அட்ராசக்க.. வாரணாசியில் பாஜக போட்ட பக்கா ப்ளான்! ஆனாலும் சொதப்பிருச்சே.. கல்லு மாதிரி நிற்கும் ஆறு!
லக்னோ: 18வது மக்களவைத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி வாரணாசி தொகுதியில் மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பலரது வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் தற்போது களத்தில் பிரதமர் மோடி உள்ளிட்ட ஏழு பேர் மட்டுமே இருக்கின்றனர்.
நாட்டின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான லோக்சபா தேர்தல் 2024 நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இதுவரை நான்கு கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு பெற்றிருக்கும் நிலையில் இன்னும் மூன்று கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

ஜூன் மாதம் ஒன்றாம் தேதி ஏழாவது மற்றும் இறுதி கட்ட வாக்குப்பதிவும் ஜூன் நான்காம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது இதையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்..
வாரணாசியில் மோடி: பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இறுதி கட்ட தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி களம் காண்கிறார். குஜராத்தை சொந்த மாநிலமாகக் கொண்ட பிரதமர் நரேந்திர மோடி தற்போது உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார். வாரணாசி தொகுதியில் ஏழாவது மற்றும் இறுதி கட்ட தேர்தல் ஜூன் 1ஆம் தேதி நடக்க இருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடும் தொகுதி என்பதால் தேசிய அளவில் வாரணாசி தொகுதி முக்கியத்துவம் பெற்றதாக இருக்கிறது.
வேட்புமனு தாக்கல்: இந்த நிலையில் நேற்று வாரணாசி தொகுதியில் மூன்றாவது முறையாக போட்டியிட பிரதமர் நரேந்திர மோடி வேட்பு மனு தாக்கல் செய்தார். அவருடன் உபி முதல்வர் யோகி ஆதித்ய நாத், உத்தர பிரதேச மாநில பாஜக தலைவர் சவுத்ரி பூபேந்திர சிங், தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, அன்புமணி, ஜி.கே.வாசன் உள்ளிட்ட NDA தலைவர்கள் வேட்பு மனு தாக்கலுக்கு உடன் சென்றிருந்தனர்.
போட்டி ஏன்?: வாரணாசி தொகுதியில் 2014 மற்றும் 2019 தேர்தல்களில் பிரதமர் நரேந்திர மோடி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. கடந்த முறை பிரதமர் நரேந்திர மோடி வாராணசி தொகுதியில் போட்டியிட்டு 4.8 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வென்றார். அதற்கு முன்பு நடந்த தேர்தலில் வாராணசி மற்றும் வதோதரா ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிட்டு வென்றார். அதில், வாராணசியில் 3.72 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வென்றிருந்தார். இதனால் தான் தற்போது 3வது முறையாக வாராணசியில் களமிறங்குகிறார் பிரதமர் மோடி.
வாரணாசி: ஜூன் ஒன்றாம் தேதி வாரணாசி உள்ளிட்ட 57 தொகுதிகளுக்கான கடைசி கட்ட வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இந்த தொகுதிகளுக்கான வேட்பு மனுதாக்கல் மே 7ஆம் தேதி தொடங்கி 14ஆம் தேதி வரை நடைபெற்றது. இறுதி நாளான மே 14ஆம் தேதி தான் கூட்டணி கட்சி தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஊர்வலமாக சென்று வேட்பு மனு தாக்கல் செய்தார். வாரணாசி தொகுதியில் போட்டியிட மொத்தம் 55 பேர் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டன.
அவற்றை சரி பார்க்கும் பணி மே 15ஆம் தேதி நடைபெற்ற நிலையில் 38 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. குறிப்பாக அரசியல்வாதிகளை போல் மிமிக்ரி செய்து பிரபலமான ஷியாம் ரங்கீலா உள்ளிட்டோரி மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. திட்டமிட்டு ஷாம் ரங்கீலா உள்ளிட்டோரின் நிராகரிக்கப்பட்டதாக புகார் கூறப்படுகிறதும்
வேட்புமனு நிராகரிப்பு: இதேபோல தங்களை வாரணாசிக்குச் செல்ல விடாமல் திட்டமிட்டு ரயில்வே கோளாறு எனக் கூறி வேட்பு மனு தாக்கல் செய்யவிடவில்லை என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த அய்யாக்கண்ணு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்ததும் இந்த பிரச்சனையில் தான். இந்த நிலையில் தற்போது 55 பேரில் 38 மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் மீதமுள்ள ஏழு பேரின் 16 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.
வாபாஸ்: தற்போதைய சூழலில் ராஷ்டிரிய ஜமாத்வாடி ஜங்ராந்தி வேட்பாளர் பரஸ் நாத் கேசரி வாபஸ்
பெற்று இருக்கிறார். இதை அடுத்து பிரதமர் நரேந்திர மோடி உட்பட ஏழு பேர் களத்தில் உள்ளனர். அதில் காங்கிரஸ் மாநில தலைவர் அஜய், பகுஷன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த அதர் ஜமால் லாரி, யுக துளசி கட்சியின் கொல்சட்டி சிவகுமார், அப்னா தளத்தின் கதன் பிரகாஷ், சுயேட்சை வேட்பாளர்கள் சஞ்சய் குமார் திவாரி, தினேஷ் குமார் யாதவ் உள்ளிட்டோர் களத்தில் இருக்கின்றனர்.
பாஜக திட்டம்: நான்காம் கட்ட தேர்தலில் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்படும் என கணிக்கப்பட்ட நிலையில் சூரத்தை போல் பிரதமர் நரேந்திர மோடி எதிர்த்து அனைத்து வேட்பாளர்களையும் வாபஸ் பெற வைக்க பாஜக திட்டமிட்டு இருந்தது. ஆனாலும் ஆறு பேர் போட்டியிடுவதில் உறுதியாக இருப்பதால் பாஜகவின் திட்டம் தடிடுபடியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications