நாங்களே தர்ணாவில் இறங்குவோம்.. மத்திய அரசுக்கு வார்னிங் கொடுத்த உச்சநீதிமன்ற நீதிபதிகள்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லி உயர்நீதிமன்றத்தின் அருகே நடைபாதை மற்றும் பாதசாரிகள் சாலைகளை கடக்க தேவையான வசதிகளை அடுத்த வழக்கு விசாரணைக்குள் செய்து தர வேண்டும். இல்லாவிட்டால் உச்சநீதிமன்ற நீதிபதிகளான நாங்கள் தர்ணாவில் ஈடுபடுவோம் என்று அதிகாரிகளுக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் வார்னிங் கொடுத்தனர்.

டெல்லி உயர்நீதிமன்றம் மற்றும் அதனை சுற்றிய இடங்களில் சாலை, நடபைாதைகள் அடிப்படை வசதிகள் சரியில்லை என்பது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்று விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த வழக்கில் அவ்வப்போது ஒவ்வொரு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வருகின்றன.

supreme court footpath

கடந்த செப்டம்பர் 15ம் தேதி வழக்கை விசாரித்தஉச்சநீதிமன்றம் சென்னை உயர்நீதிமன்றம் அருகே வேகத்தடைகள், ரம்பள் ஸ்டைப்ஸ் அமைக்க உத்தரவிட்டது. பிறகு அக்டோபர் 3ம் தேதி டெல்லி உயர்நீதிமன்றம் மற்றும் மதுரா ரோட்டில் உள்ள தேசிய உயிரில் பூங்கா அருகே பாதசாரிகள் நடந்து செல்வதற்கான கிராஸிங் ஏற்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.

இதையடுத்து இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் ஜேபி பர்திவாலா, கேவி வினோத் சந்திரன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் விக்ரம்ஜித் பானர்ஜி ஆஜரானார். ''சாலைகளில் என்னென் தேவைகள் வேண்டும் என்பது பற்றி ஆராய மத்திய அரசு குழு அமைத்துள்ளது'' என்றார்.

அப்போது டெல்லி உயர்நீதிமன்றத்தின் அருகே பாதசாரிகளுக்கு உரிய அடிப்படை வசதிகளை செய்து கொடுக்காததை சுட்டிக்காட்டி கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினர். இதுதொடர்பாக நீதிபதிகள், ''டெல்லியில் மக்களுக்கான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வெறும் குழு அமைத்தால் மட்டும் போதாது. களத்தில் உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். நடைபாதை வசதி என்பது ஒவ்வொருவருக்கும் அரசியலமைப்பின் கீழ் கிடைக்க வேண்டிய அடிப்படை உரிமை. மோட்டார் வாகனங்களில் செல்வோரை விட பாதசாரிகளின் உரிமைகள் முதன்மையானவையாக இருக்க வேண்டும்.

அடுத்த வழக்கு விசாரணைக்குள் டெல்லி உயர்நீதிமன்றத்தின் அருகே நடைபாதை மற்றும் பாதசாரிகள் சாலைகளைகடக்க தேவையான வசதிகளை செய்து தர வேண்டும். இல்லாவிட்டால் நாங்கள் இருவரும் டெல்லி உயர்நீதிமன்றத்தின் நுழைவு வாயிலில் அமர்ந்து போராட்டம் நடத்துவோம். பணி முடியும் வரை அங்கிருந்து செல்லமாட்டோம். இது உறுதி. இந்த வேளையில் உங்களையும் வீட்டிற்கு விடமாட்டோம். இதில் நடவடிக்கை எடுக்காவிட்டால் டெல்லி ரசின் தலைமை செயலாளருக்கு சம்மன் அனுப்பி ஆஜராகும்படி கூற வேண்டியிருக்கும் '' என்று வார்னிங் செய்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+