‛கணவனை விட்டுவிட்டு காதலனுடன் ஓடிய 11 பெண்கள்’.. பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தால் புது சிக்கல்

Subscribe to Oneindia Tamil

லக்னோ: பிரதமர் மோடியின் பிரதம மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடு கட்ட ரூ.2.50 லட்சம் வழங்கப்படுகிறது. இந்நிலையில் தான் வீடு கட்டும் திட்டத்தில் வழங்கப்பட்ட பணத்தை எடுத்து கொண்டு 11 பெண்கள் கணவரை விட்டுவிட்டு கள்ளக்காதலன்களுடன் எஸ்கேப்பான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உத்தர பிரதேசத்தில் பாஜகவின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக யோகி ஆதித்யநாத் உள்ளார். இங்கு மத்திய அரசின் பல்வேறு திட்டங்களில் பொதுமக்கள் பயன்பெற்று வருகின்றனர். அதில் ஒரு திட்டம் தான் பிரதம மந்திரி அவாஸ் யோஜனா திட்டம்.

Narendra Modi Uttar Pradesh

இந்த திட்டத்தின் மூலம் ஏழை மக்களுக்கு வீடு கட்டி கொடுக்கப்பட்டு வருகிறது. அதாவது வீடில்லா மக்களுக்கு இந்த திட்டத்தின் மொத்தம் ரூ.2.40 லட்சம் தவணை முறையில் வழங்கப்படும். இந்த திட்டம் நாடு முழுவதும் பயன்பாட்டில் உள்ளது.

இந்த திட்டம் மூலம் வீடில்லா ஏழை மக்கள் பயன்பெற்று வருகின்றனர். இந்நிலையில் தான் தற்போது திடுக்கிட வைக்கும் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது பிரதம மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தின் முதல் தவணை தொகையை பெற்ற 11 பெண்கள் தங்களின் கணவரை விட்டுவிட்டு கள்ளக்காதலனுடன் எஸ்கேப் ஆகி உள்ளனர்.

இந்த அதிர்ச்சி சம்பவம் உத்தர பிரதேச மாநிலம் மகாராஜ்கன்ஞ் பகுதியில் நடந்துள்ளது. அதாவது மகாராஜ்கன்ஞ் மாவட்டத்தில் இந்த திட்டத்தில் 2,350 பேருக்கு பிரதம மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக துதிபாரி, ஷட்லாபூர், சாதியா, ராம்நகர், பகுல் திகா, கா்ரா, கிஷ்னூர்பூர், மேதாலி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பயனாளிகளுக்கு பணம் வழங்கப்பட்டது. இதில் பலரும் தங்களின் வீட்டை கட்டி முடித்துள்ளனர்.

இத்தகைய சூழலில் தான் 11 பெண்களுக்கு முதல் தவணையாக ரூ.40 ஆயிரம் பணம் வழங்கப்பட்டுள்ளது. இந்த பணத்தை எடுத்து கொண்டு அந்த பெண்கள் தங்களின் கணவரை விட்டுவிட்டு கள்ளக்காதலர்களுடன் எஸ்கேப்பாகி உள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இத்தகைய சூழலில் தான் அதிகாரிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது பணத்தை எடுத்து கொண்டு ஓடிய 11 பெண்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்ட பணம் இல்லாததால் மேற்கொண்டு வீட்டு வேலையை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அடுத்த கட்டமாக இந்த 11 பயனாளிகளுக்கும் பணம் ஒதுக்கீடு செய்வது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

உத்தர பிரதேசத்தில் பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா எனும் வீடு கட்டும் திட்டத்தின் நிதியை எடுத்து கொண்டு பெண்கள் தங்களின் கள்ளக்காதலர்களுடன் ஓட்டம் பிடிப்பது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பு பராபங்கி மாவட்டத்தில் இதுபோன்று நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+