்பதை மறக்க வேண்டாம். அதேபோல் தீப்தி சர்மா செய்ததில் தவறு இல்லை. அது விதியில் இருக்கிறது.

விக்கெட்
இதேபோல் வேறு யாரும் ஆடினால் இனியும் நாங்கள் விக்கெட்டுகளை எடுப்போம் என்று தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார். தனது அணி வீராங்கனைக்கு முழு சப்போர்ட் கொடுப்பதாக அவர் தெரிவித்து உள்ளார். இந்த நிலையில்தான் இணையத்தில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் தீப்தி சர்மாவிற்கு இந்த திட்டத்தை போட்டுக்கொடுத்ததே ஹர்மன்பிரீத் கார்தான் என்று நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.

ஹர்மன்பிரீத்
ஹர்மன்பிரீத் மிகவும் சமயோஜிதமாக செயல்பட்டார். அவர் சொல்லித்தான் தீப்தி இந்த விக்கெட்டை எடுத்துள்ளார். அவர்தான் பந்து போடும் சிக்னல் கொடுத்தார். அந்த சிக்னல் கிடைத்த பின்புதான் தீப்தி இந்த விக்கெட்டை எடுத்தார். அதனால் இது முழுக்க முழுக்க அணியின் திட்டம்தான் என்று கூறியுள்ளனர் சில நெட்டிசன்கள். இதற்கான வீடியோவையும் பகிர்ந்து வருகின்றனர். அதே சமயம் இது விதி மீறல் இல்லை. யார் திட்டமாக அது இருந்தாலும், விதிக்கு உட்பட்டே இந்த விக்கெட் எடுக்கப்பட்டு உள்ளது என்று நெட்டிசன்கள் கூறியுள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications