உயிரை பறித்த நூடுல்ஸ்? ஒரே குடும்பத்தில் 5 பேர் இறந்து கிடந்த சோகம்.. என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தர பிரதேசத்தில் இன்று காலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். அவர்கள் 5 பேரும் நேற்று இரவு நூடுல்ஸ் சாப்பிட்டு தூங்கிய நிலையில் காலையில் எழுந்திரிக்கவில்லை. இந்நிலையில் தான் அவர்களின் உயிரை நூடுல்ஸ் பறித்ததா? என்ன நடந்தது? என்பது பற்றி போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

5-of-a-family-died-after-eats-noodles-and-went-to-sleep-in-noida

உத்தர பிரதேசத்தின் கிரேட்டர் நொய்டா அருகே உள்ள ராபுபுரா பகுதியில் அமைந்து இருக்கும் நாக்லா ஸ்ரீபாதம் கிராமத்தை சேர்ந்தவர் மகேஷ் (வயது 37).

இவரது மனைவி பெயர் லலிதா (35). இந்த தம்பதிக்கு லட்டு (11), சக்சாத் (3) என்ற 2 மகன்களும், மிஸ்தி (7) என்ற ஒரு மகளும் இருந்தனர்.

இவர்களின் வீடு இன்று காலையில் நீண்டநேரம் ஆகியும் திறக்கவில்லை. இதனால் பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் சந்தேகம் அடைந்தனர். வீட்டு கதவை தட்டிப்பார்த்தனர். ஆனால் யாரும் திறக்கவில்லை. ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தபோது வீட்டில் 5 பேரும் இறந்து கிடந்தது தெரியவந்தது.

உடனடியாக அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது 5 பேரும் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். உடனடியாக போலீசாரக்க தகவல்தெரிவிககப்பட்டது. போலீசார் விரைந்து வந்து 5 பேரின் உடல்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணையை தொடங்கி உள்ளனர்.
முதற்கட்ட விசாரணையின்போது இறந்த மகேஷின் தாய் கூறுகையில், ''இரவில் எனது மகன், மருமகள், பேரன், பேத்திகள் என 5 பேரும் நூடுல்ஸ் சாப்பிட்டனர். காலையில் அவர்கள் இறந்துபோய் உள்ளனர்'' என்று கதறிஅழுதபடி கூறினார்.

இதனால் அவர்களின் மரணத்திற்கு Food Poison காரணமாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். அவர்கள் சாப்பிட்ட நூடுல்ஸ் விஷமாக மாறியதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+