ஷேப் மாறிய மேலாடை! பெண்ணின் உயிரை காப்பாற்றிய ஸ்போர்ட்ஸ் பிரா.. சாண்ட்ராவின் சக்சஸ் ஸ்டோரி டிரென்ட்!
லண்டன்: ஸ்போர்ட்ஸ் பிரா அணிந்ததால் பிரிட்டனில் ஒரு பெண்ணின் உயிர் காப்பாற்றப்பட்ட பழைய சம்பவம் தற்போது மீண்டும் டிரென்டாகி வருகிறது.
சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்பார்கள்.. அது போல் கீர்த்தி சிறிதாக இருந்தாலும் மூர்த்தி பெரிது.. சிறுதுளி பெருவெள்ளம் என்ற பழமொழிகளை கேட்டுள்ளோம். அவை நம் வாழ்வியலுடன் பல்வேறு சூழல்களில் ஒத்து போயுள்ளன. அப்படி பெண் ஒருவருக்கு அவர் அணிந்திருந்த ஸ்போர்ட்ஸ் பிரா அவரது உயிரை காப்பாற்றியது என்றால் நம்புகிறீர்களா? ஆம்! பிரிட்டன் நாட்டை சேர்ந்தவர் சாண்ட்ரா கிரீனி. இவருக்கு 54 வயதாகிறது.
அவர் பெரும்பாலும் ஸ்போர்ட்ஸ் பிரா அணிவது வழக்கம். அதுதான் அவருக்கு பல தருணங்களில் உகந்ததாக இருந்துள்ளது. ஆனால் ஒரு நாள் அவர் ஓடி கொண்டிருந்த போது அவருடைய மார்பகம் அருகே ஏதோ உறுத்திக் கொண்டிருந்தது போல் சாண்ட்ராவுக்கு ஒரு எண்ணம் தோன்றியது.

கம்பர்ட்டபிள்
எப்போதுமே கம்பர்ட்டபிளாக இருந்த பிரா அன்றைய தினம் கோபத்தையும் எரிச்சலையும் ஏற்படுத்தியது. இது ஏன் என சாண்ட்ராவுக்கு புரியவில்லை. மார்பகத்தில் போட்டிருக்கும் போது சரியாக போடப்படாமல் இருந்திருப்போம் என நினைத்து அட்ஜஸ்ட் செய்து பார்த்தார். பின்னர் தனது பயிற்சியை தொடர்ந்தார்.

பயிற்சி
இருந்தாலும் அவரால் பயிற்சி செய்ய முடியவில்லை. இதையடுத்து பயிற்சியை பாதியில் விட்டுவிட்டு வீட்டுக்கு சென்றார். அங்கு ஆடைகளை நீக்கிவிட்டு பார்த்த போதுதான் அவருக்கு மார்பகத்தில் ஒரு கட்டி போல் இருந்தது தெரியவந்தது. அதுதான் ஸ்போர்ட் பிராவில் உரசியதும் தெரிந்தது. உடனே சாண்ட்ரா மருத்துவரை அணுகினார்.

எம்ஆர்ஐ ஸ்கேன்
அப்போது அவருக்கு எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்கப்பட்டது. அவருக்கு மார்பக புற்றுநோய் இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது. எனினும் அது ஆரம்ப நிலை என்பதால் அவருக்கு உயிரிழப்பு ஏற்படாத வண்ணம் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து மார்பக புற்றுநோய்க்கு சிகிச்சை அளித்தனர். அவருக்கு கடந்த மாசெக்டமி எனும் சிகிச்சை கொடுக்கப்பட்டது.

மார்பகம் அகற்றம்
மாசெக்டமி என்றால் புற்றுநோயால் மார்பகத்தை அகற்றிவிடுவது. ஆரம்பத்திலேயே கண்டறியப்படும் இந்த மார்பக புற்றுநோய்க்கு மார்பகத்தில் உள்ள சதைகளை அகற்றுவதுதான் இருக்கும் ஒரே சிகிச்சை முறை. இதை கவனிக்காமல் விட்டுவிட்டால் கேன்சர் முற்றி உயிரிழப்பை ஏற்படுத்தும். எனவே தான் உயிரோடு இருப்பதற்கு காரணம் அந்த ஸ்போர்ட்ஸ் பிராதான் என்றும் அதுதான் தனது உயிரை காப்பாற்றியது என்றும் சாண்ட்ரா பெருமிதம் பொங்க சொல்கிறார்.

சாண்ட்ரா
சாண்ட்ரா உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் சொல்கிறார். புற்றுநோய்க்கு சிகிச்சை அளிப்பது, அதை தடுப்பது, அதை கண்டறிவது உள்ளிட்ட ஆய்வுக்கு பணம் திரட்டும் கேன்சர் ஆராய்ச்சி மையத்திற்கு தன்னால் ஆன உதவிகளை சாண்ட்ரா செய்து வருகிறார். மற்ற பெண்களையும் இதில் இணையுமாறு ஊக்கப்படுத்துகிறார்.

40 வயது கடந்த பெண்கள் மேமோகிராம்
40 வயதை கடந்த பெண்கள் ஆண்டுதோறும் மேமோகிராம் எனப்படும் மார்பக பரிசோதனை செய்து கொள்வது நல்லது. மார்பக புற்றுநோயால் ஏராளமான பெண்கள் உயிரிழக்க நேரிடுகிறது. தினந்தோறும் தனது மார்பக பகுதிக்கு கைகளால் மசாஜ் செய்து சுய பரிசோதனை செய்து பார்க்க வேண்டும். அப்போது ஏதேனும் கட்டியோ வலியோ, ரத்தமோ, தண்ணீர் போன்ற திரவமோ வந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.












Click it and Unblock the Notifications