மன்னர் முடிசூட்டு விழாவில் ட்விஸ்ட்.. கோஹினூர் வைரம்.. இங்கிலாந்து ராணி எடுத்த அதிரடி முடிவு?
லண்டன்: இங்கிலாந்து மன்னராக சார்லஸ் முடிசூட்டிக்கொள்ளும் விழாவில், ராணி கமீலா பார்க்கர் கோஹினூர் வைரம் பதித்த கிரீடத்தை அணியப்போவது இல்லை என்று கூறப்படுகிறது. இதற்கு என்ன காரணம் என்பது குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளன.
இங்கிலாந்து நாட்டின் வரலாற்றில் மிக அதிக காலம் ராணியாக இருந்தவர் என்ற சிறப்பை பெற்றவர் ராணி எலிசபெத். கடந்த 1952இல் ராணியாகப் பொறுப்பேற்ற இவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 8-ந் தேதியன்று ஸ்காட்லாந்தில் உள்ள பால் மோரல் கோட்டையில் மரணம் அடைந்தார்.

அதைத் தொடர்ந்து அவரது மூத்த மகனும், பட்டத்து இளவரசருமான சார்லஸ் (வயது 73), அந்த நாட்டின் மன்னராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். இதனால் அவர் மன்னர் மூன்றாம் சார்லஸ் என மக்களால் அழைக்கப்படுகிறார்.
அடுத்த மாதம் 6-ந் தேதி, மன்னர் சார்லஸ் முடிசூட்டு விழா லண்டனில் கோலாகலமாக நடைபெற உள்ளது. இதில் உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் கலந்து கொள்கிறார்கள். இதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த முடிசூட்டும் விழாவில் மறைந்த ராணியும், தனது மாமியாருமான இரண்டாம் எலிசபெத் அணிந்திருந்த வரலாற்றுச்சிறப்பு மிக்க கோஹினூர் வைரம் பதிக்கப்பட்ட கிரீடத்தைத்தான், ராணி கமீலா பார்க்கர் அணிவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதை அவர் அணியப்போவதில்லை என தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
ராணி இரண்டாம் எலிசபெத் அணிந்திருந்த கிரீடத்துக்கு பதிலாக ராணி மேரி அணிந்திருந்த கிரீடத்தைத்தான் ராணி கமீலா பார்க்கர் அணியப்போகிறார் என்று சொலகிறார்கள்.
இங்கிலாந்து ராணியை அலங்கரித்து வரும்ட கோஹினூர் வைரம், பிரிட்டிஷ் ராஜ குடும்பத்திடம் இருக்கும் 2800 வைர நகைகளில் முக்கியமானது இந்த கோஹினூர் வைரம். மிக முக்கிய அரசு நிகழ்ச்சிகளில் மட்டுமே இதை ராணி அணிவார். இந்தியாவில் அந்த காலத்தில் ஆந்திர மாநிலத்தில், கோல்கொண்டா சுரங்கத்தில் இருந்து வெட்டி எடுக்கப்பட்டது தான் கோகினூர் வைரம் ஆகும். இதன் எடை 105.6 கேரட்.
இந்த வைரத்தை சீக்கிய மன்னர் ரஞ்சித் சிங் கடைசியாக வைத்திருந்தார். பின்னர் 1857-ம் ஆண்டு நடந்த கிளர்ச்சிக்குப் பின்னர் விக்டோரியா மகாராணிக்கு வழங்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த வைரம் என்று கோகினூர் வைரம் சொல்லப்படுகிறது
1947 இல் சுதந்திரம் பெற்ற பின்னர், இந்தியாவுக்கு சொந்தமான கோகினூர் வைரத்தை இங்கு மீட்டுக்கொண்டு வர வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலித்து வருகிறது. ஆனால், இந்த வைரத்தை இந்தியாவிடம் எந்த காலத்திலும் ஒப்படைக்க முடியாது என இங்கிலாந்து திட்டவட்டமாக அறிவித்து விட்டது. எனினும் இந்த வைரம் தொடர்ந்து சர்ச்சையில் தான் இருக்கிறது. சர்ச்சைகள் காரணமாக ராணி கமீலா பார்க்கர், இந்த வைரம் பதித்த கிரீடத்தை அணிவதைத் தவிர்த்துள்ளாராம்.
கோஹினூர் வைரம் சர்ச்சைக்குரியதாக இருக்கலாம் என்று அரண்மனை அறிந்து உள்ளதால், எனவே முடிசூட்டும் விழாவில் ராணி கமீலா பார்க்கர் அந்தக் கிரீடத்தை அணிந்து, அது ஒரு சர்ச்சை ஆக வேண்டாம் என்று அரண்மனை நினைக்கிறதாம். அடிப்படையில், கிரீடத்தில் உள்ள நகைகளைப் பற்றி தனி விவாதம் செய்யாமல், பாதுகாப்பான மற்றும் விவேகமான காரியத்தைச் செய்ய அரண்மனை முடிவு செய்துள்ளதாம்.
ராணியின் முடிசூட்டும் விழா முடிந்தவரையில், பலதரப்பட்ட சமூக நம்பிக்கைகளையும் பிரதிபலிக்க வேண்டும் என்பதுதான் மன்னரின் விருப்பம் என்றும் பத்திரிக்கையாளர் ஒருவர் கூறினார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications