லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உடம்பு சரியில்லைன்னு ஆஸ்பத்திரியில் சேர்ந்த 17 வயது சிறுமி.. மயக்க மருந்து தந்து சீரழித்த ஊழியர்கள்

அரசு ஆஸ்பத்திரியில் 17 வயது பெண்ணை நாசம் செய்துள்ளனர் 2 ஊழியர்கள்

Google Oneindia Tamil News

லக்னோ: உடம்பு சரியில்லைன்னு ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆன 17 வயசு பெண்ணை, மயக்கம் அடைய செய்து, நாசம் செய்துள்ளனர் 2 ஆஸ்பத்திரி ஊழியர்கள்!

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ரஸாவை சேர்ந்த 17 வயது இளம் பெண் ரஞ்சிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) 17 வயதாகிறது. இவருக்கு கொஞ்ச நாளாகவே உடம்பு சரியில்லை.

17 year old girl raped by 2 Gov Hospital staffs in UP

அதனால் அங்குள்ள அரசு டிபி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கடந்த 23-ம் தேதி சேர்க்கப்பட்டிருந்தார். பெண்ணின் அம்மா கூடவே மகளுடன் ஆஸ்பத்திரியில் தங்கி இருந்துள்ளார். சம்பவத்தன்று இரவு, ரஞ்சிதாவின் அம்மா தூங்கி விட்டார் .

மணி 10 இருக்கும். வார்டு பாய் சிவானந்தன் ஊசி போட வேண்டும் என்று ரஞ்சிதா ரூமுக்கு வந்தார். ரஞ்சிதாவும் தூங்கி கொண்டிருந்த அம்மாவை எழுப்ப போனார். அதற்கு சிவானந்தம் தூங்கிறவங்களை ஏன் எழுப்பறே என்று கேட்டு தடுத்து, கீழே உள்ள அறைக்கு அழைத்து சென்றுள்ளார்.

பிறகு அந்த ரூமுக்கு சென்றவுடன் ரஞ்சிதாவுக்கு மாத்திரை ஒன்றினை சிவானந்தம் தரவும், அதை வாங்கி சாப்பிட்ட ரஞ்சிதா கொஞ்ச நேரத்தில் மயங்கி விழுந்து விட்டார். இதற்கு பிறகு, சிவானந்தம், ஆஸ்பத்திரியில் வேலைபார்க்கும் விஷால் என்பவரை அழைத்து, ரஞ்சிதாவை பலமுறை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

மயக்கம் தெளிந்த பிறகுதான் ரஞ்சிதாவுக்கு தன் நிலைமை புரிந்தது. நடந்த கொடுமையை அம்மாவிடம் சொல்லி கதறி உள்ளார். இதையடுத்து, ஆஸ்பத்திரியில் புகார் சொல்ல, விஷயம் போலீஸ் வரை போனது.

ரஞ்சிதாவின் அம்மாவின் புகாரின் பேரில் ஆஸ்பத்திரி ஊழியர்களான சிவானந்தம், விஷால் இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இது தொடர்பான விசாரணையும் நடக்கிறது. அரசு ஆஸ்பத்திரியில் இளம் பெண்ணை கூட்டு பாலியல் செய்த சம்பவம் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

English summary
2 young men including Gov hospital ward boy raped the the 17 year old girl in the hospital superintendent’s cabin
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X