இந்தியாவில் சிறார்கள் சோஷியல் மீடியாவை பயன்படுத்த தடை கிடையாதா? உச்சநீதிமன்றம் முக்கிய தீர்ப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சிறார்களை சோஷியல் மீடியாவை விட்டு தள்ளி வைக்க வேண்டும் என்றும், இன்டர்நெட் அக்சஸ் கூட கொடுக்க கூடாது என்றும் பலரும் பேசி வரும் நிலையில், இது தொடர்பாக உச்சநீதிமன்றம் மிக முக்கியமான தீர்ப்பை கொடுத்திருக்கிறது.

அதாவது இன்டர்நெட் என்பது சிறார்கள் உட்பட அனைவருக்கும் அடிப்படையானது. இது அடிப்படை உரிமை் என்று உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது.

Internet Access

இணைய வழி சிறார் பாலியல் சுரண்டல் தொடர்பான வழக்கு ஒன்று இன்று நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா மற்றும் கே.வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது, "சோஷியல் மீடியா நிறுவனங்கள் மற்றும் ஆன்லைன் இணைய சேவை வழங்கும் வெப்சைட்டிலிருந்து சிறுவர் பாலியல் சுரண்டல் சார்ந்த ஆபாச குறுந்தகவல்கள் மற்றும் காட்சிகளை தடுத்து அகற்றுவதற்கான வழிமுறைகளை கடுமையாக்குவதற்காக நாங்கள் தீர்ப்பை கொடுக்கிறோம்.

குழந்தைகளின் பாதுகாப்புக்காக அவர்களை இணையத்திலிருந்தும் சோஷியல் மீடியாக்களிலிருந்தும் முற்றிலும் தள்ளி வைக்க வேண்டுமா? என்கிற கேள்வி எழுகிறது. இன்டர்நெட் என்பது அறிவு மற்றும் கற்றலின் தளம் என்பதால் அதை முற்றிலும் தடை செய்யக்கூடாது. மாறாக பாதுகாப்பு நடவடிக்கைகள், மோசமான கன்டென்ட்கள் மீதும், அதை உருவாக்கும் நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமே தவிர.. குழந்தைகளின் சுதந்திரத்தை பறிக்கும் வகையில் அமையக்கூடாது.

இந்திய அரசியலமைப்பின் பிரிவு 21 மற்றும் பிரிவு 19(1)(a) ஆகியவற்றின் கீழ், இன்டர்நெட்டை அணுகுவதும் பயன்படுத்துவதும் ஒவ்வொரு தனிமனிதனின் அடிப்படை உரிமை.

பெரியவர்களை போலவே குழந்தைகளுக்கும் இந்த உரிமை சமமாக பொருந்தும். குழந்தைகளுக்கு இன்டெர்நெட்டை பயன்படுத்தும் உரிமையை முற்றிலும் மறுப்பது.. ஒரு குறிப்பிட்ட வயதுக்கு கீழுள்ள குழந்தைகளுக்கு பாதுகாக்கப்பட வேண்டிய மனசாட்சியோ அல்லது வெளிப்படுத்த வேண்டிய கருத்து சுதந்திரமோ இல்லை என்று கூறுவதை போன்ற ஒரு அபத்தமான செயலாகும்.

ஒவ்வொரு குழந்தையின் பாதுகாப்பும், அதன் சுதந்திரமும் ஒன்றோடு ஒன்று முரண்பட்டது கிடையாது. அவர்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்குவதற்காக அவர்களின் சுதந்திரத்தை பறிக்க கூடாது. நமது குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் சுதந்திரம் ஆகிய இரண்டையுமே பெற தகுதியானவர்கள்" என்று தீர்ப்பளித்துள்ளனர்.

ஆஸ்திரேலியா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் சிறார்கள் சோஷியல் மீடியாவை முழுமையாக பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இப்படி இருக்கையில் இந்தியாவிலும் இதேபோன்ற தடையை போட வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்திருந்தன. இப்படி இருக்கையில்.. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு விவாதங்களை கிளப்பியிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+