சார்லஸை விடுங்க! எலிசபெத் முடிசூட்டு விழாவில் நேரு கலந்து கொண்டது தெரியுமா! அப்போ அவர் என்ன சொன்னார்
லண்டன்: பிரிட்டன் மன்னராக சார்லஸ் முடிசூட்டிக் கொள்ளும் நிலையில், ராணி எலிசபெத் முடிசூட்டு விழா குறித்து ஒரு விஷயம் இப்போது சர்ச்சையாகியுள்ளது.
பிரிட்டன் மன்னராக சார்லஸ் இன்று முடிசூட்டுகிறார். இதற்காக ஒட்டுமொத்த பிரிட்டனும் கோலாகலமாக ரெடியாகி வருகிறது. 70 ஆண்டுகளுக்குப் பின் நடக்கும் இந்த விழாவில் உலகெங்கும் இருந்து பல முக்கிய தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

இந்தியா சார்பில் அதிகாரப்பூர்வமாகத் துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தங்கர் இந்த விழா நிகழ்வில் கலந்து கொள்கிறார். ஜக்தீப் தங்கர் மட்டுமின்றி இந்தியாவில் இருந்து இரு டப்பாவாலாக்கள் உள்ளிட்ட சிலரும் இந்த நிகழ்வில் கலந்து கொள்கின்றனர்.
நேரு: சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பு, 1953 ஜூன் 2ஆம் தேதி இரண்டாம் எலிசபெத் ராணியின் முடிசூட்டு விழா நடைபெற்ற போது, இந்தியாவின் சார்பில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு கலந்து கொண்டார். அப்போது அவர் பிபிசிக்கு தனது முதல் டிவி நேர்காணலையும் அளித்தார்.. முடிசூட்டு விழாவை புகழ்ந்து பேசிய நேரு, லண்டன் கூட்டத்தையும் அவர்கள் நடந்துகொண்ட விதத்தையும் பாராட்டினார்.
இருப்பினும், நேருவின் இந்த நடவடிக்கை இந்தியாவில் பெரும் விவாதத்தைக் கிளப்பியது. இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைத்து சில ஆண்டுகள் மட்டுமே ஆகியிருந்த நிலையில், முடிசூட்டு விழாவில் கலந்து கொள்ள நேரு எடுத்த முடிவிற்கு விமர்சனங்கள் எழுந்தன. இது குறித்து பிபிசி நேர்காணலில் கேட்ட போதும், அது ஒன்றும் இல்லை என்றே அவர் கூறினார்.

1953இல், ராணி எலிசபெத் முடிசூட்டப்பட்டபோது, இந்தியா முடிசூட்டு விழாக்களுக்கு புதிய நாடு இல்லை. ஏனென்றால், ஏற்கனவே 1877, 1903, 1911 ஆண்டுகளில் பிரிட்டன் அரச குடும்ப முடிசூட்டு விழாவை முன்னிட்டு டெல்லியிலும் மிக பிரம்மாண்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டிருந்தது. இவை, டெல்லியில் உள்ள கொரோனேஷன் பூங்காவில் நடைபெற்றன.
வேறு நிலைமை: விக்டோரியா மகாராணி தலைமை பொறுப்பிற்கு வந்த போது, தனது ஆட்சியின் கீழ், சுதந்திரம், சமத்துவம் மற்றும் நீதி ஆகியவை மேலோங்கும் என்று இந்தியர்களுக்கு உறுதியளித்தார். மேலும் அவர் இந்திய ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சிக்காக மனதார விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டார். அதேபோல பல இந்திய மன்னர்களும் கூட எழுந்து ஆரவாரம் செய்து, ராணி விக்டோரியாவுக்காக பிரார்த்தனை செய்து கொண்டனர்.
ஆனால், ராணி எலிசபெத் முடிசூட்டிய போது நிலைமை வேறு விதமாக இருந்தது. 1953இல் ராணி எலிசபெத் அரியணை ஏறும் போது, இந்தியா ஒரு சுதந்திரம் நாடாக இருந்தது. எனவே, அந்த சூழலில் இந்தியச் சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட முக்கிய தலைவர்களில் ஒருவரான நேரு இந்த முடிசூட்டு விழாவில் கலந்து கொள்ளச் சென்றது பலருக்கும் அதிர்ச்சியாகவே இருந்தது.
ஏனென்றால் லண்டனில் உள்ள கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போதே இந்திய மாணவர்களின் சங்கத்தில் உறுப்பினராக இருந்தார். அது இந்தியாவின் சுதந்திரத்திற்காக முழக்கமிட்டது. காங்கிரஸில் இணைந்து நேரு ஆங்கிலேயர்களை எதிர்த்தார்.
விவாதம் ஏன்: 1931 ஆம் ஆண்டு நேருவைச் சந்தித்த இந்திய வைஸ்ராய் பிரபு இர்வின் பிரபு, இந்தியாவின் வருங்காலப் பிரதமர் "சமாளிக்க முடியாதவர், சமரசமற்றவர் மற்றும் முழுமையான சுதந்திரத்திற்காக உழைக்கத் தீர்மானித்தவர்" என்று கூறியதாகச் சான்றுகள் உள்ளன.
அப்படிப்பட்ட நபர் ஒருவர் சுதந்திரம் அடைந்த பிறகு அவர் ராணி எலிசபெத் முடிசூட்டு விழாவில் கலந்து கொண்டது சர்ச்சையானது. இருப்பினும், இந்தியாவின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டே நேரு அந்த முடிவை எடுத்திருக்கலாம் என்றே பலரும் குறிப்பிடுகின்றனர்.
ராணி எலிசபெத் முடிசூட்டு விழாலில், நேரு மட்டுமின்றி, மியான்மர் மற்றும் பாகிஸ்தானின் பிரதமர்கள், முன்னாள் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜார்ஜ் மார்ஷல் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். இருப்பினும், நேருவை போல அவர்களது வருகை எந்தவொரு பெரிய சர்ச்சையையும் உருவாக்கவில்லை.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications