‘போர்வை’யுடன் தீவிரக் காதல்.. பிப்ரவரியில் டும் டும் டும்.. கண்டிப்பா எல்லாரும் வந்துடுங்க !
இங்கிலாந்து பெண் ஒருவர் போர்வையைத் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளார்.
லண்டன்: இங்கிலாந்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது போர்வையை திருமணம் செய்து கொள்ளப் போவதாக அறிவித்திருக்கிறார்.
இந்த உலகில் வினோதங்களுக்கு பஞ்சமேயில்லை. யாருக்கு யார் மீது காதல் ஏற்படும் என்பதை சொல்வதற்கில்லை. இதுவரை எத்தனையோ திருமண செய்திகளை படித்திருப்போம். ஆனால் இந்த செய்தி முற்றிலும் வினோதமானது தான்.
ஆம், இங்கிலாந்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது போர்வையை காதலித்து வருகிறாராம். விரைவில் அந்த போர்வையையே திருமணமும் செய்து கொள்ளப்போகிறார்.

போர்வை மீது காதல்:
பாஸ்கேல் செலிக் எனும் அந்தப் பெண் பல ஆண்டுகளாக ஒரே போர்வையை பயன்படுத்தி வந்ததன் பலனாக, அதையே காதலிக்க தொடங்கிவிட்டார். இதற்கு அவர் கூறும் காரணம், "எனக்கும் எனது போர்வைக்குமான உறவு என்பது, வெகு நீண்டகால உறவு. மிகவும் நெருக்கமானதும், உறுதியானதும் கூட.

தீவிரக் காதல்:
என் போர்வையுடன் நான் உல்லாசமாக இருந்திருக்கிறேன். எனது போர்வை ஒரு நம்பகமான ஒரு நண்பன். அது எப்போதும் எனக்காகவே இருக்கும். என்னை அணைத்துக் கொள்ளும். எனது போர்வையை தான் மிகத் தீவிரமாக காதலிக்கிறேன்.

கொண்டாட்டம்:
எனது திருமணத்துக்கு எல்லோரும் நிச்சயம் வர வேண்டும். ஆடம், பாடல், கொண்டாட்டம் என என் திருமணம் மிகவும் குதூகலமாக இருக்கும்" என அனைவரையும் வரவேற்கிறார் பாஸ்கேல்.

பிப்ரவரியில் திருமணம்:
பாஸ்கேல் செலிக்குக்கும் அவரது போர்வைக்கும் பிப்ரவரி 10ம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது. தனக்கு பிடித்தமான பொருளை திருமணம் செய்யும் முதல் நபர் அல்ல இவர். ஏற்கனவே ஒரு பெண் பெர்லின் சுவரையும், டோக்கியோவைச் சேர்ந்த ஒருவர் தனக்கு பிடித்த ஹோலோகிராமையும் திருமணம் செய்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications